வேலன்:-ஸ்டார்ட் மெனுவை நகர்த்த


நமது கம்யூட்டரின் வலது மூலையில் தேமே என்று இருக்கும்
ஸ்டார்ட் பட்டனை பார்த்திருப்போம். அதற்கும் வேலை கொடுத்து
இங்கும் அங்கும் ஓட விட்டால் எப்படி இருக்கும். இந்த சின்ன
ப்ரோகிராம் அதற்கு உதவும். இது மிகவும் சின்னது. 120 கே.பி.தான்.
இதை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

உங்களுக்கு zip பைல் டவுண்லோடு ஆகும். அதை வேண்டிய
டிரைவில் டவுண்லோடு செய்யவும்.அதை ஓப்பன் செய்யவும்.
உங்களுக்கு கீழ்கண்டவாறு ஓப்பன் ஆகும்.

உங்களுக்கு மேலே உள்ள இந்த விண்டோ ஓப்பன் ஆகும். இதில் இரண்டு
சிலைட் இருப்பதை கவனியுங்கள். Speed Slider -ஐ மேல்புறம்
நகர்த்துங்கள். அதைப்போல் Steps ஸ்லைடரையும் மேல்புறம்
கொண்டு வாருங்கள். இப்போது பாருங்கள். ஒரு திரைப்படத்தில்
பெண்ணின் அப்பா பெண்னை வா மா மின்னல்...என்பார்.
பெண் மின்னலாக வந்து செல்வார். உங்கள் ஸ்டார்ட் மெனுவும்
மின்னலாக வந்த செல்வதை காண்பீர்கள்.நீங்கள் Speed - ஐயும்
Steps-ஐயும் வேண்டிய பாயிண்ட்டில் வைக்க உங்கள் ஸ்டார்
மெனுவானது அதற்கு ஏற்றார்போல் மாறுவதை கவனியுங்கள்.

கீழே உள்ள படத்தில் நான் ஸ்டார்ட் மெனுவை இடப்புறம்
வைத்துள்ளதை கவனியுங்கள்.

நீங்கள் start மெனு கிளிக் செய்ய அது விரிவடைவதைக்
கீழே உள்ள விண்டொவில் காணுங்கள்.


இந்த படத்தில் பாருங்கள். Start மெனுவை நான் நடுவில்
வைத்துள்ளேன்.



இப்போது இதை Reset செய்துகொள்ளலாம். வேண்டாம் என்றால்
Stop செய்யலாம்.

பயன்படுத்திப் பாருங்கள். பிடித்திருந்தால் ஓட்டுப்போடுங்கள்.

வாழ்க வளமுடன்:,

வேலன்.

Start மெனுவை இதுவரை ஓடவிட்டவர்கள்:-

web counter
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

4 comments:

Muthu Kumar N said...

வேலன் சார்,

நல்லா ஓடுது ஸ்டார்ட் நல்ல தகவல்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
வேலன் சார்,

நல்லா ஓடுது ஸ்டார்ட் நல்ல தகவல்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்.
என்றும் அன்புடன்,
வேலன்.

Malu said...

Super sir. I can download the zip file and cannot extract the exe file. System says that it is affected by W32.Chir.B@mm virus and cleaning is failed. tell me the suggestion to use it.

TAMIL said...

வணக்கம் வேலன் ஐயா! நல்ல பதிவுகள் எழுதுகிறிர்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

போட்டோஷாப் சாப்ட்வேர் இலவசமாக தரவிறக்க உங்களுக்கு தெரிந்த எதாவது இணையத்தளம் இருந்தால் தரமுடியுமா ?

Related Posts Plugin for WordPress, Blogger...