நாம் இதற்கு முன் D.V.D. Cutter உபயோகிப்பது பற்றி பார்த்தோம்.
அந்த பதிவைஇதுவரை பார்க்காதவர்கள் இங்கு கிளிக்
செய்யவும். இப்போது MP-3 Cutter பற்றி பார்ப்போம்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
செய்யவும்.இதை கணிணியில் இன்ஸ்டால் செய்யவும்.
இந்த சாப்ட்வேரை ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன்ஆகும்.
இதில் உள்ள ஓப்பன் கிளிக் செய்து நீங்கள் கட்செய்யவிரும்பும்
பாடலை தேர்ந்தேடுங்கள்.பாடலை பிளே செய்யுங்கள்.
பாடல் ஓட ஆரம்பிக்கும்.இதில் உள்ள ஸ்லைடரும் நகர
ஆரம்பிக்கும். படத்தை பாருங்கள்.
நீங்கள் விரும்பும் பாடல்வரி வந்ததும் அதில் உள்ள SetStart
கிளிக்செய்யுங்கள்.இப்போது ஸ்லைடர் ஆனது நீலக்கலருடன்
நகர ஆரம்பிக்கும்.
உங்களுக்கு தேவையான வரிகள் ஒலித்து முடித்ததும் இதில்
உள்ள Set End கிளிக் செய்யுங்கள்.
நீங்கள் எவ்வளவு நீளத்திற்கு பாடலை பதிவு செய்துள்ளீர்களோ
அதன்விவரமும் பாடல் ஒலிக்கும் நேரமும் காண்பிக்கும்.
இதில் உள்ள Play Selection கிளிக் செய்து ஒரு முறை கட் செய்த
பாடலைகேட்டுப்பாருங்கள். மாற்றங்கள் ஏதும் இருப்பின் செய்துவிட்டு
மீண்டும் ஒரு முறை பாடலை கேட்டுப்பாருங்கள.
இறுதியாக பாடலை Save Selection கிளிக்செய்து உங்கள்
விருப்பமான டிரைவில் சேமிக்கவும்.
உங்களுக்கு மேற்கண்ட விண்டோ தோன்றும். ஓ.கே.கொடுங்கள்.
அவ்வளவு தான். இந்த பாடலை நீங்கள் உங்கள் விருப்பபடி
செல்போனில் ரிங் டோனாகவோ - மெசேஜ் டோனாகவோ
வைத்துக்கொள்ளலாம்.
பதிவை பாருங்கள். பிடித்திருந்தால் மறக்காமல்
ஒட்டுப்போடுங்கள்.
வாழ்க வளமுடன்:,
வேலன்.
14 comments:
நல்ல படைப்பு திரு.வேலன்....பகிர்ந்தமைக்கு நன்றி!!! தங்களின் மின்னஞ்சல் முகவரி கிடைக்குமா?? இடுகைகள் பற்றிய சில சந்தேகங்கள் எனக்கு உள்ளன.
இது குறித்து தங்களின் ஆலோசனை வேண்டியே கேக்கிறேன். நன்றி
நல்ல விடயம் சார். பகிர்வுக்கு நன்றி!
சார் .. வெவ்வேறு பாடல்கள்களின் கிளிப்களை வேண்டிய இடத்தில ஒன்று சேர்த்து நாமாகவே ஒரு ரி-மிக்ஸ் தயார் பண்ற மாதிரி ஒரு சாப்ட்வேர் ஐ தேடி கொண்டிருக்கிறேன்.
அருமையான படைப்பு. தொடர்ந்து இதுபோன்ற பதிவிடுங்கள்.
photoshop தொடர் நிறைவுற்றதும் இலாஸ்டிரேட்டர் தொடரை வழங்க முயற்சிக்கவும்.
அன்புடன்
கொல்வின்
இலங்கை
Very useful info as usual. Thank you.
ரொம்ப நன்றிங்க தல :-))
நித்தியானந்தம் கூறியது...
நல்ல படைப்பு திரு.வேலன்....பகிர்ந்தமைக்கு நன்றி!!! தங்களின் மின்னஞ்சல் முகவரி கிடைக்குமா?? இடுகைகள் பற்றிய சில சந்தேகங்கள் எனக்கு உள்ளன.
இது குறித்து தங்களின் ஆலோசனை வேண்டியே கேக்கிறேன். நன்றி//
வருகைக்கும்கருத்துக்கும் நன்றி...
தங்களுடைய இ-மெயில் முகவரி தரவும். நான் தங்களை தொடர்பு கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
யூர்கன் க்ருகியர் கூறியது...
நல்ல விடயம் சார். பகிர்வுக்கு நன்றி!
சார் .. வெவ்வேறு பாடல்கள்களின் கிளிப்களை வேண்டிய இடத்தில ஒன்று சேர்த்து நாமாகவே ஒரு ரி-மிக்ஸ் தயார் பண்ற மாதிரி ஒரு சாப்ட்வேர் ஐ தேடி கொண்டிருக்கிறேன்//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
நீங்கள் கேட்ட சாப்ட்வேர் என்னிடம் உள்ளது. விரைவில் பதிவிடுகின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
colvin கூறியது...
அருமையான படைப்பு. தொடர்ந்து இதுபோன்ற பதிவிடுங்கள்.
photoshop தொடர் நிறைவுற்றதும் இலாஸ்டிரேட்டர் தொடரை வழங்க முயற்சிக்கவும்.
அன்புடன்
கொல்வின்
இலங்கை//
கருத்துக்கு நன்றி நண்பரே..போட்டோஷாப் பே முழுவதும் பதிவிட்டால் 200 பதிவுகளுக்கு செல்லுமே...
முயற்சிக்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
Malu கூறியது...
Very useful info as usual. Thank you.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாலு அவர்களே.்..
வாழ்க வளமுடன்,
வேலன்.
கார்த்திக் கூறியது...
ரொம்ப நன்றிங்க தல :-)//
நன்றி கார்த்திக் அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
வேலன் அவர்களே என் போன்ற இசைப்பிரியர்களுக்கு பயனுள்ள பதிவு சில சந்தேகங்கள் உள்ளன கேட்கலாமா?
வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்.
aarveeyem@gmail.com
venkat கூறியது...
வேலன் அவர்களே என் போன்ற இசைப்பிரியர்களுக்கு பயனுள்ள பதிவு சில சந்தேகங்கள் உள்ளன கேட்கலாமா?
வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்.
aarveeyem@gmail.comஃஃ
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...சந்தேகங்கள் எதைப்பற்றி என கூறவில்லையே நண்பரே்...
வாழ்க வளமுடன்,
வேலன்.
மென்பொருளுக்கு நன்றி
கிரி கூறியது...
மென்பொருளுக்கு நன்றிஃஃ
நன்றி கிரி...
வாழ்க வளமுடன்,
வேலன்.
Post a Comment