வேலன்:-போட்டோஷாப் பாடம்-32Slice Tool

போட்டாஷாப்பில் சென்ற பாடத்தில் Magic Wand Tool
பற்றி பார்த்தோம். இதற்கு அடுத்துள்ளது
Crop Tool .,இந்த டூல் பற்றி ஏற்கனவே 23-09-09
பதிவிட்டுள்ளேன். அந்த பதிவை பார்க்காதவர்கள்
இங்கு சென்று பார்த்துக்கொள்ளவும்.இன்று
டூல்பாரில் ஆறாவதாக உள்ள ஸ்லைஸ் டூல்
Slice Tool  பற்றி பார்க்கலாம்.
நம்மிடம் உள்ள புகைப்படத்தை வேண்டிய
அளவிற்கு அதை ஸ்லைஸ் செய்யலாம்.
அடுத்து என்ன செய்யலாம். ஒரு படத்தில்
மூன்று நபர்கள் இருக்கின்றார்கள்.
அவர்களை தனிதனியே ஸ்லைஸ் டூல்
கொண்டு கட் செய்தபின் ஒவ்வோரு
வருக்கும் ஒவ்வொரு URL முகவரி தரலாம்.
அவர்களை நாம் கர்சரால் கிளிக்செய்யும்
சமயம் அந்த URL முகவரிக்கு நேரே
செல்லலாம்.கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.
இதில் புதுவை நித்தியானந்தம், அதேகண்கள்
டவுசர் பாண்டி,வேலன் என்று மூன்று பேருடைய
புகைப்படங்கள் உள்ளது.
இப்போது முதலில் புதுவை நித்தியானந்தம் அவர்களை
ஸ்லைஸ் டூலால் கட் செய்து உள்ளேன்.ஸ்லைஸ் பண்ணிய 
பகுதியின் மூலையில் நீலகலரில்01 என்று வருவதை
 கவனிக்கவும். இப்போதுகட் செய்த பகுதியின் நடுவில்
 வைத்து கர்சரால் ரைட்கிளிக் செய்யுங்கள். கீழே உள்ள 
புகைப்டத்தைபாருங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ
ஓப்பன் ஆகும்
இதில் உள்ள Edit Slice Options கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள URL என்கின்ற இடத்தில் நீங்கள் விரும்பும்
தளத்தின் முகவரி தரவும். நான் புதுவை .காம் என்கின்ற
முகவரி கொடுத்துள்ளேன்.
இதேப்போலவே அதேகண்கள் டவுசர் பாண்டி படத்தையும்
எனது படத்தையும் ஸ்லைஸ் டூலால் கட் செய்து உள்ளேன்.
முறையே எங்கள் இருவரது பதிவின் முகவரியையும்
கொடுத்துள்ளேன். கடைசியாக Save for Web கிளிக்
செய்யுங்கள்.கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அளவுகளில் ஏதேனும் மாற்றம் செய்ய விரும்பினால்
செய்துபின சேவ் செய்துவிடவும். சேவ் செய்யும் சமயம்
இந்த பைலை HTML and Images ஆக சேமிக்கவும். சேவ் செய்தபின்
வந்த படம். இதில் மூன்று பேருடைய இணையதள
வலைப்பக்கம் இணைத்துள்ளேன். அந்த அந்த நபர்களை
நீங்கள் கிளிக் செய்வதன மூலம் அவர்களின் வலைப்
பக்கத்திற்கு நீங்கள் செல்லலாம். கீழேஉள்ள புகைப்படங்களை
கிளிக் செய்து பாருங்கள்.

Nitianandame from Pudhuvai.com Tausar Pandi, Athekangal.blogspot.com Velan, Velang.blogspot.comசரி இதனால் என்ன நன்மை என்கின்றீர்களா...
மருத்துவம் - அறிவியல்-தொழில்நுட்பம்-இயந்திரம்
எந்த ஒரு புகைப்படத்திலும் ஒவ்வோரு பார்ட்டையும்
நாம் இதன்மூலம் பிரித்து அந்த பாகத்தை கிளிக்
செய்வதன் மூலம் அந்த தளத்திற்கு செல்லலாம்.
உதாரணத்திற்கு ஒரு மனிதனின் உடற்கூறை 
ஸ்லைஸ் செய்து அவரின் தலைமட்டும் கிளிக்
செய்தால் தலை பற்றிய இணையதளத்திற்கு
செல்லலாம். கை யை கிளிக் செய்தால் கையை
பற்றி விளக்கும் இணையதளம் செல்லலாம்.
தேவையான இடத்திற்கு தேவையானதை
உபயோகித்துக்கொள்ளுங்கள். பதிவின் நீளம்
கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
நன்றி. திரு.மோகனகிருஷ்ணன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

JUST FOR JOLLY PHOTOS:-
அம்மா ...அங்க என்ன ஒருத்தன் போடா பன்னினு
சொல்லிட்டாம்மா...
இன்றைய PSD டிசைன்-43 க்காண புகைப்படம் கீழே:-
டிசைன் செய்த பின் வந்த படம் கீழே:-
இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.



பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

22 comments:

தினேஷ் said...

நல்ல தகவல் நண்பரே. மூன்று கில்லாடிகளா நீங்க.... :)

வேலன். said...

தினேஷ் கூறியது...
நல்ல தகவல் நண்பரே. மூன்று கில்லாடிகளா நீங்க.... :)

ஆமாமாம்...நாங்கள் எல்லாம் டெக்னிக்கல் பதிவர்கள் அல்லவா?
தங்கள் வருகைக்கும் கரு்த்துக்கும் நன்றி
நண்பரே்..

வாழ்க வளமுடன்,
வேலன்.

டவுசர் பாண்டி said...

இனாப்பா இது எம்போட்டாவ அமுக்குனா , எங்க ஊட்டுக்கு (பிளாக் ) போவுது !! சோக்கா கீதுபா !! இன்னா இன்னாமோ தில்லாலங்கடி வேல அல்லாம்
காட்டுது !! தூள் டக்கரு பா !!

ரமேஷ் said...

மிகவும் அருமை

THANGAMANI said...

நல்ல தகவல்.நன்றி.

Thomas Ruban said...

வழக்கம் போல மீண்டும் ஒரு மிகவும் பயனுள்ள பதிவு( பயனுள்ள தொகுப்பு) நன்றி சார்...//

pavbalane said...

நல்ல பதிவு

இதுவரை இந்த ஸ்லைஸ் டூல்எ
எதற்கு என்று மிகவும் குழம்பி இருந்தேன்.

மிக அருமையான எடுத்துகாட்டு



http://pallsuvai.blogspot.com

வேலன். said...

டவுசர் பாண்டி கூறியது...
இனாப்பா இது எம்போட்டாவ அமுக்குனா , எங்க ஊட்டுக்கு (பிளாக் ) போவுது !! சோக்கா கீதுபா !! இன்னா இன்னாமோ தில்லாலங்கடி வேல அல்லாம்
காட்டுது !! தூள் டக்கரு பா !!

நம்ம வீட்டுபக்கம் வந்ததுக்கு ரோம்ப டாங்க்ஸ்ப்பா....

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ரமேஷ் கூறியது...
மிகவும் அருமை


நன்றி ரமேஷ் அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

THANGAMANI கூறியது...
நல்ல தகவல்.நன்றி.


நன்றி தங்கமணி.....

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Thomas Ruban கூறியது...
வழக்கம் போல மீண்டும் ஒரு மிகவும் பயனுள்ள பதிவு( பயனுள்ள தொகுப்பு) நன்றி சார்..


நன்றி தாமஸ்ரூபன் அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ஆனந்தபாலன் கூறியது...
நல்ல பதிவு

இதுவரை இந்த ஸ்லைஸ் டூல்எ
எதற்கு என்று மிகவும் குழம்பி இருந்தேன்.

மிக அருமையான எடுத்துகாட்டு

நன்றி ஆனந்தபாலன் அவர்களே....
நீங்கள் போட்டோ ஸ்டுடியோ வைத்திருக்கும் யாரையும் கேட்டுப்பாருங்கள். இந்த டூல்பற்றி
தெரியாது என்றுதான சொல்வார்கள்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

Anonymous said...

செய்து பார்த்தேனுங்க அருமையாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றிங்க.

அன்புடன் மஜீத்.

வேலன். said...

பெயரில்லா கூறியது...
செய்து பார்த்தேனுங்க அருமையாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றிங்க.

அன்புடன் மஜீத்//

நன்றி மஜீத் அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

Muthu Kumar N said...

Dear Velan Sir,

Good Info, Thanks for the Informations.

Well done, Keep it up.

Best wishes
Muthu Kumar.N

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
Dear Velan Sir,

Good Info, Thanks for the Informations.

Well done, Keep it up.

Best wishes
Muthu Kumar.Nஃஃ

தங்கள் வருகைக்கு நன்றி சார்....
தங்கள் வருகையை எதிர்பார்த்து

வாழ்க வளமுடன்,
என்றும் அன்புடன்,
வேலன்.

sathishsangkavi.blogspot.com said...

நல்ல தகவல்...........

ரொம்ப நாளா இந்த ஸ்லைஸ் டூல் கன்ப்யூஸ் இருந்தது இதைப்படித்த உடன்
புரிந்துது.. நன்றி நண்பரே.........

வேலன். said...

Sangkavi கூறியது...
நல்ல தகவல்...........

ரொம்ப நாளா இந்த ஸ்லைஸ் டூல் கன்ப்யூஸ் இருந்தது இதைப்படித்த உடன்
புரிந்துது.. நன்றி நண்பரே.....//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

இதயம் பேசுகிறது-ஸ்ரீதர் said...

திரு வேலன் அவர்களுக்கு,
போட்டோஷாப் சம்பந்தமாக நீங்கள் இடும் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
போட்டோஷாப்பில் நாம் எடிட் செய்யும் போட்டோவின் மீது தமிழில் டைப் செய்வது எப்படி.நான் NHM ரைட்டர் உபயோகிக்கிறேன்.

வேலன். said...

இதயம் பேசுகிறது-ஸ்ரீதர் கூறியது...
திரு வேலன் அவர்களுக்கு,
போட்டோஷாப் சம்பந்தமாக நீங்கள் இடும் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
போட்டோஷாப்பில் நாம் எடிட் செய்யும் போட்டோவின் மீது தமிழில் டைப் செய்வது எப்படி.நான் NHM ரைட்டர் உபயோகிக்கிறேன்.
ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதுபற்றி பதிவிட்டுள்ளேன். விரைவில் டூல்கள் வரிசையில் வரும் சமயம் பதிவிடுகின்றேன் நண்பரே...
வருகைக்கும் கருத்துக்கும் ந்ன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

ஆ.ஞானசேகரன் said...

அருமை நன்றி நண்பா...

Sri said...

போட்டோஷாப் பாடம் மிகவும் பயன் உள்ளதாக உள்ளது.
உங்கள் பதிவு அனைத்தும் இலவசமாக இருக்கம் போது போட்டோஷாப் 1 முதல் 50 வரை உள்ள pdf link மட்டும் இலவசமாக இல்லை. நீங்கள் உங்கள் போட்டோஷாப் பதிவு அனைத்தும் இணைத்து ஒரு இலவசமாக ஒரு downlaod link தருமாறு கேட்டு கொள்கிறேன். அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும் . உங்கள் முகவரிக்கு புதியவன்

Related Posts Plugin for WordPress, Blogger...