

போட்டோஷாப்பில் இன்று கிராப் டூல் பற்றி பார்க்கலாம்.














பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
நம்மிடம் உள்ள படங்களில் நிறைய பேர் இருப்பார்கள். அதில்
நமக்கு வேண்டியவர் மட்டும் அல்லது வேண்டிய பாகம் மட்டும்
தேவையான அளவில் தேவையான ரெசுலேஷனில் வெட்டி எடுக்க
இந்த டூல் உபயோகப்படும்.மேலும் இந்த டூல் மூலம் படத்தை
திருப்பவும் முடியும்.ஒரு படத்தில் தேவையான உருவத்தை
-இடத்தை மட்டும் வைத்துக்கொண்டு மற்ற பகுதிகளை நீக்குவதே
கிராப்பிங் எனப்படும்.இது டூல் பாரில் 5 வது டூல் ஆகும்.
கீழே உள்ள படத்தினை பாருங்கள்.

இரண்டு கோணங்கள் ஓன்றின் மேல் ஓன்று வைத்ததுபோல்
சாக்லெட் போல் உள்ளது இந்த டூல். நீங்கள் கட் செய்ய
விரும்பும் படத்தினை ஓப்பன் செய்து கொள்ளுங்கள்.
இதில் நின்றுகொண்டு இருக்கும் பையனை மட்டும் நாம் தேர்வு
செய்ய வேண்டும். நீங்கள் கிராப் டூல் கிளிக் செய்யுங்கள்.
இப்போது மேல் புறம் உங்களுக்கு இந்தOptions Bar விண்டோ
ஓப்பன் ஆகும்.

இதில் உள்ள width, Height, Resolution , பூர்த்தி செய்யுங்கள். இப்போது
படத்தின் அருகே கர்சரை கொண்டு வாருங்கள். ஏதாவது ஒரு
இடத்தில் ஆரம்பித்து கர்சரை மெல்ல இழுங்கள். உங்களுக்கு
நீங்கள் தேர்வு செய்த அளவுக்கு புள்ளிகளுடன் செவ்வகம் ஒன்று
உருவாகும்.இப்போது நீங்கள் தேர்வு செய்த படம்
வெளிச்சமுடனும் இதர பகுதிகள் கருப்பு நிறமுடனும் மாறிவிடும்.
இது கிராப் செய்த இடம் நமக்கு தெளிவாக காண்பிக்கவே இந்த
வசதி நமக்கு செய்யப்பட்டுள்ளது. கீழே உள்ள படத்தை பாருங்கள்.

மவுஸை நீங்கள் வரைந்துள்ள பெட்டியின் நான்கு
மூலையிலும்கொண்டு செல்லுங்கள். அவ்வாறு கொண்டு
செல்லும்போது உங்கள் மவுஸ் கர்சரானது இரு முனை
கொண்ட அம்புகுறியாக மாறிவிடுவதை காணுங்கள்.
இப்போது மவுஸ் பட்டனை கிளிக்செய்து கொண்டே
மவுஸை நகர்த்துங்கள். நீங்கள் தேர்வு செய்த
கட்டத்திற்கு உள் நகர்த்தினால் கட்டம் சிறியதாகவும்
வெளியே நகர்த்தினால் கட்டம் பெரியதாகவும் மாறுவதை
காணலாம்.அதைப்போலவே கர்சரை நீங்கள் பெட்டியின்
நடுவில் கொண்டு சென்றால் கர்சர் கருப்பு நிறமாக மாறுவதை
காணலாம். கர்சரை நகர்த்துவதன் மூலம் படத்தில் நீங்கள்
தேர்வுசெய்த பகுதியும் நகருவதையும் காணலாம்.
இப்போது மூலையில் உள்ள சதுரத்தை இழுப்பதன் மூலம் உங்கள்
படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். பின்னர் Enter தட்டுங்கள்.
கீழே உள்ள படத்தை பாருங்கள்.

இதைப்போலவே நீங்கள் தேர்வு செய்து கொண்டபின் கர்சரை
கட்டத்திற்கு வெளியில் கொண்டு செல்லுங்கள். உங்கள் கர்சரானது
இரு முனைகள் கொண்ட வளைந்த அம்பாக மாறிவிடும்.
இப்போது மவுஸை கிளிக் செய்து கொண்டு கர்சரை நகர்த்த
படம் மாறுவதை -சுழல்வதை காணலாம்.அந்த முறையில்
கீழ்கண்ட படமும் தேர்வு செய்துள்ளேன்.

கட் செய்த படம் கீழே .


மேலும் சில படங்கள்.

கட் செய்த படம் கீழே:-

இணைய நண்பர் ஸ்ரேயா ரசிகர். அவர் ஸ்ரேயா படம் போட்டு
பாடம் நடத்த மாட்டீர்களா என கேட்டார். அவருக்காக படம்
இது.

இதில் முகம் மட்டும் தேர்வு செய்து கிராப் செய்துள்ளேன்.

தேர்வு செய்தபின் வந்துள்ள படம் கீழே:-

கிராப் டூலில் இன்னும் பிற வசதிகள் உள்ளது. அதனை மேற்கொண்டு
பாடம் படிக்கும் போது பார்க்கலாம். பதிவின் நீளம் கருதி பாடத்தை
இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
முதலில் உள்ளசெல்போன் பேசும் பெண்ணின் படம் இணைய நண்பர்
அனுப்பியது.பதிவுகளை பாருங்கள். பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டுப்
போடுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
போட்டோஷாப் பாடம் இதுவரை பார்த்தவர்கள்:-
13 comments:
மிக்க நன்றி
JOE2005 கூறியது...
மிக்க நன்றி//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி JOE2005 அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
i download home software and install my sytem it can be crashed. Kindly check that 3DHome software. i Lost all my files. before recommed kindly onece again for that site and software
Interesting. Thank you.
பயனுள்ள குறிப்பு திரு.வேலன் போட்டோஷாப்பில் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்....
பயனுள்ள தொகுப்பு சார்...
சதீஷ் குமார் கூறியது...
i download home software and install my sytem it can be crashed. Kindly check that 3DHome software. i Lost all my files. before recommed kindly onece again for that site and software//
தங்கள் தேவையை நிறைவேற்றுகின்றேன் நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
Malu கூறியது...
Interesting. Thank you.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..
வாழ்க வளமுடன்,
வேலன்.
நித்தியானந்தம் கூறியது...
பயனுள்ள குறிப்பு திரு.வேலன் போட்டோஷாப்பில் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்....
பயனுள்ள தொகுப்பு சார்...//
நன்றி நண்பர் நித்தியானந்தம் அவர்களே..
வருகைக்கும் கருத்துக்கும் ஒட்டுக்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
வர்ணனை ஆமாம் வர்ணனை என்று தான் சொல்வேன், பிரமாதமாக விளக்குகிறீர்கள். முன்னமே தெரிந்த செய்திதான் என்றாலும் எனக்கு இவைகளை உங்கள் தமிழில் படிக்கும் பொது புதியது போலவே உணர்கின்றேன்.
// இணைய நண்பர் ஸ்ரேயா ரசிகர். அவர் ஸ்ரேயா படம் போட்டு
பாடம் நடத்த மாட்டீர்களா என கேட்டார். அவருக்காக படம் இது //
இது ரொம்ப வும் ஓவர் சாமி மாப்பிள்ளை தான் 'வழியும் 'கேஸ் என்று நினைத்தால் .....................................
சரி ஓட்டும் போட்டுவிட்டேன். ஜூட். .
கக்கு - மாணிக்கம் கூறியது...
வர்ணனை ஆமாம் வர்ணனை என்று தான் சொல்வேன், பிரமாதமாக விளக்குகிறீர்கள். முன்னமே தெரிந்த செய்திதான் என்றாலும் எனக்கு இவைகளை உங்கள் தமிழில் படிக்கும் பொது புதியது போலவே உணர்கின்றேன்.
// இணைய நண்பர் ஸ்ரேயா ரசிகர். அவர் ஸ்ரேயா படம் போட்டு
பாடம் நடத்த மாட்டீர்களா என கேட்டார். அவருக்காக படம் இது //
இது ரொம்ப வும் ஓவர் சாமி மாப்பிள்ளை தான் 'வழியும் 'கேஸ் என்று நினைத்தால் .....................................
சரி ஓட்டும் போட்டுவிட்டேன். ஜூட்.//
வருகைக்கும் கருத்துக்கும் ஓட்டுப்போட்டமைக்கும் நன்றி சார்...
வாழ்க வளமுடன்,
வேலன்.
"தங்கள் தேவையை நிறைவேற்றுகின்றேன் நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்."
நன்றி
சதீஷ் குமார் கூறியது...
"தங்கள் தேவையை நிறைவேற்றுகின்றேன் நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்."
நன்றி//
நன்றி நண்பரே..
வாழ்க வளமுடன்,
வேலன்.
நண்பரே உங்கள் தளம் மிக அருமை. எனது தளம் பார்த்து கருத்துக் கூறவும்.
www.medicalkits.blogspot.com
Post a Comment