வேலன்:-அனைத்துவிதமான பார்மட் போட்டாக்களையும் திருத்தசில போட்டோக்கள் சில சாப்ட்வேர்களில்தான் ஓப்பன ஆகும். நம்மிடம் PSD பைல் இருக்குமானால் அது போட்டோஷாப் பில் தான் ஓப்பன :ஆகும். ஆனால் இந்த சாப்ட்வேரில் PSD உட்பட அனைத்து பார்மெட் படங்களும் ஓப்பன ஆகின்றது.2 எம்.பி்.க்கும் குறைவான இந்த சாப்ட் வேரை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.நீங்கள்கணிணியில் இன்ஸ்டால் செய்து ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
இதில் கீழ்புறம் பார்த்தீர்களேயானால் சின்ன சின்ன மெனுக்கள் வரிசையாக இருக்கும்.அதில் உள்ள 13 ஆவது மெனுவினை கிளிக் செய்து உங்கள் புகைப்படத்தை தேர்வு செய்யுங்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
அதிலிருந்து புகைப்படத்தை தேர்வு செய்யுங்கள். நீங்கள் தேர்வு செய்த புகைபடத்தின் போல்டரில் உள்ள அனைத்து படங்களையும் பார்க்க தம்ப்நெயில் வசதி உள்ளது. கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இந்த மெனு கிளிக் செய்ய உங்களுக்கு படம் கீழ்கண்டவாறு வரும்.
இதிலிருந்து தேவையான புகைப்படங்கள் தேர்வு செய்துகொள்ளலாம்.மேலும் படத்தை திருப்பும் வசதியும் உள்ளது. அதுபோல் அதை ரீ-டச்சிங் செய்யும் வசதி உள்ளது இதன் மற்றும் ஒரு சிறப்பு.
இதில் உள்ள ஒன்பதாவது மெனுவினை கிளிக் செய்ய உங்களுக்கு இடதுபுறம் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் முதலில் உள்ள செட்டிங்ஸ் டேப்பில் படத்தின் அளவு மாற்றுதல் - கண்ணாடி பிம்பம் கொண்டுவருதல் தேவையான அளவு வெட்டுதல் போன்ற டூல்கள் உள்ளது.இதற்கு அடுத்து உள்ள டேப்பில் படத்தின் ஓளி அளவினை மாற்றும் வசதி உள்ளது. கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதைப்போல் இதில் பில்டர் வசதி உள்ளது .இதை கிளிக்செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.படத்தில் வேண்டிய பில்டர் வசதி செய்து ப்ரிவியு பார்தது கொண்டு தேவைபட்டால் சேமிதது - பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்.
 சாதாரண படம் கீழே:-
பில்டர் எபெக்ட் கொடுத்தபின் வந்த புகைப்படம் கீழே:-
போட்டோக்களை பற்றிய பதிவுகள் கிணறு தோண்ட பூதம் வந்ததுபோல் வந்துகொண்டே இருக்கின்றது.தற்சமயம் பத்துக்கும் மேற்பட்ட சாப்ட்வேர்கள் போட்டோக்களை பற்றி இருக்கின்றது.அவைகளையும் இப்போழுதே போடுவதா - இல்லை சிறிது கால இடைவெளிவிட்டு போடுவதா என்று புரியவில்லை.பொறுப்பை உங்களிடமே விட்டுவிடுகின்றேன்.கருத்துரையில் வரும் உங்கள் கருத்துக்களை வைத்து போட்டோக்கள் பற்றிய பதிவினை தொடர்கின்றேன்
வாழ்க வளமுடன்
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
இப்போ பணிச்ச மாதிரி ஆக்ட் கொடுக்கின்றான...பெரியவனானதும் சண்டைக்கு வருவானோ..?
இன்றைய PSD டிசைன் கீழே:_
டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
நடிகைகள் படம்தான் போடனுமா என்ன..ஒரு மாறுதலுக்கு பாட்டி படம் போட்டுள்ளேன்.
இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

20 comments:

யூர்கன் க்ருகியர் said...

ok! திருத்திடலாம்

colvin said...

ஒரே அடியாக ஒரே பதிவுகள் குறித்து எழுதினால் சற்று போரடிக்கும். எனவே குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பதிவுகளை இடுங்கள்

பிரசன்னா said...

Thank you

S Maharajan said...

ஒரு பதிவு (1,3)இடைவெளி விட்டு போடுங்கள்.(எதுவுமே காத்திருந்து கிடைத்தால்தான் சார் நல்லா இருக்கும்)
நாங்களும் எதிர்பார்க்க வேண்டாமா?

sumathi said...

ஹாய் நண்பா,
எனக்கு இது என்னவோ சரியா வரலையே?
//இதில் கீழ்புறம் பார்த்தீர்களேயானால் சின்ன சின்ன மெனுக்கள் வரிசையாக இருக்கும்.அதில் உள்ள 13 ஆவது மெனுவினை ..// இது ல்லாம் வர மாட்டேங்குதேய்..?

afrine said...

வேலன் அண்ணா,

வழக்கம் போலவே இப்பதிவும் அருமை. இதை ஒருபக்கம் நிறுத்தி விட்டு போட்டோ ஷாப் பாடத்தை தொடருங்களேன். பாடத்திற்கு இடையிடையே இது மாதிரி பதிவுகளை கொடுத்தீர்களேயானால் மிகவும் எதிர்பார்ப்பாக இருக்கும்

நன்றி

ராஜ நடராஜன் said...

அடிக்கடி கண்ணுல படுறீங்க.பொறுமையா டேரா போட்டு மொத்தமாக படிக்கிறேன்.

Mrs.Menagasathia said...

thx u!!

karthik said...

supper.......

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் said...

colvin says ஒரே அடியாக ஒரே பதிவுகள் குறித்து எழுதினால் சற்று போரடிக்கும். எனவே குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பதிவுகளை இடுங்கள்

Dear Velan Sir,

I agree with colvin suggestion, it would be better have some delay. It will be more interesting, But anyway all your postings about photos very nice and useful.

Best Wishes
Muthu Kumar.N

♠புதுவை சிவா♠ said...

மிக உபயோகமான தகவல்

நன்றி வேலன் சார்

"நடிகைகள் படம்தான் போடனுமா என்ன..ஒரு மாறுதலுக்கு பாட்டி படம் போட்டுள்ளேன்"

உங்க நேர்மை எனக்கு பிடிச்சி இருக்கு !

:-)))

ஜெய்லானி said...

எப்படி போட்டாலும் நாங்க படிப்போம் தல.!!வாழ்த்துக்கள் .

Chitra said...

jooper lol! லொள்!

வேலன். said...

யூர்கன் க்ருகியர் கூறியது...
ok! திருத்திடலாம்//

தங்கள் வருகையால் இங்கு நல்ல மழை...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

colvin கூறியது...
ஒரே அடியாக ஒரே பதிவுகள் குறித்து எழுதினால் சற்று போரடிக்கும். எனவே குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பதிவுகளை இடுங்கள்//

அந்த சந்தேகம் எனக்கு வந்ததால்தான் பதிவில் அதுபற்றி குறிப்பிட்டேன்.தங்கள்்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்

சே.குமார் said...

இப்பதிவும் அருமை

DJ.RR.SIMBU.BBA-SINGAI said...

Dear Velan sir,

Superup.....

Thanks Bossssssssss........

pls one postinng Digital paner Designing software & how to design.....

THANKS.

DJ.RR.SIMBU.BBA-SINGAI said...

Dear velan sir,

pls send me the photo to DVD software key..

my Email id:

silambu_rvc@yahoo.com

Thanks boss..

Anonymous said...

Photo joint bathivugal botavum.

thalaivan said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Hello

you can register in our website http://www.thalaivan.com and post your articles

install our voting button and get more visitors

Visit our website for more information http://www.thalaivan.com

Related Posts Plugin for WordPress, Blogger...