
வேர்ட் டாக்குமெண்டை ரெடிசெய்துவிட்டோம். இப்போது ப்ரிண்ட் எடுப்பதுதான் பாக்கி. சரி அதற்கு முன்னர் பிரிண்ட் ப்ரிவியு பார்க்கலாம் என்று ப்ரிண்ட் ப்ரிவியு பார்க்கும் போதுதான் நமக்கு டெக்ஸ்ட் அல்லது படங்களில் தவறு இருப்பது தெரிகின்றது.தவறுகளை திருத்தம் செய்ய பலரும் Print Preview வை மூடி மீண்டும் மெயின் டாக்குமெண்ட் பைலைத்திறந்து அதில் தவறுகளை திருத்துகின்றனர். அவ்வாறு செய்யாமல் ப்ரிண்ட் ப்ரிவியுவை நாம் பார்க்கும் நிலையிலேயே மாற்றங்கள் செய்துகொள்ளலாம். அதற்கான வழிகளை இப்போது பார்க்கலாம்.
பைலின் ப்ரிண்ட் ப்ரிவியுவை திறந்து கொள்ளுங்கள் கீழே உள்ள விண்டோவை பாருங்கள்.
நீங்கள் எந்த இடத்தில் மாற்றம் செய்ய வேண்டுமோ அந்த இடத்தை கிளிக் செய்யவும்.உடனே வேர்ட் ஆனது அந்த இடத்தை ஸும் செய்து கொள்ளும். இப்போது டூல்பாரில் உள்ள Magnifier என்பதை கிளிக் செய்யவும்.
இப்போது நமது கர்சரானது லென்ஸ் மாதிரியான தோற்றத்திலிருந்து ஐ-பீம் தோற்றத்திற்கு மாறிவிடும். இனி இங்கிருந்தே நீங்கள் வேர்ட்டில் மாற்றங்கள் செய்துகொள்ளலாம். மீண்டும் பிரிண்ட் பிரிவியுவிலிருந்து அதன் டெக்ஸ்ட் பழைய நிலைக்கு மாறிட Close Print Preview கிளிக் செய்திடுங்கள்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்தினை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
வாழ்க வளமுடன்.
வேலன்.
14 comments:
பயனுள்ள தகவல் மிகவும் நன்றி
menan
பகிர்வுக்கு நன்றி....
ஆஃபீஸ் 2007 ல் நிறைய குழப்பங்கள் வருவதால் அதை பயன்படுத்துவதில்லை. 2003 ல் இந்த வசதி இருக்கான்னு தெரியல..
நல்ல பதிவு நண்பரே . உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நல்ல பயனுள்ள பதிவு மாப்பூ !
பயனுள்ள தகவல் நன்றி வேலன்.
வாழ்க வளமுடன்.
நன்றிங்க வேலன்
menan கூறியது...
பயனுள்ள தகவல் மிகவும் நன்றி
menan//
நன்றி மேனன் சார்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழக் வளமுடன்,வேலன்.
Saranya கூறியது...
பகிர்வுக்கு நன்றி..//
நீண்ட நாட்களுக்குபின் கருத்துரைக்கு வந்துள்ளீர்கள் சகோதரி..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.
ஜெய்லானி கூறியது...
ஆஃபீஸ் 2007 ல் நிறைய குழப்பங்கள் வருவதால் அதை பயன்படுத்துவதில்லை. 2003 ல் இந்த வசதி இருக்கான்னு தெரியல..//
இருக்கின்றது நண்பரே...தங்கள் வருகைக்கும் கருத:துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.
சசிகுமார் கூறியது...
நல்ல பதிவு நண்பரே . உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//
நன்றி சசிகுமார்...தங்கள் வருகைக்கம் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.
கக்கு - மாணிக்கம் கூறியது...
நல்ல பயனுள்ள பதிவு மாப்பூ !//
நன்றி மாம்ஸ்...வாழ்க வளமுடன்.வேலன்.
♠புதுவை சிவா♠ கூறியது...
பயனுள்ள தகவல் நன்றி வேலன்.
வாழ்க வளமுடன்.//
நன்ற சிவா சார்...தங்கள் வருகைக்கு நன்றி..வாழ்க வளமுடன்.வேலன்.
ஆ.ஞானசேகரன் கூறியது...
நன்றிங்க வேலன்//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஞானசேகரன் சார்...வாழ்க வளமுடன்,வேலன்.
Post a Comment