வேலன்-பிளாக்கில வீடியோவினை வரவழைக்க

கடந்த பதிவில் நண்பர் ரியாஸ் அவர்கள் பிளாக்கில் வீடியோவினை இணைப்பது பற்றி கேட்டிருந்தார்.





Riyas சொன்னது…








அருமையான பதிவு வேலன் சார்..
எனக்கு என் பிளாக்கரில் வீடியோ கிளிப் எப்படி இனைப்பது பற்றி தெரியாது தயது சொல்லித்தர முடியுமா..?
அவருடைய இ மெயில் முகவரிக்கு தனியே விளக்கம் அளிக்கலாம் என்றிருந்தேன். அதைவிட பதிவிட்டால் இதுபற்றி தெரியாதவர்களுக்கும் தெரிய இங்கே பதிவிடுகின்றேன்.
முதலில் உங்களுடைய வீடியோவினை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.உங்கள் வீடியோவானது mp4 ஆக இருப்பது நல்லது. மற்ற பார்மெட்டுக்களைவிட இந்த பார்மெட்டானது வீடியோவின் அளவை குறைத்துவிடும்.பி்ன்னர் 4 shared.com -ல் கணக்கு ஒன்றை துவக்குங்கள். இது இலவச சேவை மற்றும் 200 எம்.பி. வரை இதில் பதிவினை ஏற்றலாம். இந்த 4 Shared.com ல் பதிவினை எப்படி ஏற்றுவது என் று முன்னரே நான் பதிவிட்டுள்ளேன். உங்களுக்காக மீண்டும் அதனை பதிவிடுகின்றேன்..
முதலில் இந்த தளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.(இப்போது புது டெம்ப்ளேட் மாற்றி உள்ளார்கள். இது பழைய டெம்ப்ளேட் படம்)
இதில் உள்ள GET 5 GB OF FREE SPACE கிளிக் செய்யவும். உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உங்கள் இ-மெயில் முகவரியை தட்டச்சு செய்யுங்கள்.
பாஸ்வேர்ட் கொடுங்கள். மற்றும் ஒரு முறை பாஸ்வேர்ட்
கொடுங்கள். இதில் உள்ள இலவசம் என்பதை தேர்ந்தேடுங்கள்.
கீழே உள்ள Sign Up கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில்
உள்ள ஓ.கே. கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன ஆகும்.அதே சமயம்
உங்கள் இ-மெயில் முகவரிக்கு இ-மெயில் ஒன்று வந்திருக்கும்.
இதில் கீழ்புறம் உள்ளChoose file கிளிக் செய்யுங்கள்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
நீங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டிய பைலை தேர்ந்தெடுத்துகிளிக் செய்யுங்கள்.அடுத்து கீழ் உள்ள Upload கிளிக் செய்யுங்கள்.
இதில் உள்ள கட்டத்தில் பார்த்தீர்களேயானால்
பச்சைநிற கட்டங்கள் வருவதை காணலாம்.பைல் Upload
ஆகி முடித்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
இதில் உள்ள Done கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன ஆகும்.
இதில் இரண்டாவதாக உள்ள Embed கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் வீடியோ அளவினை அகலம் மற்றும் உயரம் தேவைப்பட்டால் மாற்றிக்கொள்ளுங்கள். அடுதுது இதில் உள்ள Copy கிளிக் செய்யுங்கள். பின்னர் உங்கள் பிளாக்குக்கு வாருங்கள். அதில் உள்ள HTML ஐ திருத்து கிளிக செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ வரும். 
அதில் பேஸ்ட் செய்யுங்கள்.இப்போது எழுது கிளிக் செய்து பார்த்தீர்களேயானால் உங்கள் வீடியோவானது இருக்கும். முன்னோட்டம் கிளிக்செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.நண்பர் ரியாஸ் அவர்களுக்கு சந்தேகம் தீர்ந்திருக்கும் என எண்ணுகின்றேன்.
எனது சென்ற பதிவான கூகுள் குரோம் புக்மார்க்கை சேமிக்க தமிலிஷ்ஷில் பதிவிட்டேன். அதில் இருக்கு - ஆனால் இல்லை.இதுபற்றி அவர்களுக்கு இ-மெயில் மூலம் தகவல் தெரிவித்தேன். பதில் இல்லை. அந்த பதிவை இதுவரை 450 பேர் பார்த்துள்ளார்கள். பதிவினை காணாதவர்கள் இங்கு கிளிக் செய்து பார்த்துவிட்டு மறக்காமல் ஒட்டுபோட்டு செல்லுங்கள். அப்போதாவது அவர்கள் அதை முன்னணியில் பதிவிடுகின்றார்களா என பார்க்கலாம்.
மீண்டும் நாளை சந்திக்கலாம். 
வாழ்க வளமுடன்
வேலன். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

23 comments:

ஜெய்லானி said...

நல்ல பதிவு...!!

Chitra said...

Did you check again on Tamilish? I voted for that one too. :-)

அன்புடன் நான் said...

மிக பயனுள்ள பதிவுங்க....
நானே அறிந்துக் கொள்ள ஆவலாய் இருந்தேன்.... மிக்க நன்றிங்க.

மாணவன் said...

velan sir,

nice posting very useful...

thanks sir...

தமிழில் தகவல் தொழில் நுட்பம் said...

மிகவும் அருமையான பதிவு

வாழ்த்துக்கள்

Riyas said...

THANK YOU VERY MUCH SIR, FOR YOUR
QUICK REPLY.

Anonymous said...

பதிவுகளுக்கு நன்றி திரு வேலன் அவர்களே,எனக்கு ஒரு ஆலோசனை தேவை.
1.நானே எனது கருத்துக்களை தொகுத்து மென்னூலாக சேமிக்க விரும்புகிறேன்.அதற்கு என்ன வழி?
2.என்னுடைய வலையில் பதிந்த விஷயங்களை தொகுத்து ஒரு மென்னூலாக்க விரும்புகிறேன்.என் வலையை தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன்.அவர்களே நம் ஒவ்வொரு இடுகையையும் மென்னூல் வடிவில் கொடுத்தாலும் அதில் அவர்கள் விளம்பரம் வேறு உள்ளது.மேலும் அணைத்து பதிவையும் இணைக்கும்போது அது பக்கம் பக்கமாக ஒரு புத்தகம் வாசிப்பதுபோல் தொடர்ச்சியாக இருக்காது.எனவே இந்த இரண்டு கேள்விகளுக்கும் உரிய விளக்கத்தை எனது tvetsi@gmail.com மெயிலுக்கோ அல்லது ஒரு பதிவாகவோ இடவும் நன்றி

மச்சவல்லவன் said...

வணக்கம் வேலன்சார்.சிறந்த பதிவுசார். என் பலநாள் ஆசை,இப்போது எண்ணால் முடியும்.நன்றிசார் வாழ்த்துகள்.

murthy.karunakaran said...

good posting velan sir very very impartant posting

mkr said...

அருமையான விசயம்.அனைத்து பதிவுகளுமே பயனுள்ளதாக இருக்கிறது.எப்படி கொண்டு வருவது ஏதாவது பதிவு இட்டு இருக்கிற்களா...

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம் மிக்க நன்றி

வேலன். said...

ஜெய்லானி கூறியது...
நல்ல பதிவு...!//

நன்றி ஜெய்லானி சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
Did you check again on Tamilish? I voted for that one too. :-)//

நன்றி சகோதரி...கண்ணாடி சூப்பர்...

வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சி. கருணாகரசு கூறியது...
மிக பயனுள்ள பதிவுங்க....
நானே அறிந்துக் கொள்ள ஆவலாய் இருந்தேன்.... மிக்க நன்றிங்க.//

நன்றி நண்பரே...பதிவிற்கு முதன்முதலாக வந்துளளீர்கள் என எண்ணுகின்றேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும ்நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

DJ.RR.SIMBU.BBA-SINGAI கூறியது...
velan sir,

nice posting very useful...

thanks sir...//

நன்றி சிம்பு சார்...

வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

தமிழில் தகவல் தொழில் நுட்பம் கூறியது...
மிகவும் அருமையான பதிவு

வாழ்த்துக்கள்//
நன்றி நண்பரே...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

Riyas கூறியது...
THANK YOU VERY MUCH SIR, FOR YOUR
QUICK REPLY.//

நன்றி ரியாஸ் சார்...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

venkatesan,siva கூறியது...
பதிவுகளுக்கு நன்றி திரு வேலன் அவர்களே,எனக்கு ஒரு ஆலோசனை தேவை.
1.நானே எனது கருத்துக்களை தொகுத்து மென்னூலாக சேமிக்க விரும்புகிறேன்.அதற்கு என்ன வழி?
2.என்னுடைய வலையில் பதிந்த விஷயங்களை தொகுத்து ஒரு மென்னூலாக்க விரும்புகிறேன்.என் வலையை தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன்.அவர்களே நம் ஒவ்வொரு இடுகையையும் மென்னூல் வடிவில் கொடுத்தாலும் அதில் அவர்கள் விளம்பரம் வேறு உள்ளது.மேலும் அணைத்து பதிவையும் இணைக்கும்போது அது பக்கம் பக்கமாக ஒரு புத்தகம் வாசிப்பதுபோல் தொடர்ச்சியாக இருக்காது.எனவே இந்த இரண்டு கேள்விகளுக்கும் உரிய விளக்கத்தை எனது tvetsi@gmail.com மெயிலுக்கோ அல்லது ஒரு பதிவாகவோ இடவும் நன்றி//

விரிவாக பதிவிடுகின்றேன் நண்பரே...வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் கூறியது...
வணக்கம் வேலன்சார்.சிறந்த பதிவுசார். என் பலநாள் ஆசை,இப்போது எண்ணால் முடியும்.நன்றிசார் வாழ்த்துகள்.//

நன்றி மச்சவல்லவன் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

murthy.karunakaran கூறியது...
good posting velan sir very very impartant posting//

நன்றி மூர்த்தி கருணாகரன் சார். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

mkr கூறியது...
அருமையான விசயம்.அனைத்து பதிவுகளுமே பயனுள்ளதாக இருக்கிறது.எப்படி கொண்டு வருவது ஏதாவது பதிவு இட்டு இருக்கிற்களா...//

நன்றி நண்பரெ..தங்கள் கேள்வி எனக்கு சரியாக புரியவில்லை.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

ஆ.ஞானசேகரன் கூறியது...
ம்ம்ம் மிக்க நன்றி//

நன்றி ஞர்னசேகரன் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

Anonymous said...

You tube யை தான் எப்படி கொண்டு வருவது என்று கேட்டேன்

Related Posts Plugin for WordPress, Blogger...