வேலன்:-Auto Save -தானே தகவல்களை சேமிக்கும் சாப்ட்வேர்




நண்பர் புதுவை சிவா அவர்கள் சென்ற பதிவின் கருத்துரையில் இந்த சாப்ட்வேர் பற்றி கேட்டிருந்தார். அவரின் கருத்துரை கீழே:-

♠புதுவை சிவா♠ சொன்னது…


தகவலுக்கு நன்றி வேலன்


ஆது போல் மின்சாரம் தடை ஏற்படும் போது கணணியில் நாம் செய்து கொண்டு இருக்கும் வேலைகளை தானாக சேமிக்கும் சாப்ட்வேர் ( auto save) ஏதாவது உள்ளதா? இருந்தால் தெரியப்படுத்தவும்.

வாழ்க வளமுடன்

அவர் கேட்ட இந்த சாப்ட்வேரை அனைவரும் அறிந்து கொள்ள இங்கே பதிவிடுகின்றேன்.பைல்களை இசை,புகைப்படம்,டாக்குமெண்ட் என இதில் மூன்றாக பிரித்துள்ளார்கள்.நாம் செய்யும் வேலையில் எதனை சேமிக்க வேண்டுமோ அதனை சேமித்துக்கொள்ளலாம். மேலும் சேமிப்பதை பென்டிரைவ்,நமது கம்யூட்டரிலேயே வேறு டிரைவ்,எக்ஸ்டர்னல் ஹார்ட் டிரைவ் என சேமிக்கலாம். மாதிரி தொகுப்பாவும் 9 எம.பி. கெர்ள்ளளவும் கொண்ட இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில நீங்கள் எந்த பைலை சேமிக்க விரும்புகின்றீர்களோ அதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
சேமிக்க விரும்பும் இடத்தையும் தேர்வு செய்யுங்கள். நான் டி -டிரைவை தேர்வு செய்துள்ளேன்.
நீங்கள் சேமிக்க விரும்பும் நாட்களை தேர்வு செய்யலாம். அதைப்போல உங்களுக்கு தொடர்ந்து சேமிக்க வேண்டுமா - தினந்தோறும் - வாரம் ஒரு முறை - மாதம் ஒரு முறை - கம்யூட்டர் தொடங்கும் போது - ஒவவோரு பணி முடிக்கும் போது என எவ்வாறு வேண்டுமோ அவ்வாறு செட் செய்து கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
தேவைப்படும் சமயம் பயன் படுத்தவும் - நிறுத்தி வைக்கவும் - டெலிட் செய்யவும் இதில வசதி உள்ளது. பயன்படுத்திப்பாருங்கள். கருத்தினை கூறுங்கள். 
வாழ்க வளமுடன்,
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

23 comments:

மச்சவல்லவன் said...

வணக்கம் வேலன் சார். நண்பர் சிவா கேட்டதுக்கு இணங்கி இந்த நல்ல மென்பொருளை எங்களுக்கு அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி.
வாழ்துக்கள்.தொடரட்டும் உங்கள் சேவைகள்.
....நன்றி....

Muthu Kumar N said...

வேலன் சார்,

நல்ல தகவல், வேர்ட் மற்றும் எக்ஸெல்லில் இருக்கும் ஆட்டோசேவ் பற்றியும் புதியவர்களுக்காக ஒரு பதிவிடலாமே.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

Thomas Ruban said...

நல்ல பயனுள்ள தகவல், நல்ல மென்பொருள் நன்றி சார்.

மாணவன் said...

வேலன் சார்,

பயனுள்ள மென்பொருளை பதிவிட்டு அசத்திவிட்டீர்கள்

நன்றி சார்....

பொன் மாலை பொழுது said...

மாப்ள வேலன் இல்ல இல்ல, மாஸ்டர் வேலன் என்றால்
கொக்கானானாம்
நீங்க அடிச்சி ஆடுங்க மாப்ள.

Anonymous said...

வணக்கம் வேலன் சார்,
இந்த பதிவு எல்லோருக்கும் பயன் உள்ளதாக இருக்கும். மற்ற பதிவில் உள்ள சந்தேகத்தை உங்களிடம் எப்படி கேட்பது? தனியாக ஏதாவது வழி இருக்கிறாதா!(அதாவது 2009-மார்ச் 7 பதிவு) தெரிவிக்கவும். பிறகு போட்டோஷாப்பில் free transform-ல்
warpஎன்று இல்லை எப்படி எடுப்பது என்று தெரிவிங்கள்.

ஜெய்லானி said...

நல்ல அவசியமான பதிவு

முஹம்மது நியாஜ்,கோலாலம்பூர் said...

அன்புமிகு வேலன் அவர்களுக்கு
மிக பயனுள்ள தகவல். இதுபோல் நல்ல தகவல் எப்போதும் எல்லோருக்கும் பயனுள்ளது.
மிக்க நன்றி
அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்

தமிழார்வன் said...

நண்பர் வேலனுக்கு வணக்கம்,

நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

நீங்கள் நல்ல‌ பதிவுகளை தொடருங்கள்.
நாங்கள் உங்கள் வலைப்பக்கத்தை தொடருகிறோம்.

அன்புடன்
தமிழார்வன்.

puduvaisiva said...

பல நாள் தேடிய சாப்ட்வேரை தக்க விளக்கத்துடன் பலருக்கும் பயன் உள்ளவாரு விளக்கம் அளித்தமைக்கு ரொம்ப நன்றி வேலன்.

வாழ்க வளமுடன்

வேலன். said...

மச்சவல்லவன் கூறியது...
வணக்கம் வேலன் சார். நண்பர் சிவா கேட்டதுக்கு இணங்கி இந்த நல்ல மென்பொருளை எங்களுக்கு அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி.
வாழ்துக்கள்.தொடரட்டும் உங்கள் சேவைகள்.
....நன்றி....//

நன்றி மச்சவலலவன் சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
வேலன் சார்,

நல்ல தகவல், வேர்ட் மற்றும் எக்ஸெல்லில் இருக்கும் ஆட்டோசேவ் பற்றியும் புதியவர்களுக்காக ஒரு பதிவிடலாமே.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்//

நன்றி முத்துக்குமார் சார்..தங்கள் வருகைக்கும் ஆலோசனைக்கும் நன்றி..விரைவில் அதையும் பதிவிடுகின்றேன். வாழ்க வளமுடன்,என்றும் அன்புடன்,வேலன்.

வேலன். said...

Thomas Ruban கூறியது...
நல்ல பயனுள்ள தகவல், நல்ல மென்பொருள் நன்றி சார்.//

நன்றி தாமஸ் ரூபன் சார்.வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

DJ.RR.SIMBU.BBA-SINGAI கூறியது...
வேலன் சார்,

பயனுள்ள மென்பொருளை பதிவிட்டு அசத்திவிட்டீர்கள்

நன்றி சார்....//

நன்றி சிம்புசார்...காலையிலேயே வருவீர்கள் இன்று லேட்டாகிவிட்டது.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
மாப்ள வேலன் இல்ல இல்ல, மாஸ்டர் வேலன் என்றால்
கொக்கானானாம்
நீங்க அடிச்சி ஆடுங்க மாப்ள.//

நன்றி மாம்ஸ்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுட்ன.வேலன்.

வேலன். said...

பெயரில்லா கூறியது...
வணக்கம் வேலன் சார்,
இந்த பதிவு எல்லோருக்கும் பயன் உள்ளதாக இருக்கும். மற்ற பதிவில் உள்ள சந்தேகத்தை உங்களிடம் எப்படி கேட்பது? தனியாக ஏதாவது வழி இருக்கிறாதா!(அதாவது 2009-மார்ச் 7 பதிவு) தெரிவிக்கவும். பிறகு போட்டோஷாப்பில் free transform-ல்
warpஎன்று இல்லை எப்படி எடுப்பது என்று தெரிவிங்கள்.//

மார்ச் 2009 சந்தேகத்தை இவ்வளவு சீக்கிரம் கேட்டுள்ளீர்கள். எனது மின்அஞ்சல் முகவரி:-velantkm@gmail.com.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன,வேலன்.

வேலன். said...

ஜெய்லானி கூறியது...
நல்ல அவசியமான பதிவு//

நன்றி ஜெய்லானி சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

முஹம்மது நியாஜ்,கோலாலம்பூர் கூறியது...
அன்புமிகு வேலன் அவர்களுக்கு
மிக பயனுள்ள தகவல். இதுபோல் நல்ல தகவல் எப்போதும் எல்லோருக்கும் பயனுள்ளது.
மிக்க நன்றி
அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்//

வாங்க சார்...ரொம்ப நாட்களுக்குபின்வந்துள்ளீர்கள்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

தமிழார்வன் கூறியது...
நண்பர் வேலனுக்கு வணக்கம்,

நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

நீங்கள் நல்ல‌ பதிவுகளை தொடருங்கள்.
நாங்கள் உங்கள் வலைப்பக்கத்தை தொடருகிறோம்.

அன்புடன்
தமிழார்வன்.//

நன்றி நண்பரே்..தங்கள் வருகைக்கும் கருத:துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

♠புதுவை சிவா♠ கூறியது...
பல நாள் தேடிய சாப்ட்வேரை தக்க விளக்கத்துடன் பலருக்கும் பயன் உள்ளவாரு விளக்கம் அளித்தமைக்கு ரொம்ப நன்றி வேலன்.

வாழ்க வளமுடன்//

நன்றி சிவா சார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்.வேலன்..

Colvin said...

பயனுள்ள பதிவு. இப்படி ஒரு மென்பொருளை எதிர்பார்த்திருந்தேன். தந்து விட்டீர்கள். மிக்க நன்றி.
அன்புடன்
கொல்வின்
இலங்கை

வேலன். said...

colvin கூறியது...
பயனுள்ள பதிவு. இப்படி ஒரு மென்பொருளை எதிர்பார்த்திருந்தேன். தந்து விட்டீர்கள். மிக்க நன்றி.
அன்புடன்
கொல்வின்
இலங்கை//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.நண்பரே...வாழ்க வளமுடன்,வேலன்.

tamil nanban said...

dear sir i am bala from chennai. i cannot know how to type in tamil.so my half level languvage sorry.ALL DOWNLOAD AND INSTAL files are have saved on dish c.how to change storage point sir

Related Posts Plugin for WordPress, Blogger...