வேலன்-டெக்ஸ்டாப்பில் இருந்து புகைப்படம்.

நிக்கான்,கெனான்.கோடாக் என விதவிதமான கேமராக்கள் இருந்தாலும் நமது டெக்ஸ்டாப்பில் இருப்பதை படம் பிடிக்க முடியாது.அதற்காக இநத சின்ன கேமரா நமக்கு உதவுகின்றது.500 கே.பி.அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.

இதில் உள்ள Options கிளிக் செய்து வேண்டிய டிரைவையும் - வேண்டிய பார்மெட்டையும் தேர்வு செய்யலாம். அதைப்போலவே கேமரா கிளிக் சவுண்டையும் கொண்டுவரலாம். 
இந்த கேமரா மேல்புறம் உள்ள சிகப்பு பட்டனை கிளிக் செய்ய நமது டெக்ஸ்டாப்பில் உள்ள படமானது நமது சேமித்துவைத்துள்ள இடத்தில் காப்பி ஆகும்.
சாதாரணமாக நாம் டெக்ஸ்டாப்பில் உள்ள படங்களை காப்பி செய்ய பிரிண்ட் ஸ்கிரீன் அழுத்தி பின்னர் அதனை பெயிண்ட் அப்ளிகேஷனில் நாம் சேவ் செய்யவேண்டும். அந்த சிரமங்கள் ஏதும் இன்றி இந்த சாப்ட்வேர் மூலம் நாம் எளிதில் டெக்ஸ்டாப்பில்உள்ளதை சேமிக்கலாம்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

2 comments:

Anonymous said...

பயனுள்ள மென்பொருள் நன்றி நன்றி ........

வேலன். said...

கந்தசாமி. said...
பயனுள்ள மென்பொருள் நன்றி நன்றி ........//

நன்றி கந்தசாமி சார்....
வாழ்க வளமுடன்.
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...