வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள்.

குழந்தைகள் விளையாட்டாகவும் இருக்கனும் அதே சமயம்அவர்கள் அறிவிற்கு  புத்திசாலிதனத்திற்கு வேலைகொடுப்பதாகவும் இருக்கனும்.அவ்வாறு சுமார் 100க்கும் மேற்பட்ட விளையாட்டுக்களை உள்ளடக்கிய விளையாட்டுக்களை இங்கு காணலாம்.இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை பதிவிறக்கம் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் Colouring.Crossword.Dot Drawing.Jigsaws.Mazes. Rumble Jumble.Word Sorch.Fun Games என ஒன்பது விதமான தலைப்புக்கள் கொடுத்துள்ளார்கள்;. ஒவ்வொரு தலைப்பிலும் சுமார் பதினைந்துக்கும் மேற்பட்ட விளையாட்டுக்கள் உள்ளன. கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.
முதலில் உள்ள கலரிங் கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் 19 விதமான படங்கள் கொடுத்துள்ளார்கள் நமக்கு ஏது தேவையோ அதனை தேர்வு செய்தபின் வரும் படத்தில் விரும்பிய வண்ணங்கள் சேர்த்து விளையாடலாம்.
அடுத்துள்ளது குறுக்கொழுத்து. இதில் பத்துவிதமான ஆப்ஷன்கள் ;கொடுத்துள்ளார்கள். கிழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
நான் பார்ட் ஆப் பாடி தேர்வு செய்துள்ளேன். மனிதனின் உடல் பாகங்களை எண்களால் குறிப்பிட்டுள்ளார்கள். குறிப்பிட்ட எண்ணிற்கான  அதன் பெயரை கட்டங்களில் நிரப்பவேண்டும். 
சரியான நிரப்பியபின் வந்துள்ள படம் கீழே.
அதற்கு அடுத்து புள்ளி விளையாட்டு இதில நமக்கு கிராப் படம் கொடுத்திருப்பார்கள். இதில் நிறைய கட்டங்கள்இருக்கும். தேவையான கட்டங்களில் தேவையான நிறத்தினை கொண்டு அழகிய படங்கள் வரையவேண்டும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
அடுத்து வண்ணத்துப்பூச்சி முதற்கொண்டு சிங்கம் வரை சுமார் 10க்கும் மேற்பட்ட படங்களைகொடுத்துள்ளார்கள்.கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.
நாம் விரும்பும் படம் தேர்வு செய்ததும் உங்களுக்கான படங்கள் கலைந்துவரும். தேவையான படத்தினை ஒழுங்காக அடுக்கவேண்டும.சரியாக வந்ததும் வாழ்த்துசொல்லி உங்களுக்கு தகவல் வரும்.கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.
குழந்தைகளுக்கான வார மலர்களில் விதவிதமான படங்கள் கொடுதது அதற்கான எண்களையும்கொடுத்திருப்பார்கள். எண்களை சேர்தததும் உங்களுக்கு எண்களுக்கான அழகிய படம் வரும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
புள்ளிகளை இணைத்ததும் உங்களுக்கான புகைப்படம் தெரியவரும்.
இதுவும் வழி கண்டுபிடிக்கும் விளையாட்டு இதில் நாம் ஏதாவது ஒரு விலங்கை தேர்வு செய்ததும் வரும் விண்டோவில அதற்காக வெளியேறும் வழியை காண்பிக்கவேண்டும். கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.
இந்த விளையாட்டில் மிருகங்கள் முதல் பல்வேறு தலைப்புகளில் கொடுத்திருப்பார்கள்.தேவையானதை தேர்வு செய்யவும்.
நான் அனிமல்ஸ் தேர்வு செய்தேன் இதில் காட்டில் உள்ள விலங்குகள் பெயர்கள் கலைந்துவரும். நாம்சரியான விடையை தட்டச்சு செய்யவேண்டும. உதாரணத்திற்கு கீழே Lion என்பது  oinl என வந்துள்ளது. சரியான விடையை தட்டச்சு செய்ததும்அடுத்த விலங்கினுடைய பெயர் வரும்.கீழெ உள்ள விண்டோவில் பாருங்கள்.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை தரம் வாரியாக பிரித்துவைத்துள்ளார்கள்.நிறைய வார்த்தைகள்கொடுத்திருப்பார்கள்.நமக்கு தேவையான வ◌ார்த்தையை தேர்வு செய்யவேண்டும்.
நான் பூக்களை தேர்வு செய்தேன் விதவிதமான பூக்களின் படங்கள் கீழே வந்துள்ளது. 
அந்த பூக்களின்பெயர்களை கீழே உள்ள கட்டத்தில் இருந்து நாம் தேடி கண்டுபிடிக்கவேண்டும. 
இறுதியாக பன்கேம்ஸ். இதில் பிரபலமான பலூன் சூட்டிங் முதல் பல்வேறு விதமான விளையாட்டுக்களை கொடுத்துள்ளார்கள்.
தேவையானதை தேர்வு செய்துவிளையாடலாம். குழந்தைகளுக்கு நன்றாக பொழுதுபோகும. பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பயன்படுத்திப் பார்க்கிறேன்... நன்றி...

viknes waran said...

Velan Sir, Hiren boot பற்றி விளக்கம் தாருங்கள்

s suresh said...

அருமையான விளையாட்டுக்கள்! குழந்தைகளுக்கு மிகவும் உதவும்! பகிர்வுக்கு நன்றி!

வேலன். said...

திண்டுக்கல் தனபாலன் said...
பயன்படுத்திப் பார்க்கிறேன்... நன்றி...ஃஃ

நன்றி தனபாலன் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

viknes waran said...
Velan Sir, Hiren boot பற்றி விளக்கம் தாருங்கள்

தருகின்றேன் நண்பரெ..
தகவலுக்கு நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Blogger s suresh said...
அருமையான விளையாட்டுக்கள்! குழந்தைகளுக்கு மிகவும் உதவும்! பகிர்வுக்கு நன்றி!

நன்றி சுரேஷ் சார்...தங்கள் வருகைக்கும கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

Thangavel Manickadevar said...

கேமை டவுன் செய்ய முடியவில்லை வேலன். வேறு லிங்க் அனுப்ப முடியுமா? என் மகள் விளையாடுவாள்

Anonymous said...

sir i down load it but it not open

thank u

Related Posts Plugin for WordPress, Blogger...