வேலன்:-வேலைகளை குறிப்பெடுத்துக்கொள்ள

அலுவலகமாகட்டும் வீடாகட்டும் நாம் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வேலையை செய்து முடித்த்தால்தான் நாம் நல்லபெயர் வாங்க முடியும். அதுபோல ஓரு இடத்திற்கு நாம் செல்வதானால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே நாம் சென்றுவிடவேண்டும். அப்போதுதான் நமக்கு நல்லபெயர் கிடைக்கும். வேலை நேரத்தில் பலர் மறந்துவிட்டு பின்னர் அவதிப்படுவர். இந்த சின்ன சின்ன குறையை போக்கஇந்த சின்ன சாப்ட்வேர்பயன்படுகின்றது.இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்த்தும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நான்குவிதமான காலங்கள் கொடுத்திருப்பார்கள். எந்த எந்த காலத்தில் எந்த எந்த வேலை உள்ளது எந்த நேரத்தில் அதனை நாம் முடிக்கவேண்டும் என காலஅளவினை நிர்ணயித்துக்கொள்ளலாம். மேலும் முதலில் செய்ய வேண்டிய வேலைக்கு முதலில் முடித்துவிடலாம். காலையில நாம் முதலில் எந்த வேலைசெய்யவேண்டும் அதற்கு அடுத்த எந்தவேலை எந்த நேரத்தில் எந்த தேதியில் செய்ய வேண்டும் என நிர்ணயித்து அதற்கு ஏற்ப அதன் எதிரில் உள்ள ரேடியோ பட்டனை தேர்வு செய்யலாம் .கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
மொத்த நிகழ்ச்சியையும் நாம் குறித்துவைத்து அதன் ப்ரிவியு காணலாம்.
இதில் உள்ள மெமோ பேட் கிளிக் செய்திட நமக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்

அதில் லிஸ்ட் ஒன்று முதல் நான்கு வரை எந்த எந்த வேலைகள் பாக்கிஉள்ளது என எளிதில் அறிந்துகொள்ளலாம். கீழே உள் ளவிண்டோவில் பாருங்கள்.
நாளையே நீங்கள் அலுவலக்த்தில் பிஸியாக மாறும் சமயம் இந்த சாப்ட்:வேர் உங்களுக்கு மிகுந்த பயன்தரும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்... சிறப்பு பகிர்வு :

http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Fertilize-Part-2.html

வேலன். said...

திண்டுக்கல் தனபாலன் said...
தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்... சிறப்பு பகிர்வு :

http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Fertilize-Part-2.htmlஃஃ

நன்றி தனபாலன் சார்..தங்கள் வருகைக்கும்வாழத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...