வேலன்:- எம்.பி.4 பைல்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட

இணையத்தில் பெரும்பாலும் யூடியூப்களில் எம்.பி.4 பார்மெட்டுகளிலேயே படங்களை பதிவேற்றம் செய்வார்கள். நாம் படங்களை பதிவிறக்கம் செய்தாலும் அவை எம்பி.4 பார்மெட்டிலேயே கிடைக்கும். அதனை இயக்க சில ப்ளேயர்களைதவிர பெரும்பாலான ப்ளேயர்கள் அதனை சப்போர்ட் செய்வதில்லை. அவ்வாறு பதிவிறக்கம் செய்திட்ட எம்.பி.4 படங்களை நாம் விரும்பியவாறு Xvid.Divix.MPEG-4.MP42.WMV,Motoion JPEF.Avi என விரும்பிய பார்மெட்டுக்களுக்கு மாற்றம் செய்திட இந்த சின்ன சாப்ட்வேர் இலவசமாக இணையத்தில் கிடைக்கின்றது. 7 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திடஇங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள ADD Files கிளிக்செய்து உங்களிடம் உள்ள வீடியோவினை தேர்வு செய்யவும். பின்னர் கீழே உள்ள கட்டத்தில் உங்களுக்கு எந்த பார்மெட்டுக்கு படம் தேவையோ அந்த பார்மெட்டினை தேர்வு செய்யவும். கீழே உள்ள விண்டோவில ;பாருங்கள்.இதில் நாம் ஆடியோ பார்மெட்டினையும் தேர்வு செய்யும் வசதி உள்ளது.
இறுதியாக ஓ,கே.தந்தபின்னர் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
உங்களுடைய வீடியோ பைலானது கன்வர்ட ஆகியபின்னர் நீங்கள் சேமித்து வைத்துள்ள இடத்தில் சென்று பார்த்தால் உங்களுக்கான வீடியோவானது நீங்கள் விரும்பிய பார்மெட்டில் மாறியிருப்பதை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

2 comments:

சே. குமார் said...

மிகவும் உபயோகமான தகவல்...
பகிர்வுக்கு நன்றி.

வேலன். said...

Blogger சே. குமார் said...
மிகவும் உபயோகமான தகவல்...
பகிர்வுக்கு நன்றி.

நன்றி குமார் சார்

வாழ்க வளமுடன்
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...