வேலன்:-வேலைகளை அலாரத்தின் மூலம் நினைவுப்படுத்த

குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பணிகளை நினைவுப்படுத்த இந்த அலாரம் கடிகாரம் பயன்படுகின்றது. ஒரு வருடத்திற்கான குறிப்புகளை நாம் இதில் செட் செய்து வைத்துக்கொள்ளலாம். 3 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக்செய்யவும்.இதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் கீழே உள்ள நியூ பட்டனை கிளிக் செய்தால் உங்களுக்கான விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நீங்கள் எந்த நிகழ்ச்சிக்கு அலாரம் செட் செய்ய விரும்புகின்றீர்களோ அந்த நிகழ்ச்சிக்கான ஐ கானை தேர்வு செய்யலாம். உதாரணத்திற்கு நீ;ஙகள் பிறந்த நாள்நிகழ்ச்சி என்றால் பர்த்டே கேக் ஐகானை தேர்வு செய்யலாம். அதுபோல் தொலைபேசி கட்டணம் கட்டவேண்டும் என்றால் அதற்கான தொலேபேசி ஐகானை தேர்வு செய்யலாம். தினந்தோறும் நடைபெறும் செயல்கள் வாரத்திற்கான செயல்கள். மாதத்திற்கான செயல்கள் மற்றும் ;வருடத்திற்கான செயல்கள் என நமது செயல்களை இதில் பிரித்துவைத்துக்கொள்ளலாம்.இதன் வலதுபுறம் உள்ள விண்டோவினை பாருங்கள்.
 இதில் உள்ள ஸ்கின் கிளிக் செய்திட உங்களுக்கு விதவிதமான மாடல்களில் கெடிகாரம் கிடைக்கும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்

 விதவிதமான காலண்டர்டிசைனையும் நீங்கள்டெக்ஸ்டாப்பில கொண்டுவரலாம்.கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.
 நமது நேரத்திற்கும் சர்;வர்நேரத்திற்கும் உள்ள வித்தியாசமான நேரத்தினை இதில் அட்ஸட்ட் செய்துகொள்ளும் வசதியும் இதில் கொடுத்துள்ளார்கள். கழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு டாக்ஸ்பாரில் வந்து அமர்ந்துகொள்ளும்.வேண்டிய சமயம் நாம் அலாரம் செட் செய்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அட்டகாசமாக இருக்கிறது... நன்றி...

Unknown said...

Velan Sir, Hiren boot பற்றி விளக்கம் தாருங்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...