வேலன்:-பிடிஎப் பைல்களை பிரிக்க மற்றும் சேர்க்க-Ice Cream PDF Split&Merge

பிடிஎப் பைல்களை பிரிக்க மற்றும் சேர்க்க இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 9 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் இரண்டுவிதமான ஆப்ஷன்கள்கொடுத்துள்ளார்கள். முதலில் பிரிக்க மற்றும் இரண்டாவதாக சேர்க்க கொடுத்துள்ளார்கள். முதலில் பிரிக்க என்னும் பிரிவை தேர்ந்தெடுக்கவும். இதனை கிளிக்செய்ததும் வரும் விண்டோவில் பிடிஎப் பைலானது நமக்கு எவ்வாறு வரவேண்டும் என்பதனை தேர்வு செய்யவும்.பக்கங்களின் படியாகவா,தலைப்புகளின் படியாகவா,பிரிக்கலாம்.மேலும் தேவையில்லாத பக்கங்களையும் இதில் நீக்கிவிடலாம். கீழே உள்ள விண்டோவில் ;பாருங்கள்.
 பிடிஎப் பைல்களை சுலபமாக பிரிக்க முடிந்தது போல அதனை சுலபமாக சேர்கவும் செய்யலாம். இதில் உள்ள மேர்ஜ் கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள Add File கிளிக் செய்து உங்களிடம் உள்ள பிடிஎப் பைல்களை தேர்வு செய்யவும்.
 உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். பிடிஎப் பைல்க்ளை சேமிக்க விரும்பும் இடத்தினை தேர்வு செய்துபின்னர் இதில் உள்ள Merge பட்டனை கிளிக் செய்யவும்.
இப்போது நீங்கள் சேமித்த இடத்தில் சென்று பார்த்தால் உங்களுக்கான பிடிஎப் பைல்கள் ஓரெ பைலாக இருப்பதனை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...