இணையதளம் பார்க்கையில் நாம் முக்கியமான இணையதள முகவரிகளை புக்மார்க் செய்துவைப்போம். அது புக்மார்க் பாரில் நிறைய சேர்ந்துவிடும். நாம் இணையதளம் திறக்கையில் இணையதளம் திறக்க நேரம் ஆகும். இணையதளம் விரைவில் திறக்கவும் நாம் குறித்துவைத்துள்ள இணைய தள புக்மார்க்குகளை தனிபோல்டரில் சேமித்து பார்வையிடுவதையும் எப்படி என காணலாம்.உங்களுக்கான ப்ரோவ்சரை திறந்துகொள்ளுங்கள். பின்னர் அதன்வலது முலையில் கிளிக் செய்திடுங்கள்.கீழ்கண்ட விண்டோ திறக்கும்.
வரும் விண்டோவில் ஆப்டிமைஸ் கிளிக் செய்து வருகின்ற விண்டோவில் Export Bookmarks to HTML File என்பதனை கிளிக் செய்தால் உங்களுக்கான டிரைவ் கிடைக்கும். அதில் நீங்கள் உங்கள் புக்மார்க்குகளை எங்கு சேமிக்க விரும்புகின்றீர்களோ அந்த இடத்தினை தேர்வு செய்து சேவ் என கிளிக் செய்யவும்.
உங்களுக்கான புக்மார்க் சேமிப்பாகிவிட்டது. இப்போது ப்ரவ்சரில் உள்ள புக்மார்க்குகளை டெலிட் செய்துவிட்டு தேவையான இணையதள பக்கத்தினை சேவ் செய்த இடத்தில் இருந்து எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment