வேலன்:-பைல்களை சுருக்க -சுருக்கிய பைல்களை விரிவாக்கம் செய்ய -Bandzip.

பைல்களை சுருக்கவும் சுருக்கி உள்ள பைல்களை விரிவாக்கம் செய்து பார்க்கவும் இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதனை இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம ;செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்து ஒப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் நீங்கள் சுருக்கவேண்டி பைல்களின் பார்மெட்டுக்கள் கொடுத்துள்ளார்கள். விருப்பமானதை தேர்வு செய்திடுங்கள். இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்து தேவையான ஆப்ஷன்களை தேர்வு செய்திடுங்கள். பின்னர் இதன் கீழே உள்ள ஓ.கே.பட்டனை கிளிக் செய்திடுங்கள்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
 நீங்கள் சுருக்கவேண்டிய பைலினை தேர்வு செய்திடவும் அதனை சேமிக்கவிரும்பும் இடத்தினையும் தேர்வு செய்திடவும்.
 உங்கள் பைலினில் உள்ள டாக்குமெண்டுகளோ.புகைப்படங்களோ.பாடல்களோ.வீடியோ பைலகளோ என எதனை நீங்கள் சுருக்க விரும்பினீர்களோ அது சுருங்க ஆரம்பிக்கும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இந்த மென்பொருளானது ஆதரிக்கும் பார்மெடடுகளாக  7Z, ACE, AES, ALZ, ARJ, BH, BIN, BZ, BZ2, CAB, Compound(MSI), EGG, GZ, IMG, ISO, ISZ, LHA, LZ, LZH, LZMA, PMA, RAR, RAR5, SFX(EXE), TAR, TBZ, TBZ2, TGZ, TLZ, TXZ, UDF, WIM, XPI, XZ, Z, ZIP, ZIPX, ZPAQ  என நிறைய பார்மெட்டுக்கள் உள்ளது. மேலும் இதுஒரு இலவச மென்பொருளாகும். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...