வேலன்:-போட்டோஷாப் பாடம்-29 MAGNETIC LASSO TOOL



போட்டாஷாப்பில் சென்ற பாடங்களில் Lasso Tool பற்றி
பார்த்தோம். இன்று அதே Lasso Tool-ல் மூன்றாவதாக
உள்ள Magnetic Lasso Tool பற்றி பார்க்கலாம். கீழே உள்ள
படத்தை பாருங்கள்.


[7.jpg]

இதுவும் படத்தை தேர்வு செய்ய பயன்படுகின்றது.ஒரு
படத்தில் உள்ள பல வளைவுகளை தேர்வு செய்வது சற்று
சிரமம். அதற்கு நீங்கள் இந்த டூலை பயன்படுத்தலாம்.
பெயருக்கு ஏற்றார்போல் இந்த டூலை நீங்கள் படத்தின்
அருகில் கொண்டு செல்லும் சமயம் படத்தின் ஓரத்தை
இந்த டூலே தேர்வு செய்துகொண்டுவிடும்.

கீழே உள்ள இந்த பூவின் படத்தை பாருங்கள்.


இப்போது பூவின் ஓரம் கர்சரை கொண்டு செல்லும் சமயம்
படத்தின் ஓரத்தில் அதுவே தேர்வு செய்வதை காணலாம்.


இப்போது படத்தின் ஓரங்கள் முழுவதும் கர்சரை கிளிக்
கொண்டு செல்ல படம் முழுவதும் தேர்வு செய்யலாம்.


இப்போது கட் செய்தபின் வந்துள்ள படம் கீ்ழே:-




இதனை சுற்றி உள்ள் இடத்தை வண்ணம் கொண்டு நிரப்ப
வந்துள்ள படம் கீழே:-


அதைப்போல் ஒரு பறவையையும் தேர்வு செய்துள்ளேன்.
படம் கீழே:-


இந்த Magnetic Lasso Tool-ல் மற்றும் ஓரு வசதியும் உள்ளது.
கீழே உள்ள Option Bar கவனியுங்கள்.


இதில் உள்ள Feather-ல் வேண்டிய பிக்ஸல்கள் தரலாம்.
இதில் உள்ள Width என்பது காந்த தன்மையின் அளவை குறிக்கும்.
இதை 10 என்று வைத்தால் Mouse-ன் கர்சர் உள்ள இடத்தில் இருந்து
10 pixel கள் இடைவெளி வரை உள்ள் படத்தின்
Border-ஐ இந்த டூல் புரிந்து கொள்ளும்.படத்தில் பல
வளைவுகள் இருந்தால் இந்த மதிப்பை குறைவாக
வைத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக தலையின் முடியை
தேர்வு செய்யும்சமயமும், விலங்குகளின் வாலை தேர்வு
செய்யும் சமயமும் இது மிகவும் பயன்படும்.
இதில் கடைசியாக உள்ள Frequency என்பது நாம்
இந்த டூல் கொண்டு வரையும்சமயம் தோன்றும்
புள்ளிகளின் நெருக்கத்தைக் குறிக்கும்.இந்த
புள்ளிகளை Fasteing Point என்று கூறலாம்.
இதில் உள்ள Edge Control என்பது உருவத்தில்
உள்ள Contrast நிறத்தை இந்த டூல் அறியும். அதிக
Contrast உள்ள இடங்களை அறிந்து கொள்ள இந்த
எண்ணை அதிகமாக கொடுக்கவும். இந்த டூல்
கொண்டு படத்தை வரைந்து முடித்துவிட்டபின்
கர்சரின் டபுள் கிளிக் செய்தோ அல்லது என்டர்கீ
யை அழுத்தி யோ முடிக்கலாம்.Magnetic Lasso Tool
கொண்டு படத்தை தேர்வு செய்யும் சமயம் நாம்
Lasso Tool க்கு மாற Alt Key அழுத்தி பின் கிளிக்
செய்யலாம். மீண்டும் பழையபடி நமக்கு Magnetic
Lasso Tool தேவைபட்டால் நாம் Alt Ket-ஐ
விட்டு விட Magnetic Lasso Tool வந்துவிடும்.
Magnetic Lasso Tool மூலம் நாம் இப்போது உள்ள
புலியின் படத்தை தேர்வு செய்யலாம்.
படம் கீழே:-


கட் செய்தபின் வந்த படம் கீழே:-



பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.

அடுத்த பதிவில் சந்திக்கலாம்.

வாழ்க வளமுடன்,

வேலன்.




JUST FOR JOLLY PHOTOS:-


ஆ...கை மடக்கிடுச்சி யாராவது எடுத்துவிடுங்களேன்.


இந்த பதிவிற்கான PSD படம் கீழே:-

டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-



இந்த படத்தை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.


போட்டோஷாப் MAGNATIC LASSO TOOL
பற்றி இதுவரை தெரிந்துகொண்டவர்கள்:-

web counter
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

14 comments:

பொன் மாலை பொழுது said...

மாஸ்டர் வேலன் மாபிள்ளை வேலன் ஆகி ரொம்ப நாள் ஆகிறது. என்ன இருந்தாலும் மாஸ்டர் வேலன் தான் இங்கு
ஜொலிக்கிறார். உங்கள் படைப்புக்கள் எல்லாமே பிறர்க்கு பயன் தர வந்தவையே.
தொடர்க மேலும். அதுசரி !! கீழே உள்ள படத்தில் உள்ளே இருப்பவரை எங்கோ பார்ர்த்து போல உள்ளது , யார் அவர் வேலன் ??

பொன் மாலை பொழுது said...

புனே யில் பார்ர்த்த ஞாபகம் , சரிதானே மாப்பு ?

ரோஸ்விக் said...

முந்தியெல்லாம் போட்டோ ஷாப் பயன்படுத்த யோசிப்பேன்...இனிமே, உங்க ப்ளாக்-ஐ ரெஃபெர் பண்ணி எளிமையா வேலைய முடிச்சிடலாம்னு நம்ம்பிக்கை வந்திருக்கு. :-)
வாழ்த்துக்கள்.

http://thisaikaati.blogspot.com

மாணவன் said...

Thanks Boss...

Excellent job..

Very useful

டவுசர் பாண்டி said...

யப்பா !! கக்கு தலீவா !! இன்னாது இது ரொம்ப நாளா ஆளையே காணோம் இன்னு நெஞ்சிக்கீனு இருந்தாக்கா !! ஆளு இங்க தான் கீறீங்களா !!

செர்தான் , அங்க என்னை பண்ண கலாட்டா பத்தாதுன்னு இங்க வேற வந்து கீரீங்களா? பாவம் பா !! நம்ப வேலன் அண்ணாத்தே !! வாணாம் உட்டுடு !!

mdniyaz said...

திரு வேலன் அவர்களுக்கு,
வாராவாரம் புதுப்புது பாடங்கள். சார் பல பாடங்களை இன்னும் படித்து செய்முறை செய்வதற்க்குள் புதிய பாடமா? அசத்துருங்கீங்க.சார்..அசத்துங்க...
அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
மாஸ்டர் வேலன் மாபிள்ளை வேலன் ஆகி ரொம்ப நாள் ஆகிறது. என்ன இருந்தாலும் மாஸ்டர் வேலன் தான் இங்கு
ஜொலிக்கிறார். உங்கள் படைப்புக்கள் எல்லாமே பிறர்க்கு பயன் தர வந்தவையே.
தொடர்க மேலும். அதுசரி !! கீழே உள்ள படத்தில் உள்ளே இருப்பவரை எங்கோ பார்ர்த்து போல உள்ளது , யார் அவர் வேலன் ?//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்...படத்தில் இருப்பவர்....பதிவில் முகம் காட்டாதவர்...காத்திருங்கள்...
சொல்கின்றேன்...
வாழ்க வளமுடன்,
வேலன்.

Muthu Kumar N said...

Dear Velan Sir,

Good posting and as usual useful for all photoshop learning peoples.

Keep it up, your postings are very useful for many peoples.

Best wishes
Muthu Kumar.N

வேலன். said...

ரோஸ்விக் கூறியது...

முந்தியெல்லாம் போட்டோ ஷாப் பயன்படுத்த யோசிப்பேன்...இனிமே, உங்க ப்ளாக்-ஐ ரெஃபெர் பண்ணி எளிமையா வேலைய முடிச்சிடலாம்னு நம்ம்பிக்கை வந்திருக்கு. :-)
வாழ்த்துக்கள்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரோஸ்விக் அவர்களே...போட்டோஷாப் முதலில் பயமுறுத்தும் பழகினால் எளிமையாகிவிடும்.வாழ்த்துக்கள்...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

simbu கூறியது...

Thanks Boss...

Excellent job..

Very useful/

நன்றி சிம்பு அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...

புனே யில் பார்ர்த்த ஞாபகம் , சரிதானே மாப்பு ?ஃஃ

ஆம் வீட்டு நம்பர் 420 இப்போது ஞாபகம் வருகின்றதா?

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

டவுசர் பாண்டி கூறியது...

யப்பா !! கக்கு தலீவா !! இன்னாது இது ரொம்ப நாளா ஆளையே காணோம் இன்னு நெஞ்சிக்கீனு இருந்தாக்கா !! ஆளு இங்க தான் கீறீங்களா !!

செர்தான் , அங்க என்னை பண்ண கலாட்டா பத்தாதுன்னு இங்க வேற வந்து கீரீங்களா? பாவம் பா !! நம்ப வேலன் அண்ணாத்தே !! வாணாம் உட்டுடு !!ஃஃ

ஆகா...தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

mdniyaz கூறியது...
திரு வேலன் அவர்களுக்கு,
வாராவாரம் புதுப்புது பாடங்கள். சார் பல பாடங்களை இன்னும் படித்து செய்முறை செய்வதற்க்குள் புதிய பாடமா? அசத்துருங்கீங்க.சார்..அசத்துங்க...
அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்//

நண்பர் நியாஜ் அவர்களுக்கு, போட்டோஷாப்பில் இன்னும் 100 பாடங்களுக்கு மேல் இருக்கின்றது..இதுவே வாரம் ஒன்று பதிவிடுகின்றேன். முடிய எவ்வளவு நாள் ஆகும் என்று பாருங்கள்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
Dear Velan Sir,

Good posting and as usual useful for all photoshop learning peoples.

Keep it up, your postings are very useful for many peoples.

Best wishes
Muthu Kumar.N//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
என்றும் அன்புடன்,
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...