வேலன்:-இரட்டை புகைப்படங்களை எளிதில் நீக்க


நம்மிடம் புகைப்படங்கள் அதிகமிருக்கும். சொந்தமாக
நம்மிடம்டிஜிட்டல் கேமரா இருந்தால் சொல்லவே
வேண்டாம். புகைப்படம்எடுப்போம். கம்யூட்டரில்
சேமிப்போம்.மெமரி கார்டில்உள்ள புகைப்படத்துடன்
மீண்டும் புகைப்படம்எடுப்போம் -சேமிப்போம்.
இதனால் முதலில் எடுத்தஅதே புகைப்படங்கள்
மீண்டும் நமது கம்யூட்டரில் சேமிக்க
வாய்ப்புள்ளது. ஒரே மாதிரியான புகைப்படங்கள் ஒரு
போல்டரில் ஒரு பெயரிலும் - மற்றோரு போல்டரில்-
மற்றொருடிரைவில் ஒரு பெயரிலும் இருக்கும்.
இரண்டு புகைப்படங்களைதேடி எடுத்து பார்த்து
அதை நீக்குவது மிக கடினம். ஒன்றிரண்டு
புகைப்படங்கள் என்றால் சரி. இதுவே நூற்றுக்கணக்கில்
இருந்தால் மிக கடினம். இந்த குறையை நீக்கவே இந்த
சாப்ட்வேர் உதவுகின்றது. இது ஒரே மாதிரியான இரு
புகைப்படங்களை தேர்வு செய்து அதை எளிதில் நீக்க
பயன்படுகின்றது.இதை பதிவிறக்கம் செய்ய இங்கு
கிளிக் செய்யவும்.இது 600 கே.பி. அளவுதான்.

இதை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும்
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் முதலில் உள்ள Method என்கின்ற டேப்
தேர்வாகி இருக்கும். அதில் இரண்டாவதாக உள்ள
Compare images between two datafiles என்கின்ற ரேடியோ
பட்டனை கிளிக் செய்யவும்.

அடுத்து Get Data என்கின்ற டேபை கிளிக் செய்யவும்.
அதில் முதல் போல்டரை தேர்வு செய்ய Build டேபை
கிளிக் செய்யவும். கீழ்கண்ட விண்டோவினை பாருங்கள்.

உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதிலிருந்து உங்கள் புகைப்பட போல்டரை தேர்வு செய்யவும்.
அடுத்த போல்டரை தேர்வு செய்யSecondary Data File-ல்
மீண்டும் முன்பு போலவே செய்யவும். அடுத்து
Find Dubs டேபை கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்.


இரண்டு படங்களுக்குள் எத்தனை சதவீதம் சரியாக இருக்க
வேண்டும் என்பதை இந்த சாப்ட்வேருக்கு நாம் தெரிவிக்க
வேண்டும்.உதாரணத்திற்கு நாம் முதல் புகைப்படத்திற்கும்
அடுத்த புகைப்படத்திற்கும் 90 % to 100 % என தெரிவித்தால்
ஒரே மாதிரியாக இருக்கும் பிக்ஸல்கள் 90 சதவீததிற்கு
அதிகமிருந்தால் இந்த சாப்ட்வேர் நமக்கு சுட்டி காண்பிக்கும்.
எனவே உங்களது அளவை குறிப்பிடுங்கள்.அடுத்து இதில்
Setup என்கின்ற டேபை அழுத்துங்கள். உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்.

உங்களுக்கு தேவையான விவரங்களை இதில் பூர்த்தி
செய்யுங்கள்.ஓ.கே. கொடுங்கள்.
அடுத்து உள்ள Find Dubs டேபை கிளிக் செய்யுங்கள்.
சிறிது நேரம் காத்திருந்தபின் உங்களுக்கு
கீழ்கண்டவிண்டோ ஓப்பன் ஆகும்.


இதில் முதல் புகைப்படமும் இரண்டாவது புகைப்படமும்
தேர்வாகிஉள்ளதை காணலாம். இதில் எந்த புகைப்படம்
நமக்கு தேவையில்லையோ அதை டெலி்ட் செய்துவிடுங்கள்.
இதைப்போலவே ஒன்றாக உள்ள அனைத்து புகைப்படங்களை
யும் நாம் பார்த்து நீக்கிவிடலாம்.
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

JUST FOR JOLLY PHOTOS:-


இங்கேதான் ஒரு குருவி இருந்தது. அது எங்கே பொச்சேனு
தெரியலையே...?
ன்றைய பதிவிற்கான PSD புகைப்படம் கீழே:-

டிசைன்செய்தபின் வந்த படம் கீழே:-இந்த டிசைனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதுவரை இரட்டை புகைப்படங்களை நீக்கியவர்கள்:-
web counter
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

18 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

அருமை .. நன்று ..

Is it possible that we can delete the other file file formats too like word, PDF , AVI?

Thomas Ruban said...

பதிவுக்கு நன்றி சார்.

வேலன் சார் ஒரு உதவி, ஓரளவு குறைந்த விலையில்,நல்ல தரமான டிஜிட்டல் கேமரா வாங்குவது என்றால் உங்கடைய சிபாரிசு (அறிவுரை )என்ன சார்?. நன்றி...

வேலன். said...

குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...
அருமை .. நன்று ..

Is it possible that we can delete the other file file formats too like word, PDF , AVI?//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே....
Is it possible that we can delete the other file file formats too like word, PDF , AVI?
அதெல்லாம் ஒன்றும் பிரச்சனையில்லை..பார்த்துக்கலாம்..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Thomas Ruban கூறியது...
பதிவுக்கு நன்றி சார்.

வேலன் சார் ஒரு உதவி, ஓரளவு குறைந்த விலையில்,நல்ல தரமான டிஜிட்டல் கேமரா வாங்குவது என்றால் உங்கடைய சிபாரிசு (அறிவுரை )என்ன சார்?. நன்றி.//

எங்கே நண்பரே...சிலநாட்களாக கருத்துரையின் பக்கம் காணவில்லை...நான் KODAK C310 உபயோகிக்கின்றேன்.பதிவில் வரும் புகைப்படங்கள் எல்லாம் அதில் எடுத்ததுதான்.சற்று கூடுதல் விலையில் வேண்டுமானால் NIKAN D 40 வாங்கலாம். அதன் மாடல் விவரம் காண இங்கே
http://www.popphoto.com/Reviews/Cameras/Camera-Test-Nikon-D40x சென்று பார்க்கவும்.இன்னும் விலை அதிகமாக வேண்டுமானால் NIKAN D300
வாங்கலாம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

ஹாலிவுட் பாலா said...

மிக்க நன்றி வேலன். கொஞ்ச நாள் முன்னாடியே இதை யாரோ எழுதியிருந்தாங்க (நீங்களா கூட இருக்கலாம் :) ). கண்டுபிடிக்க முடியலை.

சரியான சமயத்தில்.. உங்கள் பதிவு! :)

ரோஸ்விக் said...

எனக்கு இது உதவியாக இருக்கும் நண்பரே. மிக்க நன்றி தங்களின் பகிரிவிற்கு. :-)

Thomas Ruban said...

//எங்கே நண்பரே...சிலநாட்களாக கருத்துரையின் பக்கம் காணவில்லை//
வேலை(ஆனி பிடுங்கிற) இருந்தால், ஓட்டு மட்டும். ஒய்வாக இருந்தால், கருத்துரையும். ஆனால் கண்டிப்பாக உங்கள் பதிவுகளை படிக்க தவறமாட்டேன் வேலன் சார். நன்றி...

//நான் KODAK C310 உபயோகிக்கின்றேன்.பதிவில் வரும் புகைப்படங்கள் எல்லாம் அதில் எடுத்ததுதான்.சற்று கூடுதல் விலையில் வேண்டுமானால் NIKAN D 40 வாங்கலாம். அதன் மாடல் விவரம் காண இங்கே
http://www.popphoto.com/Reviews/Cameras/Camera-Test-Nikon-D40x சென்று பார்க்கவும்.இன்னும் விலை அதிகமாக வேண்டுமானால் NIKAN D300
வாங்கலாம்.//

தகவலுக்கு நன்றி வேலன் சார்.

Malu said...

Very Nice!

யூர்கன் க்ருகியர் said...

THX

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

எனக்குத் தேவையான பதிவு!
தரவிறக்கவுள்ளேன்.
நன்றி!

வேலன். said...

ஹாலிவுட் பாலா கூறியது...
மிக்க நன்றி வேலன். கொஞ்ச நாள் முன்னாடியே இதை யாரோ எழுதியிருந்தாங்க (நீங்களா கூட இருக்கலாம் :) ). கண்டுபிடிக்க முடியலை.

சரியான சமயத்தில்.. உங்கள் பதிவு! :)//

நன்றி பாலா...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ரோஸ்விக் கூறியது...
எனக்கு இது உதவியாக இருக்கும் நண்பரே. மிக்க நன்றி தங்களின் பகிரிவிற்கு. :-)//

நன்றி ரோஸ்விக் அவர்களே...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Thomas Ruban கூறியது...
//எங்கே நண்பரே...சிலநாட்களாக கருத்துரையின் பக்கம் காணவில்லை//
வேலை(ஆனி பிடுங்கிற) இருந்தால், ஓட்டு மட்டும். ஒய்வாக இருந்தால், கருத்துரையும். ஆனால் கண்டிப்பாக உங்கள் பதிவுகளை படிக்க தவறமாட்டேன் வேலன் சார். நன்றி...

//நான் KODAK C310 உபயோகிக்கின்றேன்.பதிவில் வரும் புகைப்படங்கள் எல்லாம் அதில் எடுத்ததுதான்.சற்று கூடுதல் விலையில் வேண்டுமானால் NIKAN D 40 வாங்கலாம். அதன் மாடல் விவரம் காண இங்கே
http://www.popphoto.com/Reviews/Cameras/Camera-Test-Nikon-D40x சென்று பார்க்கவும்.இன்னும் விலை அதிகமாக வேண்டுமானால் NIKAN D300
வாங்கலாம்.//

தகவலுக்கு நன்றி வேலன் சார்.//

நன்றி நண்பரே....

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Malu கூறியது...
Very Nice!//

நன்றி சகோதரி ....

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

யூர்கன் க்ருகியர் கூறியது...
THX//

தங்களின் நீண்ட கருத்துக்கு நன்றி நண்பரே....

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

யோகன் பாரிஸ்(Johan-Paris) கூறியது...
எனக்குத் தேவையான பதிவு!
தரவிறக்கவுள்ளேன்.
நன்றிஃஃ

நன்றி நண்பரே...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வாழ்க வளமுடன்,
வேலன்.

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் said...

Dear Velan Sir,

Use full prog. Thank you very much.

Best wishes
Muthu Kumar.N

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
Dear Velan Sir,

Use full prog. Thank you very much.

Best wishes
Muthu Kumar.N//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
என்றும் அன்புடன்,
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...