வேலன்:-மைக்ரோசாப்ட் ஆபிஸ்க்கு பதிலாகபஞ்ச தந்திரம் படத்தில் ஒரு வசனம் வரும்:-
"சின்ன கல்லு - பெத்த லாபம்"என்று. வைரம்
சிறியதுதான் ஆனால் அதன் மதிப்பு அதிகம்.
அதுபோல் இந்த சாப்ட்வேர் 3 எம்.பி.தான்.ஆனால்
இதன் உபயோகம் அளவிட முடியாது.
மைக்ரோசாப்ட் ஆபிஸ் நாம் உபயோகித்தாலும்
அதில் உள்ள வசதிகளை நாம் தேடிதேடி பெறவேண்டும்.
பெரும்பாலும் யாருக்கு என்ன தேவையோ அதை
இந்த பிராசசரில் எளிதாக பெறலாம்.
வார்த்தைகளை,பத்திகளை,பக்கங்களை எளிதாக
ஃபார்மெட்செய்ய முடியும். எழுத்துப்பிழைகளை
சரிபார்க்கும் Spell Checkingவசதி உண்டு. மேலும்
Dictionaryமற்றும் Theasaurus வசதியும் இதில் உண்டு.
இந்த சாப்ட் வேரை டவுண்லோடு செய்ய இங்கு
கிளிக் செய்யவும்.இதை நீங்கள் இன்ஸ்டால்
செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்
ஆகும்.


இதில் உள்ள முதல் பட்டனை கிளிக் செய்ய உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் முதலில் உள்ள New அல்லது Ctrl+N கிளிக்
செய்ய உங்களுக்கு புதிய விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் என்ன வசதியென்றால் நீங்கள் விண்டோக்கள்
எந்தனை வேண்டமானாலும் திறந்து கொள்ளலாம்.
தனிதனியே இருபது கடிதங்கள் வேண்டுமா -
அத்தனை விணடோக்களையும் திறந்து கொள்ளலாம்.
எக்ஸெல்லில் தனித்தனியாக ஷீட் நீங்கள் உபயோ
கித்திருப்பீர்கள் அதுபோல் இதில் வசதி உள்ளது.
நீங்கள் பைலை தயார் செய்து விட்டீர்கள்.
இனி அதை டெம்ளேட்டாகவோ - பிடிஎப் ஆகவோ -
எச்டிஎம் எல் ஆகவோ மாற்றலாம்.கீழே உள்ள
விண்டோவை பாருங்கள்.


பிடிஎப் பைலாக மாற்ற:-

மேலும் இதில் உள்ள பைல் ஆப்ஷன் பயன் படுத்தி
உங்கள் பைல் எத்தனை நிமிடங்களுக்கு ஒரு முறை
சேவ் ஆகவேண்டும் என நிர்ணயிக்கலாம்.


இரண்டாவதாக மூன்றாவதாக உள்ள பட்டனை கிளிக்
செய்து தேவையான வசதிகளை பெறலாம்.

நான்காவதாக உள்ள பட்டனை கிளிக் செய்ய உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Spell Check கிளிக் செய்து வார்த்தைகளின்
எழுத்துக்களை சரிபார்த்துக்கொள்ளலாம்.

ஐந்தாவதாக உள்ள பட்டனை கிளிக் செய்தால் உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


இதில் உள்ள Minimal Layout கிளிக் செய்ய சாதாரண
லேஅவுட்டும் Classic Layout கிளிக் செய்யகீழ்கண்டலேஅவுட் ஓப்பன் ஆகும்.மேலும் இதில் ஆபிஸில் உள்ள ரூலர் முதல் கொண்டு அனைத்
தையும் கொண்டுவரலாம். அடுத்துள்ள பட்டனை கிளிக்
செய்ய உங்களுக்கு உங்கள் பைலில் உள்ள Document Counts
எளிதாக கிடைக்கும்.


அடுத்துள்ளது மேனேஜ் டேப் மூலம் எந்த டேப்புக்கும்
நீங்கள் எளிதாக செல்லலாம்.
அடுத்துள்ளது Zoom settings. கீழ்கண்ட விண் டோவை
பாருங்கள்.தேவையான அளவை செட் செய்திடலாம்.

அடுத்துள்ளது டைம் மற்றும் டேட் செட் டிங். அன்றைய
தேதியை யும் டைமையும் எளிதாக செட் செய்திடலாம்.


அடுத்துள்ளது Font செட்டிங்கஸ் . கீழே உள்ள விண்டோவை
பாருங்கள்.தேவையானதை தேர்வு செய்யலாம்.


அடுத்துள்ளது அலைன்மெண்ட் . தேவையானதை
தேர்வு செய்துகொள்ளலாம்.


அடுத்து இதில் கேமராவும் உள்ளது. ஸ்கிரினில் உள்ள
படத்தை நாம் எடுத்து இந்த பைலில் சேர்த்துவிடலாம்.
கீழ்கண்ட விண்டோவை பாருங்கள்.இதன் மூலம் நான் எடுத்த படம் கீழே:-


கடைசியாக உள்ள பட்டனை கிளிக் செய்து வேண்டிய
விவரங்களை பெறலாம்.


பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
இந்த கட்டுரையை எழுதி முடிக்கஎனக்கு நான்கு
மணிநேரம் ஆனது.நான்கு பேர் அதனால் பயன்பெற்றால்
எனக்கு மகிழ்ச்சியே....

வாழ்க வளமுடன்,

வேலன்.JUST FOR JOLLY PHOTOS:-


என்னுடைய பிஸ்கட்டை நீ சாப்பிடவில்லையென்று
இப்போ ஓப்புக்கொள்கின்றேன்.
இன்றைய பதிவிற்கான PSD படம் கீழே:-


டிசைன் செய்தபின் வந்த படம் கீ்ழே:-

இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.

மைக்ரோசாப்ட் ஆபிஸ்க்கு பதிலாக இந்த சாப்ட்வேர்
உபயோகித்தவர்கள் இதுவரை:-
web counter
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

14 comments:

Thomas Ruban said...

மூர்த்தி சிறியது கீர்த்தி பெரியது என்பது இதற்க்கு சரியாக பொருந்தும் பகிர்வுக்கு நன்றி சார்...

sakthi said...

அன்புள்ள வேலன் சார்,
தங்களது தொடர் வாசகன் நான்.எல்லா பதிவுகளும் மிக பயனுள்ளதாக உள்ளது .இங்கிலீஷ் டு தமிழ் translator மென்பொருள் உள்ளதா.?if i give any English para it should be translated in Tamil para.pls try to give.

ராஜவம்சம் said...

பதிவிற்கும் பகிற்வுகும் நன்றி

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் said...

வேலன் சார்,

கலக்கிட்டீங்க மிக அருமையான மென்பொருள்,

சிறியதாயிருப்பினும் அரியதாக உள்ளது,

அரியதாக இரு்ப்பினும் மிகச் சிறந்ததாக இருக்கிறது.

இத்தகைய மென்பொருளை அறியத் தந்ததிற்கு நன்றிகள் பல சொல்ல கடமைப்பட்டுள்ளோம் என்றும் உங்களுக்கு.

வளர்க உங்கள் பணி.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

thiruthiru said...

எல்லாம் நன்றாக இருக்கிறது. ஆனால், ஒருங்குறி (unicode support) ஏற்கவில்லையே? அது பெரிய குறை அல்லவா? திரு வேலன் அதையும் சோதித்துப் பார்த்திருக்கலாமே!

வேலன். said...

Thomas Ruban கூறியது...
மூர்த்தி சிறியது கீர்த்தி பெரியது என்பது இதற்க்கு சரியாக பொருந்தும் பகிர்வுக்கு நன்றி சார்.//

மூர்த்தி எனது சகோதரர் பெயர் அதனால் தான் மரியாதை நிமித்தம் அவர் பெயரை குறிப்பிடவில்லை...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

Malu said...

Super Software. Thank you for sharing.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

பகிர்வுக்கு நன்றி. பயன்படுத்திப் பார்க்க ஆவலாயுள்ளேன்.

வேலன். said...

sakthi கூறியது...
அன்புள்ள வேலன் சார்,
தங்களது தொடர் வாசகன் நான்.எல்லா பதிவுகளும் மிக பயனுள்ளதாக உள்ளது .இங்கிலீஷ் டு தமிழ் translator மென்பொருள் உள்ளதா.?if i give any English para it should be translated in Tamil para.pls try to give.//

நன்றி சக்தி அவர்களே...தமிழில் ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் வருமே...
மொழிமாற்றம் சிரமமே...ஆனால் தமிழில் படிக்கும் சாப்ட்வேர் உள்ளது..
தமிழ்-ஆங்கிலம் அகராதி உள்ளது.ஆங்கில வார்த்தைக்கு தமிழ் வார்த்தை தெரிந்துகொள்ளலாம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ராஜவம்சம் கூறியது...
பதிவிற்கும் பகிற்வுகும் நன்றி//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜவம்சம் அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
வேலன் சார்,

கலக்கிட்டீங்க மிக அருமையான மென்பொருள்,

சிறியதாயிருப்பினும் அரியதாக உள்ளது,

அரியதாக இரு்ப்பினும் மிகச் சிறந்ததாக இருக்கிறது.

இத்தகைய மென்பொருளை அறியத் தந்ததிற்கு நன்றிகள் பல சொல்ல கடமைப்பட்டுள்ளோம் என்றும் உங்களுக்கு.

வளர்க உங்கள் பணி.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்//

தங்கள் வருகைக்கும் சிறந்த ஆலோசனைக்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
என்றும் அன்புடன்,
வேலன்.

வேலன். said...

thiruthiru கூறியது...
எல்லாம் நன்றாக இருக்கிறது. ஆனால், ஒருங்குறி (unicode support) ஏற்கவில்லையே? அது பெரிய குறை அல்லவா? திரு வேலன் அதையும் சோதித்துப் பார்த்திருக்கலாமே//
3 எம்.பி. அதுவும் இலவசம். அதற்கு மேல் என்ன எதிர்பார்க்க முடியும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாழ்க வளமுடன்,
வேலன்.

simbu said...

Dear Velan sir,

Thanks sir...

Very useful...

வேலன். said...

simbu கூறியது...
Dear Velan sir,

Thanks sir...

Very useful..//

நன்றி சிம்பு சார்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....
வாழ்க வளமுடன்,
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...