நாம் எப்போதும்இணைய இணைப்பிலேயே இருப்போம்
என சொல்ல முடியாது. அவசர வேலையாக வெளியில்
செல்ல நேரிடலாம். இரண்டு நாள் - மூன்று நாள் வெளியூர்
செல்ல நேரிடலாம். அதுபோல் சமயங்களில் நமக்கு
வரும் இ-மெயில் கடிதங்களுக்கு ரெடிமேட் பதில்களை
அனுப்புமாறு ஜி-மெயிலில் செட் செய்திடலாம்.
இந்த செட்டிங்கை நாம் செய்துவிட்டவுடன் மற்றவர்கள்
நமக்கு மெயில் அனுப்பினால் அவர்களுக்கு நாம்
ரெடிசெய்து வைத்துள்ள தகவல் உடனே சென்று சேரும்.
நாம் நமது மெயிலை ஓப்பன் செய்து பார்க்கும் வரையில்
-ஒருவரே நமக்கு தொடர்ந்து அதே மெயில் முகவரியில்
மெயில் அனுப்பிகொண்டிருந்தால் முதலில் நாம்
தயார் செய்த பதில் சென்று சேரும். அடுத்த ரெடிமேட்
பதில் மீண்டும் நான்கு நாட்களுக்கு பிறகே சென்று சேரும்.
அதே நபர் வேறு மெயில் முகவரியில் மெயில் அனுப்பினால்
அவருக்கு ரெடிமேட் பதில் சென்று சேரும். இந்த செட்டிங்
எல்லாம் நாம் மெயில் திறந்து பார்க்கும் வரைதான்.
மீண்டும் நாம் மெயில் விட்டு வெளியேறுகையில் விருப்ப
பட்டால் செட்டிங்கை சேவ் செய்துவிட்டு செல்லாம்.
சரி இதை எப்படி செட் செய்வது. உங்கள் ஜி-மெயில்
திறந்துகொள்ளுங்கள். அடுத்து அதில் உள்ள செட்டிங்ஸ்
கிளிக் செய்து வரும் விண்டோவில் General கிளிக்
செய்யுங்கள். அதில் கீழ் உள்ள இந்த விண்டோவை
பாருங்கள். இதில் Out of Office AutoReply on எதிரில் உள்ள
ரேடியோ பட்டனை தேர்வு செய்து இதில் உள்ள
Subject மற்றும் Message -ல் விரும்பிய வார்த்தைகளை
தட்டச்சு செய்து இறுதியில் Save Changes கிளிக் செய்து
வெளியேறுங்கள்.
Out of Office AutoReply: (sends an automated reply to incoming messages. If a contact sends you several messages, this automated reply will be sent at most once every 4 days) Learn more |
|
நான் தமிழில் கீழ்கண்டவாறு தட்டச்சு செய்துள்ளேன்.
ஆங்கிலத்தில் தட்டச்சு செய்த விவரம் கீழே:-
Sir/Madam,
Thank you for writing to me
This is a computer generated acknowledgement of your email.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Thank you for writing to me
This is a computer generated acknowledgement of your email.
We would revert to you at the earliest.
Regards,
Velan.
Regards,
Velan.
பதிவினை பாருங்கள். அடுத்த பதிவில சந்திக்கலாம்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
இன்றைய பதிவற்கான PSD புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-
இதை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
ஜி-மெயிலில் இதுவரை ரெடிமேட் மெஸேஜ் செட் செய்தவர்கள்:-
8 comments:
நல்ல தகவல் நண்பரே..
கூகுள் லேப்ஸில் முன்பே அறிந்திருந்தாலும்...
தமிழில் தங்கள் விளக்கம் மேலும் பயனுள்ளதாக அமைந்தது..
nice ..
- Juergen Kruger
THANK YOU
வேலன் சார்,
நல்ல தகவல், நிச்சயம் எல்லோருக்கும் பயன்படும்.
வளர்க உங்கள் பணி.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்
முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
நல்ல தகவல் நண்பரே..
கூகுள் லேப்ஸில் முன்பே அறிந்திருந்தாலும்...
தமிழில் தங்கள் விளக்கம் மேலும் பயனுள்ளதாக அமைந்தது.//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...தமிழுக்கு உங்களை போன்றவர்களின் ஆதரவு எனக்கு தேவை
வாழ்க வளமுடன்,
வேலன்.
பெயரில்லா கூறியது...
nice ..
- Juergen Kruger//
பெயரில்லா நண்பர் ஜீர்கன் குர்கேர் அவர்களே.்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....
வாழ்க வளமுடன்.
வேலன்.
THANGA MANI கூறியது...
THANK YOU//
தங்கமணி சார் நீண்ட நாட்களுக்கு பிறகு பதிவிற்கு வந்துள்ளீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்:,
வேலன்.
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
வேலன் சார்,
நல்ல தகவல், நிச்சயம் எல்லோருக்கும் பயன்படும்.
வளர்க உங்கள் பணி.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்//
தங்கள் ஆசிர்வாதமும் அன்பும் மட்டும் போதும்...நிறைய பணி செய்வேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்...
வாழ்க வளமுடன்,
என்றும் அன்புடன்,
வேலன்.
Post a Comment