வேலன்:-போட்டோஷாப் -குளோன் ஸ்டாம்ப் டூல் -தொடர்ச்சி.

போட்டோஷாப்பில் சென்ற பதிவில் Clone Stamp Tool பற்றி பார்த்தோம். இந்த பதிவிலும் அதன் தொடர்ச்சியை பார்க்கலாம்.இந்த பதிவு மொத்தம் செய்முறை பயிற்சியே...சென்ற பதிவை பார்க்காமல் விட்டவர்கள் இங்கு கிளிக் செய்து பார்த்துக்கொள்ளவும். சாதாரணமாக முகத்தில் மேடு பள்ளங்கள் ஏற்படுவது சகஜமே...இந்த படத்திலும் உள்ள சிறு பள்ளத்தை எப்படி நீ்க்குவது என்று பார்க்கலாம்.
 குளோன் ஸ்டாம்ப் டூல் ஐ முதலில் தேர்வு செய்து பின்னர் முகத்திலேயே நன்றாக உள்ள இடத்தில்  தேர்வு செய்து Alt Key யை அழுத்திய பின்னர் பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்து கர்சரை அழுத்தியவாறு மெதுவாக தேய்க்கவும். பள்ளம் மறைவதை காணலாம்.கீழே உள்ள படத்தை பாருங்கள். 
ரோஜா செடியில் இரண்டு பூக்கள் மலர்ந்துள்ளதை கீழே பார்க்கலாம்.

அதே பூக்களை செடிநிறைய பூத்துள்ளதாக மாற்றி அமைக்கலாம். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பார்கள். இங்கு பாருங்கள். நான் படம்பிடித்த குரங்குக்கு ஐந்து கால்கள் உள்ளது.
உண்மையில் அதற்கு நான்கு கால்கள் தான். போட்டோஷாப் உதவியில் அதற்கு எக்ஸ்ட்ரா ஒரு கால் வரைந்துள்ளேன்.அதன் ஒரிஜினல் புகைப்படம் கீழே:-(அடையாளம தெரியாமல் இருப்பதற்காக அது முகத்தை திருப்பிகொண்டுள்ளது)
கீழே உள்ள சிறுமியின் புகைப்படம் பாருங்கள்.
சிறுவனின் புகைப்படத்தையும் பாருங்கள்.:-
இரண்டுபேரின் முகத்தையும் ஒன்றாக ஆக்கியதால் வந்த புகைப்படம் கீழே:-
குளோனிங் மூலம் புதிய முகம் கிடைத்ததா..? இதுபோல் உங்கள் கற்பனையை உபயோகித்து என்ன வேண்டுமானாலும் செய்து பாருங்கள். பதிவின் நீளம் கருதி இத்துடன முடித்துக்கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
சீக்கிரம் பறந்து வா...கொஞ்ச தூரத்தில் அமெரிக்காவில் உள்ள அக்கா வீடு வந்துவிடும்.நமக்கு தேவையான உதவியை அக்கா செய்வார்கள்....
இன்றைய PSD டிசைன்புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

23 comments:

ஜெய்லானி said...

அட சூப்பரா இருக்கே

ஜெய்லானி said...

நல்ல வேளை குரங்குக்கு ரெண்டு வால வைக்காம போனீங்க.

Muhammad Ismail .H, PHD., said...

@ வேலன்ஜி,

ஒஹோ, பாங்காக் ஒற்றைத்தலை பாம்பிற்கு இந்த குளோன் ஸ்டாம்ப் டூல் வாயிலாக ஐந்து தலை வைத்து, அதை சத்தியமங்கல காட்டிலும், பிறகு கர்நாடக மாநில குக்கே சுப்ரமணிய கோவில் நடையிலும் விட்ட நபர் நீங்கள் தானா? :-)

பாங்காக் ஒற்றைத்தலை பாம்பு இங்கே ..

அதே பாம்பு போட்டோ ஷாப்பினால் பரிணாம வளர்ச்சியடைந்த பிறகு இங்கே ...

ஐந்து தலையுடன் இணையத்தில் இங்கெல்லாம் அது ஊர்கிறது ...

சும்மா ஒரு விளையாட்டுக்கு சொன்னேன். ஆனால் இது சரியான நேரத்தில் வந்த மிகச்சரியான இடுகை. போட்டோ ஷாப்பின் சாத்தியக்கூறினை இதை விட அழகாக விளக்க இயலாது. உங்களின் முயற்சிக்கு எங்களின் வாழ்த்துக்கள். நன்றி.

with care & love,

Muhammad Ismail .H, PHD.,

மாணவன் said...

வேலன் சார்,

பிரமாதம் சார் போட்டோஷாப் பாடங்கள்

ஒவ்வொரு விளக்கமும் அருமை

நன்றி சார்

தொடரட்டும் உங்கள் பணி.....

ப்ரியமுடன்
உங்கள் ரவிசிலம்பரசன்.BBA

Engineering said...

அருமை நண்பரே.... கலக்குங்கள்.....

Thomas Ruban said...

அருமையான விளக்கமான புரியும்படியான பதிவுகள் நன்றி சார்.

//குளோன் ஸ்டாம்ப் டூல் ஐ முதலில் தேர்வு செய்து பின்னர் முகத்திலேயே நன்றாக உள்ள இடத்தில் தேர்வு செய்து Alt Key யை அழுத்திய பின்னர் பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்து கர்சரை அழுத்தியவாறு மெதுவாக தேய்க்கவும். பள்ளம் மறைவதை காணலாம்//

வேலன் சார் இதனால்,நன்றாக உள்ள இடத்தில் பாதிப்பு எதுவும் வராத?

பதிவுக்கு நன்றி சார்.

பூக்காதலன் said...

தங்களது தொண்டிற்கு நன்றி.
தங்களது பதிவுகள் அப்படியே இங்கு (http://eelatamilan0702.blogspot.com) பதியப்படுகின்றன.
தங்களின் அனுமதியின் பெயரிலா?

Chitra said...

நீங்கள் ஒரு danger ஆன ஆளு...... போட்டோஸ்லேயே இத்தனை தில்லாலங்கடி வேலை காட்டி விட்டீர்களே! அதுக்கும் மேல சைலன்டா "அக்கா" என்று ஜாலி போட்டோ கமென்ட் போட்டு உங்களை "யூத்" ஆக்கி, தில்லு முல்லு பண்ணி இருக்கீங்க........ அடேங்கப்பா......!!!

Menaga Sathia said...

//நல்ல வேளை குரங்குக்கு ரெண்டு வால வைக்காம போனீங்க.// ha ha...

வேலன். said...

ஜெய்லானி கூறியது...
அட சூப்பரா இருக்கே\\

நன்றி ஜெய்லானி சார்...
வாழ்க வளமுடன்,

வேலன்.

வேலன். said...

ஜெய்லானி கூறியது...
நல்ல வேளை குரங்குக்கு ரெண்டு வால வைக்காம போனீங்க.//

அந்த ஐடியாவும் முதலில் இருந்தது.
அப்புறம் வேண்டாம் என விட்டுவிட்டேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

www.koothanallur.tk said...

Dear Mr.Velan,

You are really a expert in Photoshop. A man should have a good heart to share with others what he knows. you have such good thinking. Best wishes. You have lots of fans.

Regards
noor
www.koothanallur.tk

Unknown said...

Muhammad Ismail .H, PHD., கூறியது...
@ வேலன்ஜி,

ஒஹோ, பாங்காக் ஒற்றைத்தலை பாம்பிற்கு இந்த குளோன் ஸ்டாம்ப் டூல் வாயிலாக ஐந்து தலை வைத்து, அதை சத்தியமங்கல காட்டிலும், பிறகு கர்நாடக மாநில குக்கே சுப்ரமணிய கோவில் நடையிலும் விட்ட நபர் நீங்கள் தானா? :-)

பாங்காக் ஒற்றைத்தலை பாம்பு இங்கே ..

அதே பாம்பு போட்டோ ஷாப்பினால் பரிணாம வளர்ச்சியடைந்த பிறகு இங்கே ...

ஐந்து தலையுடன் இணையத்தில் இங்கெல்லாம் அது ஊர்கிறது ...

சும்மா ஒரு விளையாட்டுக்கு சொன்னேன். ஆனால் இது சரியான நேரத்தில் வந்த மிகச்சரியான இடுகை. போட்டோ ஷாப்பின் சாத்தியக்கூறினை இதை விட அழகாக விளக்க இயலாது. உங்களின் முயற்சிக்கு எங்களின் வாழ்த்துக்கள். நன்றி.

with care & love,

Muhammad Ismail .H, PHD.,//

தங்கள் நீண்ட வாழ்த்துக்கு நன்றி நண்பரே...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

DJ.RR.SIMBU.BBA-SINGAI கூறியது...
வேலன் சார்,

பிரமாதம் சார் போட்டோஷாப் பாடங்கள்

ஒவ்வொரு விளக்கமும் அருமை

நன்றி சார்

தொடரட்டும் உங்கள் பணி.....

ப்ரியமுடன்
உங்கள் ரவிசிலம்பரசன்.BBA//

நன்றி சிலம்பரசன்...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

Engineering கூறியது...
அருமை நண்பரே.... கலக்குங்கள்.....//

நன்றி சரவணன் சார்...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

Thomas Ruban கூறியது...
அருமையான விளக்கமான புரியும்படியான பதிவுகள் நன்றி சார்.

//குளோன் ஸ்டாம்ப் டூல் ஐ முதலில் தேர்வு செய்து பின்னர் முகத்திலேயே நன்றாக உள்ள இடத்தில் தேர்வு செய்து Alt Key யை அழுத்திய பின்னர் பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்து கர்சரை அழுத்தியவாறு மெதுவாக தேய்க்கவும். பள்ளம் மறைவதை காணலாம்//

வேலன் சார் இதனால்,நன்றாக உள்ள இடத்தில் பாதிப்பு எதுவும் வராத?

பதிவுக்கு நன்றி சார்.//

நன்றி தாமஸ்ரூபன் சார்...அதனால் எந்த பாதிப்பும் வராது...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

பூக்காதலன் கூறியது...
தங்களது தொண்டிற்கு நன்றி.
தங்களது பதிவுகள் அப்படியே இங்கு (http://eelatamilan0702.blogspot.com) பதியப்படுகின்றன.
தங்களின் அனுமதியின் பெயரிலா?//

இல்லை நண்பரே...எனது பதிவையும் - புகைப்படத்தையும் எடுத்துப்போட்டு நண்பர் பெயரை போட மறந்துவிட்டார்போலும்...தளத்தை சுட்டி காட்டியமைக்கு நன்றி...வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
நீங்கள் ஒரு danger ஆன ஆளு...... போட்டோஸ்லேயே இத்தனை தில்லாலங்கடி வேலை காட்டி விட்டீர்களே! அதுக்கும் மேல சைலன்டா "அக்கா" என்று ஜாலி போட்டோ கமென்ட் போட்டு உங்களை "யூத்" ஆக்கி, தில்லு முல்லு பண்ணி இருக்கீங்க........ அடேங்கப்பா......!!!//
கிளிகளுக்குதான் அக்கா...எனக்கு தங்கச்சி தான் சரியா....தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

Mrs.Menagasathia கூறியது...
//நல்ல வேளை குரங்குக்கு ரெண்டு வால வைக்காம போனீங்க.// ha ha...//

அப்படியும் யோசித்தேன்...அப்பறம் வேண்டாம் என விட்டுவி்ட்டேன்.தங்கள் வருகைக்கு நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

Noor கூறியது...
Dear Mr.Velan,

You are really a expert in Photoshop. A man should have a good heart to share with others what he knows. you have such good thinking. Best wishes. You have lots of fans.

Regards
noor
www.koothanallur.tk//

நன்றி நூர் சார்...தங்கள் வாழ்த்துக்கு நன்றி வாழ்க வளமுடன்.வேலன்.

சசிகுமார் said...

//சீக்கிரம் பறந்து வா...கொஞ்ச தூரத்தில் அமெரிக்காவில் உள்ள அக்கா வீடு வந்துவிடும்.நமக்கு தேவையான உதவியை அக்கா செய்வார்கள்..//

யாரு நம்ம சித்ரா அக்காவா, நல்ல பதிவு நண்பரே உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Muhd Niyaz said...

அன்புமிகு வேலன் அவர்களுக்கு
நான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பாடம், தக்க நேரத்தில் பதிவு செய்துவிட்டீர்கள் மிக்க மகிழ்ச்சி
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்

நித்தி said...

நல்ல படைப்பு வேலன் சார்.....

//நல்ல வேளை குரங்குக்கு ரெண்டு வால வைக்காம போனீங்க.// ha ha...//

நியூ படத்தில மணிவண்ணன் சொன்னமாதிரி வேலன் சார் ரெண்டாக்க நினைத்தது வேறு...போட்டோஷாப்ல bug வந்து குரங்குக்கு இப்படியாகிவிட்டது இல்லையா வேலன் சார்......

Related Posts Plugin for WordPress, Blogger...