வேலன்:-Alarm -அலாரத்தில் திரைபட பாடல்கள் செட் செய்ய

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.எனது 300 ஆவது பதிவிற்கு வந்து வாழ்த்தியவர்களுக்கும்,ஒட்டு போட்ட அன்பு உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி....கோடை மழை கொண்டாட்டம் தொலைகாட்சியில் தான் வழங்குவார்களா என்ன? நாமும் கோடை மழை கொண்டாடலாம் வாங்க.இந்த மே மாதம் முடியும் வரை தினம் ஒரு பதிவை பதிவிடலாம் என உள்ளேன்.வழக்கமான PSD டிசைன் புகைப்படங்கள் கோடை மழை கொண்டாட்டம் முடிந்ததும் பதிவிடுகின்றேன்.இப்போது கோடைமழையை கொட்டாட மறக்காமல் தினம் வந்து விடுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

இன்றைய பதிவில் திரைப்பட பாடலைஅலாரமாக செட் செய்வதை பார்க்கலாம். வழக்கப்படி அலாரம் அடித்தால் நமக்கு விதவிதமான ஒலிகள் தான் கிடைக்கும் இந்த சாப்ட்வேரில் நாம் தட்டச்சு செய்த வாக்கியம் அலராமாக குரலில் ஒலிக்கும். நமது குரலில் பேசி அதை அலாரமாக ஒலிக்க செய்யலாம். திரைப்பட பாடலை அலாரமாக ஒலிபரப்ப செய்யலாம். சரி...இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும். 12 எம்.பி. அளவுள்ள இந்த சாப்ட்வேர் முற்றிலும் இலவசமே...

நீங்கள் உங்கள் கணிணியில் இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

அதில் முதலில் உள்ள Set Alarm கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும். அதில் நேரத்தையும் தேதியையும் பூர்த்தி செய்யுங்கள்.Enter the Reminder Test ல் உங்களுடைய டெக்ஸ்டை தட்டச்சு செய்யுங்கள்.குறிப்பிட்ட வேலையை உங்களுக்கு நினைவுபடுத்த அந்த வேலையை தட்டச்சு செய்து வைக்கலாம்.சரி..உங்களுக்கு டெக்ஸ்ட் பிடிக்கவில்லை. நீங்கள் பேசிய ஆடியோ அல்லது திரைப்பட பாடல்கள் வேண்டும் என்றாலும் இதில் செட் செய்து கொள்ளலாம். 
Use Music or sounds to remind me என்பதின் எதிரில் உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்ய உங்களுக்கு Select MP3 File or Select Wave File என்பதை தேர்வு செய்து பாடலையோ உங்கள் பேச்சையோ செட் செய்யுங்கள்.மேலும் Daily Alarm என்பதை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
இதில் கிழமையையும் டெக்ஸ்டையும் - பாடலையும் விருப்பபடி தேர்வு செய்யலாம்.Advance Alarm செட் செய்து வேவேறு தேதிகளையும் செட் செய்திடலாம். இதனால் திருமணம் - பிறந்த நாள் - முக்கிய நிகழ்ச்சிகளையும் குறித்து வைத்து நமக்கு நினைவுட்டும் படி செய்யலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில் 2999 வரை காலண்டர் உள்ளது.(அதுவரை இருப்போமா.?) கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில StopWatch  உள்ளது. கீழே உள்ள விண்டோவினை பாருங்கள் ஸ்டாப்வாட்ச் தேவைபடும் போது உபயோகித்துக்கொள்ளலாம். 
Active Alarm கிளிக் செய்வதன் மூலம் நாம் செட் செய்த தை பார்க்கலாம். தேவைபட்டால் ரீ - செட் செய்து கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில உள்ள Settings கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். தேவையான வசதியை பெற இங்குள்ள ரேடியோபட்டனை கிளிக்செய்வதன் மூலம் பெறலாம்.
Select the charactor மூலம் நான்கில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.அதைப்போல கெடிகாரத்தின் டைப்பை மாற்றிக்கொள்ளலாம் கீழே உள்ள விண்டோக்களை பாருங்கள்.
பயன்படுத்தி பாருங்கள்.கருத்தினை சொல்லுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

27 comments:

DJ.RR.SIMBU.BBA-SINGAI said...

வேலன் சார்,

வழக்கம்போலவே அசத்தல் பதிவு...

தினமும் ஒரு பதிவு (ஒன்னும் பன்னிக்க முடியாது)....

அசத்துங்க....

நன்றி சார்...

Anonymous said...

300வதுபதிவுகள். வாழ்த்துக்கள்!

இன்னும் பல ஆயிரம் பதிவுகள் பதிய வாழ்த்துக்கள்.!

அன்புடன் மஜீத்.

S Maharajan said...

வழக்கம்போலவே அசத்தல் பதிவு வேலன் சார்.

ஜெய்லானி said...

அவசியமான பதிவு. ஆபீசில் தூங்கும் போது சரியாக எழுப்பி விட உதவும்.
அதுல ‘’தூங்காதே தம்பி தூங்காதே’’பாட்டை போட போகிறேன்.ஹி..ஹி..

Chitra said...

jolly photo?????? நமக்கு வேலை இல்லாமல் செய்திட்டீங்களே...... அவ்வ்வ்வ்.......

Ganpat said...

Your services are really great,useful and informative.
Wishing you the 3000th pathivu very soon.
God Bless

கக்கு - மாணிக்கம் said...

தினமும் ஒரு பதிவா ...???? கொண்டாடுங்க மாப்ஸ்.
ஆமாம், போன வருஷம் நம்ம டவுசரு இதே மேரிக்கி
ஒரு பதிவு பொட்டு அத நானும் டவுனு லோடு பண்ணி
என் பொட்டில வச்சி அல்லாரும் செட் பண்ணா அடிக்கல ராசா!
அப்பறமா அலாரத்த கழட்டி கொஞ்சம் தேங்கா எண்ணைய வுட்டு
மாட்டி வுட்டேன். சரியா மாட்டாம அலாரம் கீழே உழுந்து ஒடஞ்சி பூடிச்சி
கண்ணு !!

Mohan said...

300 - வது பதிவுக்கு வாழ்த்துக்கள்! தொடருங்கள்.....
வாழ்க வளமுடன்!

Abarajithan said...

நண்பரே,

முதலில் முன்னூறு பதிவுகளுக்கு வாழ்த்துக்கள். உங்கள் பதிவுகளில் பலவற்றை சிலகாலமாக வாசித்து வருகின்றேன். அருமையாக இருக்கின்றன. ஆனாலும் ஒரு குறை...

நண்பரே நீங்கள் உங்கள் பதிவுகளை ஆர்.எஸ்.எஸ் இல் முழுமையாகத் தருவதில்லை. நீங்கள் என்ன காரணத்துக்காக இவ்வாறு செய்கிறீர்கள் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. ஆனால் உங்கள் இணையப்பக்க வருகையை அதிகரித்துக் கொள்வதற்காக இப்படிச் செய்வதாக இருந்தால் சற்று யோசிக்கவும்.

இந்த வலையுலகத்தில் ஆயிரக்கணக்கான பதிவர்கள் எழுதி வருகின்றனர். அவற்றில் பலநூறுபேர் சுவாரஸ்யமாக எழுதுவதோடு, பல புதிய செய்திகளையும் உடனுக்குடன் அறியத்தருகின்றனர். விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய ஒருசில மிகச்சிறந்த தொழிநுட்பப் பதிவர்களில் தாங்களும் ஒருவர் என்பது நிதர்சனமான உண்மையே. அதில் சந்தேகம் ஏதுமில்லை.

ஆனால் வாசகர்களாகிய நாம் தினமும் அதிகளவு நேரத்தைச் செலவிட்டு பலநூறு இணையத்தளங்களை ஒவ்வொன்றாக லோட் செய்து பார்ப்பது இயலாத காரியமாகும். இதன் காரணமாகவே பலரும் ஆர்.எஸ்.எஸ் ரீடர்களை பயன்படுத்தி வருகின்றோம் என்பது தாங்கள் அறிந்ததே.

உங்களுடைய பதிவுகள் அனைத்துமே புதிய செய்தியொன்றைக் கூறும் வகையில் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை. ஆனால் நாங்கள் உங்களை மட்டுமே வாசிக்க வேண்டும் என நீங்கள் நினைப்பது சரியல்ல. எனக்கு ரீடரில் தினமும் காலையில் கொட்டிக்கிடக்கும் நூற்றுக்கணக்கான செய்திகளை வாசிப்பதற்கு இரண்டு மணித்தியாலங்கள் எடுக்கின்றன. இந்நிலையில் உங்கள் இணையத்தளத்தை தினமும் லோட் செய்து பதிவுகளைப் படிப்பது இயலாத காரியம் என்பதை நீங்கள் உணரவேண்டும்.

அப்படி உங்களுக்கு வாசகர்களின் எண்ணிக்கை முக்கியமாக இருந்தால் முழுப்பதிவையும் ஆர்.எஸ்.எஸ் இல் கொடுத்துவிட்டு ஒரு ஆர்.எஸ்.எஸ் கவுண்டரை உங்கள் இணையத்தில் காட்சிப்படுத்தலாமே?

நீங்கள் முழுப்பதிவையும் ஆர்.எஸ்.எஸ் இல் தராமல் விடுவதால் உங்கள் பக்கத்தை நேரமின்மை காரணமாக அளட்சியப்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

ஆதாரம் :http://www.technobuzz.net/increase-your-feed-subscribers-with-5-simple-tips/

நீங்கள் வேறு சில காரணங்களுக்காக இதை செய்வதாக இருந்தால் தயவுசெய்து எனது கருத்துக்களுக்காக மன்னிக்கவும். அத்துடன் தயவுசெய்து உங்கள் பதிவுகளை முழுமையாக ஆர்.எஸ்.எஸ் இல் தரவும்.

நான் மேற்குறிப்பிட்ட கருத்துக்கள் உங்களை அவமானப்படுத்துவதற்காகவோ எதிப்பதற்காகவோ இல்லை. மாறாக உங்கள் பதிவுகளை முழுமையாக தினமும் என்னால் படிக்க முடியவில்லையே எனும் ஆதங்கத்தில் தான் என்பதை நீங்கள் உணர வேண்டும்.

எனது கருத்துக்கள் உங்களைப் புண்படுத்தியிருந்தால் தயவுசெய்து என்னை மன்னிக்கவும்.

நன்றி.

-- இந்தப் பின்னூட்டத்தை நான் நேற்றைய பதிவில் எழுதினேன். நீங்கள் கவனிக்கவில்லை என நினைக்கிறேன். தயவுசெய்து உங்கள் பதிவுகளை முழுமையாக ஆர்.எஸ்.எஸ் இல் தரவும்.

நன்றி

பாலராஜன்கீதா said...

வாழ்த்துகள் வேலன். உங்கள் இடுகைகளை வாசிக்க ஆவலுடன் இருக்கிறோம்.

Anonymous said...

kananiyai thiranthathum muthalil theduvathu velan blog ithaan nalukku onru remba nallathungka.

marimuthu said...

sir i open ready the magix music maker.but it's cannot open.i wan't the serial nomber.please request u tell me the serial nomber.

வேலன். said...

DJ.RR.SIMBU.BBA-SINGAI கூறியது...
வேலன் சார்,

வழக்கம்போலவே அசத்தல் பதிவு...

தினமும் ஒரு பதிவு (ஒன்னும் பன்னிக்க முடியாது)....

அசத்துங்க....

நன்றி சார்...//

நன்றி சிம்பு சார். தங்கள் வருகைக்கு நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

பெயரில்லா கூறியது...
300வதுபதிவுகள். வாழ்த்துக்கள்!

இன்னும் பல ஆயிரம் பதிவுகள் பதிய வாழ்த்துக்கள்.!

அன்புடன் மஜீத்.//

அட மஜீத் சார்...வாங்க ரொம்பநாளுக்கு அப்புறம் வந்துள்ளீர்கள். தங்கள் வருகைக்கும வாழ்த்துக்கும் நன்றி.வாழக் வளமுடன்,வேலன்.

வேலன். said...

S Maharajan கூறியது...
வழக்கம்போலவே அசத்தல் பதிவு வேலன் சார்.//

நன்றி மஹாராஜன் சார்...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

ஜெய்லானி கூறியது...
அவசியமான பதிவு. ஆபீசில் தூங்கும் போது சரியாக எழுப்பி விட உதவும்.
அதுல ‘’தூங்காதே தம்பி தூங்காதே’’பாட்டை போட போகிறேன்.ஹி..ஹி..//

நல்ல பாடல் தேர்வு நண்பரே...ஆபிஸில் வேலைசெய்பவர்கள் அனைவருக்கும் பரிந்துரைக்கலாம். தங்கள் வருகைக்கும கருத்துக்கும் நன்றி் வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
jolly photo?????? நமக்கு வேலை இல்லாமல் செய்திட்டீங்களே...... அவ்வ்வ்வ்...//

ஜாலி போட்டோ இல்லைன்ன என்ன நீங்க வழக்கம் போல வந்து பொங்க சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

Ganpat கூறியது...
Your services are really great,useful and informative.
Wishing you the 3000th pathivu very soon.
God Bless//

பதிவிற்கு முதன்முதலாக வந்துள்ளீரு்கள் என எண்ணுகின்றேன்.தங்கள்வருகைக்கும் வாழ்த்துக்கும ்நன்றி வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
தினமும் ஒரு பதிவா ...???? கொண்டாடுங்க மாப்ஸ்.
ஆமாம், போன வருஷம் நம்ம டவுசரு இதே மேரிக்கி
ஒரு பதிவு பொட்டு அத நானும் டவுனு லோடு பண்ணி
என் பொட்டில வச்சி அல்லாரும் செட் பண்ணா அடிக்கல ராசா!
அப்பறமா அலாரத்த கழட்டி கொஞ்சம் தேங்கா எண்ணைய வுட்டு
மாட்டி வுட்டேன். சரியா மாட்டாம அலாரம் கீழே உழுந்து ஒடஞ்சி பூடிச்சி
கண்ணு !//

இது நல்ல கடையில வாங்கியது அதனால பால்ட் ஏதும் வராது.டவுசரு திரும்பவும் வராரு..அவரிடமே கேளுங்க...வருகைக்கு நன்றி மாம்ஸ்.வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

Mohan கூறியது...
300 - வது பதிவுக்கு வாழ்த்துக்கள்! தொடருங்கள்.....
வாழ்க வளமுடன்!//

நன்றி மோகன் சார்..வாழத்தியமைக்கு நன்றி..வாழ்க வளமுடுன்,வேலன்.

வேலன். said...

Abarajithan கூறியது...
நண்பரே,

முதலில் முன்னூறு பதிவுகளுக்கு வாழ்த்துக்கள். உங்கள் பதிவுகளில் பலவற்றை சிலகாலமாக வாசித்து வருகின்றேன். அருமையாக இருக்கின்றன. ஆனாலும் ஒரு குறை...

நண்பரே நீங்கள் உங்கள் பதிவுகளை ஆர்.எஸ்.எஸ் இல் முழுமையாகத் தருவதில்லை. நீங்கள் என்ன காரணத்துக்காக இவ்வாறு செய்கிறீர்கள் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. ஆனால் உங்கள் இணையப்பக்க வருகையை அதிகரித்துக் கொள்வதற்காக இப்படிச் செய்வதாக இருந்தால் சற்று யோசிக்கவும்.

இந்த வலையுலகத்தில் ஆயிரக்கணக்கான பதிவர்கள் எழுதி வருகின்றனர். அவற்றில் பலநூறுபேர் சுவாரஸ்யமாக எழுதுவதோடு, பல புதிய செய்திகளையும் உடனுக்குடன் அறியத்தருகின்றனர். விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய ஒருசில மிகச்சிறந்த தொழிநுட்பப் பதிவர்களில் தாங்களும் ஒருவர் என்பது நிதர்சனமான உண்மையே. அதில் சந்தேகம் ஏதுமில்லை.

ஆனால் வாசகர்களாகிய நாம் தினமும் அதிகளவு நேரத்தைச் செலவிட்டு பலநூறு இணையத்தளங்களை ஒவ்வொன்றாக லோட் செய்து பார்ப்பது இயலாத காரியமாகும். இதன் காரணமாகவே பலரும் ஆர்.எஸ்.எஸ் ரீடர்களை பயன்படுத்தி வருகின்றோம் என்பது தாங்கள் அறிந்ததே.

உங்களுடைய பதிவுகள் அனைத்துமே புதிய செய்தியொன்றைக் கூறும் வகையில் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை. ஆனால் நாங்கள் உங்களை மட்டுமே வாசிக்க வேண்டும் என நீங்கள் நினைப்பது சரியல்ல. எனக்கு ரீடரில் தினமும் காலையில் கொட்டிக்கிடக்கும் நூற்றுக்கணக்கான செய்திகளை வாசிப்பதற்கு இரண்டு மணித்தியாலங்கள் எடுக்கின்றன. இந்நிலையில் உங்கள் இணையத்தளத்தை தினமும் லோட் செய்து பதிவுகளைப் படிப்பது இயலாத காரியம் என்பதை நீங்கள் உணரவேண்டும்.

அப்படி உங்களுக்கு வாசகர்களின் எண்ணிக்கை முக்கியமாக இருந்தால் முழுப்பதிவையும் ஆர்.எஸ்.எஸ் இல் கொடுத்துவிட்டு ஒரு ஆர்.எஸ்.எஸ் கவுண்டரை உங்கள் இணையத்தில் காட்சிப்படுத்தலாமே?

நீங்கள் முழுப்பதிவையும் ஆர்.எஸ்.எஸ் இல் தராமல் விடுவதால் உங்கள் பக்கத்தை நேரமின்மை காரணமாக அளட்சியப்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

ஆதாரம் :http://www.technobuzz.net/increase-your-feed-subscribers-with-5-simple-tips/

நீங்கள் வேறு சில காரணங்களுக்காக இதை செய்வதாக இருந்தால் தயவுசெய்து எனது கருத்துக்களுக்காக மன்னிக்கவும். அத்துடன் தயவுசெய்து உங்கள் பதிவுகளை முழுமையாக ஆர்.எஸ்.எஸ் இல் தரவும்.

நான் மேற்குறிப்பிட்ட கருத்துக்கள் உங்களை அவமானப்படுத்துவதற்காகவோ எதிப்பதற்காகவோ இல்லை. மாறாக உங்கள் பதிவுகளை முழுமையாக தினமும் என்னால் படிக்க முடியவில்லையே எனும் ஆதங்கத்தில் தான் என்பதை நீங்கள் உணர வேண்டும்.

எனது கருத்துக்கள் உங்களைப் புண்படுத்தியிருந்தால் தயவுசெய்து என்னை மன்னிக்கவும்.

நன்றி.

-- இந்தப் பின்னூட்டத்தை நான் நேற்றைய பதிவில் எழுதினேன். நீங்கள் கவனிக்கவில்லை என நினைக்கிறேன். தயவுசெய்து உங்கள் பதிவுகளை முழுமையாக ஆர்.எஸ்.எஸ் இல் தரவும்.

நன்றி//

தங்களின் நீண்ட கருத்துக்கு ந்ன்றி நண்பரே...(உங்கள் வயது 14 என குறிப்பிட்டுள்ளீர்கள்...ஆனால் கருத்துக்கள் வயதை கூட்டி காட்டுகின்றதே) உங்கள் கருத்துக்களை நண்பர்களிடம் விவாதித்து வருகின்றேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை கூறி வருகின்றனர்.விரைவில் மாற்றங்கள் செய்கின்றேன். தங்கள் வருகைக்கும் நீண்ட கருத்துக்கும் நன்றி நண்பரே...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

பாலராஜன்கீதா கூறியது...
வாழ்த்துகள் வேலன். உங்கள் இடுகைகளை வாசிக்க ஆவலுடன் இருக்கிறோம்.//

நன்றி பாலராஜன் கீதா அவர்களே. தங்கள் வருகைக்கும வாழததுக்கும நன்றி வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

பெயரில்லா கூறியது...
kananiyai thiranthathum muthalil theduvathu velan blog ithaan nalukku onru remba nallathungka.//

உங்கள் ஆவலுக்கு நன்றி நண்பரே..உங்கள் பெயரை குறிப்பிட்டிருந்தால நன்றாக இருக்கும். தங்கள் வருகைக்கு நன்றி.வாழ்க வளமுடுன்,வேலன்.

வேலன். said...

marimuthu கூறியது...
sir i open ready the magix music maker.but it's cannot open.i wan't the serial nomber.please request u tell me the serial nomber.//

அது முப்பது நாள் டிரையல் விஷன் நண்பரே..டிரையல்விஷன் தேதியை நீடிக்க நம்ப ஜெய்லானி சார் பதிவை செனறு பார்க்கவும். தங்கள் வருகைக்கு நன்றி வாழ்க வளமுடன்,வேலன்.

Abarajithan said...

@வேலன்,

நன்றி நண்பரே. எனக்கு 14 வயது என்பது உண்மைதான். எனது கருத்தை கவனத்தில் எடுத்துக் கொண்டதற்கு நன்றி. உண்மையிலேயே உங்கள் அருமையான பதிவுகளை தினமும் வாசிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில்தான் அந்த பின்னூட்டத்தை இட்டேன். எனது கருத்துக்கள் உங்களை புண்படுத்தியிருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும்.

Aslam Muhammad said...

thank you so much valen sir .i am aslam from sri lanka now living at saudi arabia .valen unga arumaiyane pathivuhalai nan thinamum padikkinren.so fantastic .ungal thiiramai & arvai iraiven men meelum athikarikka venduhiren tank you

Related Posts Plugin for WordPress, Blogger...