வேர்டில் சில சமயம் ஒரே டாக்குமெண்டை இரண்டு இடங்களில் சேமித்து வைக்கும் தேவை ஏற்படும். அவ்வாறான சமயங்களில் நாம் முதல் டாக்குமெண்டில் மாறுதல் செய்தபின்னர் நாம் சேமித்து வைத்துள்ள இடத்திலும் சென்று மாறுதல் செய்ய வேண்டும். ஆனால் வேரட் டாக்குமெண்டை நாம் சேமிக்கும் போதே கூடுதல் வசதியில் சேமித்துவிட்டால் முதல் டாக்குமென்டில் சேமிக்கும் போதே இரண்டாவது டாக்குமென்டிலும் மாற்றங்கள் ஏற்பட்டுவிடும். ரமணா படத்தில் யுகிசேது என்பவர் ஒரு டயலாக் சொல்லுவார். "இங்க அடித்தால் அங்க வலிக்கும்" அதுபோல இங்க நாம் மாற்றம் செய்தால் அங்கே தானே மாற்றம் வரும். இனி அதை எப்படி நடைமுறைபடுத்துவது என்று தெரிந்து கொள்ளலாம்.
முதலில் சேமிக்க விரும்பும் டாக்குமென்டை திறந்துகொள்ளுங்கள். பின்னர் அதை ஹைலைட் செய்துகொள்ளுங்கள்.மவுஸ் பாயின்டரை அதன் நடுவில் கொண்டு செல்லுங்கள்.பின் ரைட் கிளிக் செய்யுங்கள்.இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்..
இதனை நீங்கள் ஒட்டவேண்டிய இடத்திற்கு இழுத்து செல்லவும்.(ஓரே டெக்ஸ்டாப்பில இரண்டு விண்டோக்கள் ஓப்பன செய்து கொள்வது உங்களுக்கு வசதியாக இருக்கும்.இதுபற்றி நான்ஓரே சமயத்தில பல்வேறு விண்டோக்களில் பணிபுரிய என்கின்ற தலைப்பில் ஏற்கனவே பதிவிட்டுள்ளேன்.புதியவர்கள் -மறந்துவிட்டவர்கள் இங்கு கிளிக் செய்து பார்த்துக்கொள்ளவும்.)இப்போது மவுஸை நீங்கள் விட்டுவிட்டாலும் டெக்ஸ்ட் காப்பி ஆகாது. அதற்கு பதில உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் காப்பிக்கும் - மூவ் க்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரியும் என நினைக்கின்றேன்.இப்போது மூன்றாவதாக உள்ள லிங்க் ஹியர்-Link Here என்பதை கவனியுங்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
அதனை கிளிக் செய்ய உங்களுக்கு அந்த விண்டோவில் டெக்ஸ்டானது காப்பி செய்யபட்டுவிடும்.இதன் பயன் என்னவென்றால் ஒரிஜினல் டெக்ஸ்ட்டுடன் இது லிங்க் செய்யப்படுவதால் ஒரிஜினலில் நீங்கள் மாற்றம் செய்யும் சமயம் இந்த டாக்குமென்டிலும் மாறுதல்கள் தானே ஏற்பட்டுவிடும்.அதற்கு கீழேயே Create Hyperlink Here என இருப்பதை காணலாம். இது எந்த இடத்திலிருந்து நீங்கள் டெக்ஸ்டை எடுத்தீர்கள் என காண்பிக்கும். ஆனால் ஒரிஜினலில மாற்றங்கள் செய்தால இதில மாற்றங்கள் ஏற்படாது.தேவைபடுபவர்கள் தேவைபடும் வசதியை பயன்படுத்திக்கொள்ளவும்.பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
வெயில் ஒன்னும் சாமாளிக்க முடியலை...என்ன பண்றது ?அதான் உடம்பை கூல் செய்து கொள்கின்றேன்.
இன்றைய PSD புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
10 comments:
பயனுள்ள தகவல் வேலன் சார்,
பகிர்விற்கு நன்றி சார்....
நல்ல தகவல்
வேலன் சார் அருமை.
புதியவர்களுக்கு என்றில்லை எனக்குமே பயனுள்ள பதிவு தான்.
என்ன நம்ம பகக்ம் மறந்தே போய் விட்டீர்கள்.
வேலன் சார் பயனுள்ள தகவல் பகிர்விற்கு நன்றி
அட இது கூட நல்லாத்தான் கீது.
ஓட்டு போட்டன் மாப்ள.
வர்ட்டா ...?! வெய்யிலு தாங்களா கண்ணு எங்கானும் தண்ணிய கண்டா எறங்கி ஊரிட்டு கிடக்கலாம் னாக்கா ஹீஹூம் தண்ணியும் ஒரே ஜூடாகீது ராசா.
DJ.RR.SIMBU.BBA-SINGAI கூறியது...
பயனுள்ள தகவல் வேலன் சார்,
பகிர்விற்கு நன்றி சார்....//
தங்கள் வருகைக்கும கருத்துக்கும் நன்றி சிம்பு சார்...வாழ்க வளமுடன்,வேலன்.
ஜெய்லானி கூறியது...
நல்ல தகவல்..//
நன்றி ஜெய்லானி சார்...வாழ்க வளமுடன்,வேலன்.
Jaleela கூறியது...
வேலன் சார் அருமை.
புதியவர்களுக்கு என்றில்லை எனக்குமே பயனுள்ள பதிவு தான்.
என்ன நம்ம பகக்ம் மறந்தே போய் விட்டீர்கள்.//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி...காலை 6 மணியிலிருந்து 10 மணிவரை மின்தடை உள்ளதால் பதிவின் பக்கம் வர நேரம் போதவில்லை...தவறாக நினைக்கவேண்டாம். வாழ்க வளமுடன் வேலன்.
mahaboob கூறியது...
வேலன் சார் பயனுள்ள தகவல் பகிர்விற்கு நன்ற//
தங்கள் வருகைக்கு நன்றி மஹாபூப் சார்..வாழ்க வளமுடன்,வேலன்.
கக்கு - மாணிக்கம் கூறியது...
அட இது கூட நல்லாத்தான் கீது.
ஓட்டு போட்டன் மாப்ள.
வர்ட்டா ...?! வெய்யிலு தாங்களா கண்ணு எங்கானும் தண்ணிய கண்டா எறங்கி ஊரிட்டு கிடக்கலாம் னாக்கா ஹீஹூம் தண்ணியும் ஒரே ஜூடாகீது ராசா.//
தங்கள் வருகைக்கும ஒட்டுபோட்டமைக்கும் நன்றி மாம்ஸ்...வாழ்க வளமுடன்,வே்லன்.
Post a Comment