வேலன்:-RESUME-பயோடேட்டா சுலபமாக தயாரிக்க

படித்து முடித்தது ஒரு பக்கம் என்றால் அதைவிட சிரமம் வேலைகிடைப்பது. அதுவும் நல்ல வேலை நமக்கு கிடைப்பது நமது அதிர்ஷ்டம் மற்றும திறமையை பொறுத்ததே...அவ்வாறு வேலைக்கு செல்ல நாம் நமது தகுதிகளை பயோ -டேட்டாவாக அனுப்பவேண்டும். அந்த பயோ டேட்டாக்களை எப்படி தயாரிப்பது:? அதற்கும் நாமே பயோ டேட்டாவை சுலபமாக தயாரிக்கும் சாப்ட்வேர் உள்ளது:(அட இதுக்கு கூடவா சாப்ட்வேர் இருக்கு..? அப்படினு நீங்கள் கேட்பது புரிகின்றது.ம்...ம்...இப்போ படித்து முடிக்கின்றவர்கள் எல்லாம் அதிர்ஷ்ட காரர்கள் அல்லவா?)சரி இப்போ அந்த சாப்ட்வேர் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.இதை பதிவிறக்கம் செய்து ஒப்பன் செய்ததும் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும்..
இதில நீங்கள் புதிய ரெஸியூமை தேர்வு செய்யுங்கள். மேலும் மொழியாக ஆங்கிலத்தையோ - உங்களுக்கு விருப்பமான மொழியையோ தேர்வு செய்யுங்கள்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்களின் பெயர் மற்றும் வயது - புகைப்படம் மற்றும் தொலைபேசி எண் - இ-மெயில முகவரி அனைத்தையும் பூர்த்தி செய்து ஓ.கே. கொடுங்கள்.
உங்களது முகவரியை பூர்த்தி செய்யுங்கள்.
அடுத்துள்ளது உங்களது கல்வி தகுதி . உங்கள் கல்வி தகுதியை பூர்த்தி செய்யுங்கள்.
நீங்கள் ஏற்கனவே பணியில் இருந்தால் அந்த வேலையை பற்றிய விவரங்களை தெரிவியுங்கள்.
இந்த அப்ளிகேஷனின் வலதுபுறம் பார்த்தீர்களே யானால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ இருக்கும். இதில் தேவையான காலத்தை தேர்வு செய்து தேவையான விவரங்களை பூர்த்தி செய்யுங்கள்.
இதில நீங்கள் பூர்த்தி செய்த விவரங்களை தனியாக பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளலாம். இ -மெயில் இதிலிருந்தே அனுப்பலாம். வேர்ட் பைலாக மாற்றலாம்.இதில வேறு ஓரு சிறப்பு என்னவென்றால் இதில மொத்தம் 25 மாடல்களில பயோ -டேட்டா விவரங்களை நாம் பூர்த்தி செய்யலாம். உங்களுக்கு விருப்பமான மாடலை தேர்வு செய்து பயோ -டேட்டாவை அனுப்புங்கள்.ஆல் த பெஸ்ட்...

வாழ்க வளமுடன்.
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
பர்த்டே கேக்கை நீதான் மறைச்சு வைச்சிறுக்கே...எழுந்திரு நான் பார்க்கனும்... 
இன்றைய PSD டிசைன் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

29 comments:

DJ.RR.SIMBU.BBA-SINGAI said...

வேலன் சார்,

அருமையான ஒரு பதிவை அழகாக விளக்கியுள்ளிர்கள்

என்னை போன்றவர்களுக்கு மிகவும் ஒரு பயனுள்ள பதிவு சார்...

உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சார்...

நன்றி...

Chitra said...

மறைச்சா? எல்லாம் அப்போவே சாப்பிட்டு விட்டு ஏப்பம் விட்டாச்சு...... ஹி,ஹி,ஹி,ஹி,ஹி....

mahaboob said...

புதியவர்களுக்கு அருமையான பதிவு
நன்றி வேலர் சார்

சசிகுமார் said...

சார் பதிவும் சூப்பர், என்னுடைய பொண்ணும் சூப்பர். உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஜெய்லானி said...

பயோ டேட்டா உருவாக்குவதே தனி கலை. அதை உருவாக்கி விற்கவே இனையத்தில ஆயிரம் கம்பெனிகள் உலவுகின்றன .

அருமையான பதிவு .

கக்கு - மாணிக்கம் said...

மாப்ஸ், ரொம்ப சுவாரசியமான பதிவுதான்.
எல்லோருக்கும் பயன் படும்.
நம்ம மாஸ்டர் வேலன் எப்பவுமே அப்படித்தான்
மாப்ஸ் வேலன் மாஸ்டர் வால்க ! வால்க!!

afrine said...

வணக்கம் வேலன் அண்ணா,

வழக்கம் போல இப்பதிவும் எங்கள் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும். மிக்க நன்றி. உங்களுடைய பழைய பதிவினை திறக்க முடியவில்லை. மீண்டும் முயற்சித்தால்
This domain name expired on May 18 2010 12:54AM
Click here to renew it.

என்று வருகிறது. மே 2009 -ல் உள்ள பதிவுகளை பார்வையிட முடியவில்லை. முடிந்தால் சரிபார்க்கவும்

நன்றீ

அப்ரின் பானு

Archana said...

hi sir really thanks a lot for ur resume builder. U hv done a wonderful job.Keep it up.

PalaniWorld said...

சார் உங்கள் பதிவுகள் அனைத்தும் சூப்பர்.ஆனால் முடிந்த வரை trial version மென்பொருள்களை நிராகரிக்கவும் .பயன்படுத்தியபின் விட மனசில்லை . அல்லது அதன் சீரியல் கீ உடன் பதிவிடவும் .

rinsank@yahoo.com said...

velan sir its very important for me thanks so much

ஜிஎஸ்ஆர் said...

நீங்கள் அறிமுகபடுத்தும் அநேக மென்பொருள்கள் அருமை ஆனால் அது இலவச மென்பொருளா இல்லை பணம் செலுத்தி பெறவேண்டுமா என்பதையும் உங்கள் பதிவிலேயே எழுதினால் வீணாக தரவிறக்கம் செய்ய வேண்டி வராது மேலும் டாலர் கொடுத்து அதை வாங்குவதற்கு யாருக்குதான் வசதி இருக்கிறது அப்படியே வாங்க விருப்பம் இருந்தாலும் அதற்கு கடன் அட்டை அவசியம் வேண்டும.

அன்புடன் அருணா said...

வாவ்!பூங்கொத்து!அருமையான பதிவு!

வேலன். said...

DJ.RR.SIMBU.BBA-SINGAI கூறியது...
வேலன் சார்,

அருமையான ஒரு பதிவை அழகாக விளக்கியுள்ளிர்கள்

என்னை போன்றவர்களுக்கு மிகவும் ஒரு பயனுள்ள பதிவு சார்...

உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சார்...

நன்றி...
//

நன்றி சிம்பு சார்..தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
மறைச்சா? எல்லாம் அப்போவே சாப்பிட்டு விட்டு ஏப்பம் விட்டாச்சு...... ஹி,ஹி,ஹி,ஹி,ஹி....//

அதான் எழுந்திருக்கமுடியாமல் உட்கார்ந்து இருக்கிறாப்போல் இருக்கின்றது.தங்கள் வருகைக்கு நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

mahaboob கூறியது...
புதியவர்களுக்கு அருமையான பதிவு
நன்றி வேலர் சார்//

நன்றி மஹாபூப் சார்...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

சசிகுமார் கூறியது...
சார் பதிவும் சூப்பர், என்னுடைய பொண்ணும் சூப்பர். உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

நன்றி சசிகுமார்..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

ஜெய்லானி கூறியது...
பயோ டேட்டா உருவாக்குவதே தனி கலை. அதை உருவாக்கி விற்கவே இனையத்தில ஆயிரம் கம்பெனிகள் உலவுகின்றன .

அருமையான பதிவு .//

நன்றி ஜெய்லானி சார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
மாப்ஸ், ரொம்ப சுவாரசியமான பதிவுதான்.
எல்லோருக்கும் பயன் படும்.
நம்ம மாஸ்டர் வேலன் எப்பவுமே அப்படித்தான்
மாப்ஸ் வேலன் மாஸ்டர் வால்க ! வால்க!!//

நன்றி மாம்ஸ்...வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

afrine கூறியது...
வணக்கம் வேலன் அண்ணா,

வழக்கம் போல இப்பதிவும் எங்கள் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும். மிக்க நன்றி. உங்களுடைய பழைய பதிவினை திறக்க முடியவில்லை. மீண்டும் முயற்சித்தால்
This domain name expired on May 18 2010 12:54AM
Click here to renew it.

என்று வருகிறது. மே 2009 -ல் உள்ள பதிவுகளை பார்வையிட முடியவில்லை. முடிந்தால் சரிபார்க்கவும்

நன்றீ

அப்ரின் பானு//

நன்றி சகோதரி...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

Archana கூறியது...
hi sir really thanks a lot for ur resume builder. U hv done a wonderful job.Keep it up.//

தங்கள் பதிவிற்கு முதன்முதலாகவந்துள்ளீர்கள் என நினைக்கின்றேன் சகோதரி..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

PalaniWorld கூறியது...
சார் உங்கள் பதிவுகள் அனைத்தும் சூப்பர்.ஆனால் முடிந்த வரை trial version மென்பொருள்களை நிராகரிக்கவும் .பயன்படுத்தியபின் விட மனசில்லை . அல்லது அதன் சீரியல் கீ உடன் பதிவிடவும் .//

உங்களுக்காகவே ஜெய்லானி சார் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவை சென்று பார்க்கவும்.உங்களுக்குபயன் படும்.தங்கள் வருகைக்கு நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

rinsank@yahoo.com கூறியது...
velan sir its very important for me thanks so much//

நன்றி சார்...தாங்களும் பதிவிற்கு முதன்முதலாக வந்துள்ளீர்கள் என நினைக்கின்றேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

ஜிஎஸ்ஆர் கூறியது...
நீங்கள் அறிமுகபடுத்தும் அநேக மென்பொருள்கள் அருமை ஆனால் அது இலவச மென்பொருளா இல்லை பணம் செலுத்தி பெறவேண்டுமா என்பதையும் உங்கள் பதிவிலேயே எழுதினால் வீணாக தரவிறக்கம் செய்ய வேண்டி வராது மேலும் டாலர் கொடுத்து அதை வாங்குவதற்கு யாருக்குதான் வசதி இருக்கிறது அப்படியே வாங்க விருப்பம் இருந்தாலும் அதற்கு கடன் அட்டை அவசியம் வேண்டும.//

அதை தரவிறக்கம் செய்து பயன்படுத்திப்பார்த்தால்தான் அதன் அருமை தெரியும்.நீங்கள் சொல்வதுபோல் பார்த்து அப்படியே சென்றால் சில நல்ல சாப்ட்வேர்களின் அருமை நமக்கு தெரியாமலேபோய்விடும் அல்லவா..?தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

அன்புடன் அருணா கூறியது...
வாவ்!பூங்கொத்து!அருமையான பதிவு//

தங்களிடம் பூங்கொத்து வாங்கி எவ்வளவு நாள் ஆகின்றது.நன்றி சகோதரி...தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

ஸ்ரீராம். said...

மிகவும் உபயோகமான விஷயத்தை சொல்லி உள்ளீர்கள்...நன்றி. எனக்குத் தெரிந்தவர்களுக்கும் சொல்வேன்..இளமை விகடன் குட் ப்ளாக்ஸ் பக்கம் பார்த்து வந்தேன்...(ஆனால் இது முதல் முறை அல்ல..!)

வேலன். said...

ஸ்ரீராம். கூறியது...
மிகவும் உபயோகமான விஷயத்தை சொல்லி உள்ளீர்கள்...நன்றி. எனக்குத் தெரிந்தவர்களுக்கும் சொல்வேன்..இளமை விகடன் குட் ப்ளாக்ஸ் பக்கம் பார்த்து வந்தேன்...(ஆனால் இது முதல் முறை அல்ல..!)//

நன்றி ஸ்ரீராம் சார். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும ்நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

அதிரை எக்ஸ்பிரஸ் said...

இதையும்தான் வந்து பாருங்களேன்

selva said...

super friend..

how to type tamil

Ashleyixoe said...

வாவ்!பூங்கொத்து!அருமையான பதிவு!

Related Posts Plugin for WordPress, Blogger...