வேலன்:-Screen Saver-ஸ்கிரீன் சேவரில் வீடியோ வரவழைக்க


ஸ்கிரீன் சேவரில் நாம் புகைப்படங்களை மாற்றுவதை பார்த்துள்ளோம். அதைப்போல புகைப்படங்களுடன் இசையையும் ஒலிப்பதை பார்த்துள்ளோம். ஆனால்இந்த சாப்ட்வேரில் ஸ்கிரீன் சேவராக வீடியோ படம் ஓடுவதை காணலாம்.இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.3 எம்.பி. கொள்ளளவு உள்ள இது இலவச சாப்ட்வேரே..இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்து கம்யூட்டரில் இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு டாக்ஸ்பாரில் கீழ்கண்ட விண்டோ தோன்றும்.
இதில் உள்ள Settings கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தோன்றும். இதில் கம்யூட்டர் எவ்வளவு நேரம் காத்திருந்தால் உங்களுக்கு வீடியோ வரவேண்டுமோ அந்த நேரத்தை குறிப்பிடவும்.ஒலியையும் மீண்டும் கணிணி இயல்பு நிலைக்கு திரும்புவதையும் இதில செட் செய்திடலாம்.
டாக்ஸ்க்பாரில் உள்ள Main என்பதனை கிளிக்செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்கள் வீடியோ உள்ள போல்டரை தேர்வு செய்துகொள்ளலாம். அதைப்போல ஒன்றுக்கு மேற்பட்ட வீடியோ போல்டர்களையும் தேர்வு செய்து கொள்ளலாம்.
நீங்கள் செட் செய்த வீடியோவானது குறிப்பிட்ட நேரம் நீங்கள் கம்யூட்டருக்கு எந்த வேலையையும் கொடுக்காமல் இருந்தால் ஸ்கிரீன்சேவராக வீடியோ படம் ஓட ஆரம்பிக்கும். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

13 comments:

Chitra said...

Present sir....!!

ஜெய்லானி said...

yes sir !!!!!

S Maharajan said...

அருமை வேலன் sir

பொன் மாலை பொழுது said...

// நீங்கள் செட் செய்த வீடியோவானது குறிப்பிட்ட நேரம் நீங்கள் கம்யூட்டருக்கு எந்த வேலையையும் கொடுக்காமல் இருந்தால் ஸ்கிரீன்சேவராக வீடியோ படம் ஓட ஆரம்பிக்கும்.//

------வேலன்

ஆமா ..மாப்ள... இடைவேள கூட வருமா ? வட, முறுக்கு,ரொட்டி, பொற. கலரு அப்புறம் டீ எல்லாம் கூட
கெடக்கிமா?? .

afrine said...

மிகவும் அருமை வேலன் அண்ணா

Anonymous said...

windows 7 ல் இந்த மென்பொருள் பயன் படுத்த முடியமா? Download செய்த பிறகு runtime error என்று வருகிறது.
உங்கள் உதவி தேவை.

நன்றி .

வேலன். said...

Chitra கூறியது...
Present sir....!!//

நன்றி சகோதரி..முதல் வருகைக்கும் முதல் ஓட்டுக்கும். நன்றி...்வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

ஜெய்லானி கூறியது...
yes sir !!!!!ஃ//

நன்றி ஜெய்லானி சார்..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

S Maharajan கூறியது...
அருமை வேலன் sir//

நன்றி மஹாராஜன் சார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
// நீங்கள் செட் செய்த வீடியோவானது குறிப்பிட்ட நேரம் நீங்கள் கம்யூட்டருக்கு எந்த வேலையையும் கொடுக்காமல் இருந்தால் ஸ்கிரீன்சேவராக வீடியோ படம் ஓட ஆரம்பிக்கும்.//

------வேலன்

ஆமா ..மாப்ள... இடைவேள கூட வருமா ? வட, முறுக்கு,ரொட்டி, பொற. கலரு அப்புறம் டீ எல்லாம் கூட
கெடக்கிமா?? .//

ஆஹா...புது வியாபாரத்திற்கு ஐடியா கொடுத்துட்டீங்க...செய்திடலாம்.வாழ்க வளமுடன்,வேலன.

வேலன். said...

afrine கூறியது...
மிகவும் அருமை வேலன் அண்ணா//

நன்றி சகோதரி...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

பெயரில்லா கூறியது...
windows 7 ல் இந்த மென்பொருள் பயன் படுத்த முடியமா? Download செய்த பிறகு runtime error என்று வருகிறது.
உங்கள் உதவி தேவை.

நன்றி //

உங்களுக்கு பெயரே இல்லையா...மேலையும் பெயரைகாணோம் ்கீழேயும் பெயரைக்காணோம்...விண்டோ 7 என்வசம் இல்லை.நண்பரிடம் கேட்டு சொல்கின்றேன். தங்கள் வருகைக்கு நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

malik said...

good. and thanks.

Related Posts Plugin for WordPress, Blogger...