வேலன்-போட்டோஷாப்-வாட்சில் புகைப்படம் கொண்டுவரநாம் பிரபல திரைப்பட நடிகராகவோ-அரசியல் வாதியாகவோ இருந்தால் நம்முடைய படம் போட்டு வாட்ச் - சுவர்கெடிகாரங்கள் விற்பார்கள். நமக்கு அந்த வாய்ப்பே இல்லை.(நாம் எங்கே நடிகராகவோ-அரசியல்வாதியாகவோ மாறபோகின்றோம்..சென்ஷே இல்லை).நாம் நமது படம் போட்ட வாட்ச் கொண்டு வந்தால் எப்படி இருக்கும். போட்டோஷாப்பில் அதனை சுலபமாக கொண்டுவரலாம். நாளை நாம் பெரிய ஆளாக வருவதற்கு இதனை முன்னோட்டமாக வைத்துக்கொள்ளலாம். இனி அவ்வாறு வாட்ச்சில் நமது புகைப்படம கொண்டுவருவது எப்படி என்று பார்க்கலாம். முதலில் இந்த ஆக்ஷன் பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.மு்ன்னர் சொல்லியபடி இதனை போட்டோஷாப்பில் லோடு அக்சன் மூலம் கொண்டுவந்துவிடவும். இப்போது லோடு அக்சனில் கடைசியாக நீங்கள்கொண்டுவந்த ஆக்சன் இருக்கும். அதில் Create the Watch என்பதனை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு சில நிமிடங்களில கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில வரும் Continue கிளிக் செய்ய உங்களுக்கு Type your Text Here என்கின்ற விண்டோபாக்ஸ் வரும். அதில் உங்கள் பெயரையோ நீங்கள் விரும்பும் பெயரையோ தட்டச் சு செய்யவும்.பினனர் மீண்டும Action Windowவில் உள்ள Create the watch கிளிக் செய்யு்ஙகள்.இப்போது கெடிகாரத்தின் கீழ்புறம் Type your Text Here வரும். அதிலும் விருப்பமான பெயரை தட்டச்சு செய்யுங்கள்.இப்போது மீண்டும முன்பு செய்ததுபோல் செய்து Continue கிளிக் செய்யுங்கள். மணி முள்,வினாடி முள், நொடி முள் ஆகியன வரும் தேவையான மணியை -நேரத்தை-டைமை செட் செய்யுங்கள். இறுதியாக என்டர் தட்டுங்கள். அவ்வளவுதான் சில நொடிகள் காத்திருப்புக்கு பின் உங்களுக்கு கெடிகாரம் தோன்றும்.கீழே உள்ள விண்டோ வினை பாருங்கள்.
இப்போது கடிகாரத்தின் நடுவில் நமது புகைப்படம் கொண்டுவரவேண்டும். இப்போது மீண்டும் Action Window கிளிக் செய்து அதில் Optional Add in image கிளிக செய்து உங்கள் புகைப்படத்தை தேர்வு செய்யுங்கள்.வரும் கிராப் விண்டோவை  புகைப்படத்திற்கு மையமாக வைத்து என்டர் கொடுங்கள். தொடர்நது வரும் விண்டோக்களில் Continue கொடுத்துக்கொண்டே வாருங்கள். சில நொடிகளில் உங்கள் புகைப்படம் வாட்ச் நடுவில இருப் பதை காணலாம் கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.

இதையே நீங்கள் பெரிய சைஸில் பிரிண்ட் எடுத்து நடுவில் சுவர்கெடிகாரத்தினுடைய மெஷின்(ரூபாய் 40 லிருந்து 60 ரூபாய்குள் தான் மெஷின் விலை வரும்) செட் செய்து லேமினெட் செய்துவிட்டால் பார்க்க அழகாக இருக்கும்.நண்பர்களுக்கு அவர்களுடைய படத்தை யே போட்டு பிறந்தநாள் பரிசு -திருமண பரிசாகவும் இதனை தரலாம்.பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.  பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

14 comments:

சிவா said...

மிகவும் சிறப்பான முறையில் விளக்கம் அளித்துள்ளீர்கள் வேலன். இனிமேல் வீட்டு சுவர்க்கடிகாரத்தில் தங்களின் படங்களை வைத்து வீட்டிற்கு வருபவர்களை ஆச்சரியப்பட வைக்கலாம்!

நான் மெஷின் வாங்குறேன், நீங்க பிரிண்ட் எடுங்க..! பிறகு இரண்டு பேரும் சேர்ந்து கடிகாரத்தை உருவாக்குவோம்!

ஜெய்லானி said...

நல்ல ஐடியா இது..சூப்பர்..!!

கக்கு - மாணிக்கம் said...

நீங்கள் தான் திருகழுகுன்றம் G.D. நாயுடு.
ஆனந்த் சண்டைகுவராமல் இருந்தால் சரி.

முஹம்மது நியாஜ், கோலாலம்பூர் said...

திரு வேலன் அவர்களுக்கு
மிக நல்ல பதிவு முயற்சி செய்து பார்தேன் முடியவில்லை காரணம் இனைப்பு பைல் டவுன்லோடு செய்ய முடியவில்லை, தயவு செய்து வேறு ஏதாவது வகையில் (4Shared ) இல்லாமல் டவுன்லோடு செய்ய வகை செய்யுங்கள் நன்றிகளுடன் வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்

அருண் பிரசாத் said...

http://usetamil.forumotion.com/-f4/--t6993.htm

உங்கள் பதிவு இங்கு வேறொருவர் பெயரில் உள்ளது, காப்பி அடித்துள்ளார்களா என பார்க்கவும்

வேலன். said...

சிவா கூறியது...
மிகவும் சிறப்பான முறையில் விளக்கம் அளித்துள்ளீர்கள் வேலன். இனிமேல் வீட்டு சுவர்க்கடிகாரத்தில் தங்களின் படங்களை வைத்து வீட்டிற்கு வருபவர்களை ஆச்சரியப்பட வைக்கலாம்!

நான் மெஷின் வாங்குறேன், நீங்க பிரிண்ட் எடுங்க..! பிறகு இரண்டு பேரும் சேர்ந்து கடிகாரத்தை உருவாக்குவோம்!//

நான் போட்டோடிசைன் செய்துவிட்டேன். நீங்கள் மெஷின் வாங்கிவிட்டீர்களா சார். தங்கள் வருகைக்கும் வாழ்ததுக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ஜெய்லானி கூறியது...
நல்ல ஐடியா இது..சூப்பர்..!!//

பச்சை ரோஜாவை வைத்தே கதை பண்ணுகின்றீர்கள்.உங்கள் படத்தை அனுப்புங்கள் டிசைன ்செய்து அனுப்புகின்றேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
நீங்கள் தான் திருகழுகுன்றம் G.D. நாயுடு.
ஆனந்த் சண்டைகுவராமல் இருந்தால் சரி//

இந்த ஆட்டத்திற்கு நான் வரவில்லை என்று அவர் ஓதுங்கிவிட்டார் சார..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

முஹம்மது நியாஜ், கோலாலம்பூர் கூறியது...
திரு வேலன் அவர்களுக்கு
மிக நல்ல பதிவு முயற்சி செய்து பார்தேன் முடியவில்லை காரணம் இனைப்பு பைல் டவுன்லோடு செய்ய முடியவில்லை, தயவு செய்து வேறு ஏதாவது வகையில் (4Shared ) இல்லாமல் டவுன்லோடு செய்ய வகை செய்யுங்கள் நன்றிகளுடன் வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்//

உங்களுக்கு மெயிலில் அனுப்பிவிட்டேன் சார். மாற்று ஏற்பாடு செய்கின்றேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

அருண் பிரசாத் கூறியது...
http://usetamil.forumotion.com/-f4/--t6993.htm

உங்கள் பதிவு இங்கு வேறொருவர் பெயரில் உள்ளது, காப்பி அடித்துள்ளார்களா என பார்க்கவும்//

நான் ஏற்கனவே பார்த்துவிட்டேன் நண்பரே..நான் பதிவிட்டு 10 ஆவது நிமிடத்தில் அதில் பதிவு வெளியாகின்றது.இதில் கொடுமை என்னவென்றால் தமிழ்10 தரவரிசைப்பட்டியலில் எனக்கு ஏழாவது இடம். பிற பதிவுகளை எடுதது போடும் அவர்களுக்கு முதலிடம்.பதிவுகளை எடுத்துப்போடுபவர்கள் நன்றிக்காவது எனது பெயரை குறிப்பிட்டுஇருக்கலாம்.எங்கிருந்தாலும்அவர்களும் வாழ்க வளமுடன்,
என்றும் அன்புடன்,
வேலன்.

ஆ.ஞானசேகரன் said...

கலக்கல்..... தொடருங்கள்

சே.குமார் said...

மிகவும் சிறப்பான முறையில் விளக்கம் அளித்துள்ளீர்கள்.


கலக்கல்.

எஸ்.கே said...

அருமையாக உள்ளது சார்! தொடருங்கள்!
வாழ்த்துக்கள்!

Lanford said...

மிகவும் சிறப்பான முறையில் விளக்கம் அளித்துள்ளீர்கள். கலக்கல்.

Related Posts Plugin for WordPress, Blogger...