வேலன்-விளையாட்டுடன் கணக்கு,ஆங்கிலம்,புவியியல் கற்கநமது குழந்தைகளிடம் கணக்கு வாய்பாடு எழுதிபாருடா...ஆங்கிலம் இலக்கணம் படிடா உலக நாடுகள் பற்றி தெரிந்துகொள் என்றால் அட போங்கப்பா என்று விளையாட சென்றுவிடுவார்கள். ஆனால் அவர்களை விளையாடவும் செய்து அதே சமயம் கணக்கு,ஆங்கிலம்,புவியியல் கற்று கொள்ளவும் இந்த சாப்ட்வேர் மூலம் செய்யலாம். இதை தான் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடி்ப்பது என்று சொல்லுவார்கள்..படிப்புக்கு படிப்பும் ஆச்சி...விளையாட்டுக்கு விளையாடடும் ஆச்சி 19 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.வரும் விண்டோவில் உங்கள் பெயரை தட்டச்சு செய்துகொள்ளுங்கள். மீண்டும் வரும் விண்டோவில் Options கிளிக் செய்யுங்கள் கீழ்கண்ட விண்டோ வரும். அதில் தேவையான அளவுகளை செட் செய்துகொள்ளுங்கள்.
 .இப்போது மீண்டும் மெயின் மெனுவிற்கு வாருங்கள். உங்களுக்கு கீழ்கணட் விண்டோ வரும். அதில் கணக்கு,ஆங்கிலம், புவியியல் இதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யுங்கள்.
நான் கணக்கை முதலில் தேர்வு செய்துள்ளேன். இதில் வாய்ப்பாடு 2 லிருந்து 12 வரை வரும் தேவையான எண்ணை கிளிக் செய்ததும் அந்த எண் Multiples ஆகும் எண்களுடன் சாதாரண எண்களும் வரும். அனைத்து எண்களும் ஆகாயத்தில் மிதக்க ஆரம்பிக்கும். உங்களுக்கு விமானம் ஒன்று தரப்படும். தேவையான எண்ணை விமானம் மூலம் நாம் அடைய வேண்டும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
நான் Multiple of 2 தேர்வு செய்துள்ளதால் இதில் இரண்டால் Multiple செய்தால் வரும் விடைகள் இருக்கும். அதை தேடிபிடித்து விமானத்தில் பிடிக்க வேண்டும். தேவையில்லாத எண்களு்ம் வரும் அதன் மேல் விமானத்தை மோதாமல் தப்பிக்கவேண்டும்.இதைப்போலவே 12 வாய்பாடு வரை பயிற்சி செய்யலாம்.அடுத்து ஆங்கிலம் தேர்வு செய்யுங்கள். இதில் Verb,Nouns,Adjectives என தேர்வு செய்யும் இலக்கணத்திற்கு எற்ப வார்த்தைகள் வானத்தில் உலா வரும் சரியான வார்த்தையை நாம் விமானம் மூலம் அடைய வேண்டும்.நான் Nouns தேர்வு செய்துள்ளேன். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதைப்போலவே பிற இலக்கண வார்த்தைகளையும் தேர்வு செய்து விளையாடலாம். கடைசியாக புவியியல். இதில் வரிசையாக கண்டங்கள் கொடுக்கப்பட்டிரு்க்கும் தேவையான கண்டத்தை நாம் தேர்வு செய்ததும் அதில் வரும் நாடுகள் இதில் உலா வரும். கீழே உள்ள படத்தை பாருங்கள். நான் ஆசியா கண்டத்தை தேர்வு செய்துள்ளேன்.
இதில் வரிசையாக வரும் நாடுகளில் ஆசியா கண்டத்தில் வரும் நாட்டினை மடடும் விமானம் மூலம் அடைய வேண்டும்.முதலில் நாம் விளையாடி பார்க்கலாம். பிறகு நமது குழந்தைகளு்ககு விளையாட தரலாம். (விளையாட்டில் சந்தேகம் கேட்டால் சொல்லித்தரவேண்டாமா....அதற்குதான்)
பதிவுகளை பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

13 comments:

R.ரவிசிலம்பரசன்_சிங்கை said...

வேலன் சார் அருமை,

அவ்வபோது குழந்தைகளுக்கான விளையாட்டு மென்பொருளையும் அறிமுகபடுத்தி அசத்தி வருகிரீர்கள்
தொடரட்டும் உங்கள் பணி....

நன்றி சார்........

கக்கு - மாணிக்கம் said...

அரை ட்ராயர் போட்டுகொண்டு பிள்ளையுடன் பள்ளிக்கு செல்லாம் போல உள்ளது .

சென்றுதான் வாருங்களேன் மாப்ஸ். சும்மா ஒரு பத்து நாளைக்கு .
முதல் நாளே பையன் அண்ட விடமாட்டான். துரத்தி அடிப்பான். :)

Sugumarje said...

வேலன்... என்னோடு கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன்... இந்த பதிவை காண்க...
http://sugumarje.blogspot.com/2010/08/photoshop-3d-graphic-design-free.html

ஆ.ஞானசேகரன் said...

குழந்தைகளின் சார்பாக நன்றிங்க வேலன்

Harjith said...

உங்களின் முயற்சி சூப்பர்.
கூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு . உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி.
Link:www.secondpen.com/tamil/what is jaiku?

எஸ்.கே said...

நன்றாக உள்ளது சார்!

வேலன். said...

R.ரவிசிலம்பரசன்_சிங்கை கூறியது...
வேலன் சார் அருமை,

அவ்வபோது குழந்தைகளுக்கான விளையாட்டு மென்பொருளையும் அறிமுகபடுத்தி அசத்தி வருகிரீர்கள்
தொடரட்டும் உங்கள் பணி....

நன்றி சார்..//

நன்றி சிம்பு சார். தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
அரை ட்ராயர் போட்டுகொண்டு பிள்ளையுடன் பள்ளிக்கு செல்லாம் போல உள்ளது .

சென்றுதான் வாருங்களேன் மாப்ஸ். சும்மா ஒரு பத்து நாளைக்கு .
முதல் நாளே பையன் அண்ட விடமாட்டான். துரத்தி அடிப்பான். :)//

வாங்க இரண்டுபேரும் சேர்ந்தே பள்ளிக்கு செல்லலாம்.வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Sugumarje கூறியது...
வேலன்... என்னோடு கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன்... இந்த பதிவை காண்க...
http://sugumarje.blogspot.com/2010/08/photoshop-3d-graphic-design-free.html//

நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ஆ.ஞானசேகரன் கூறியது...
குழந்தைகளின் சார்பாக நன்றிங்க வேலன்//

நன்றி ஞானசேகரன் சார்..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Harjith கூறியது...
உங்களின் முயற்சி சூப்பர்.
கூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு . உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி.
Link:www.secondpen.com/tamil/what is jaiku?//

நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

எஸ்.கே கூறியது...
நன்றாக உள்ளது சார்!//

நன்றி எஸ்.கே. சார்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

Amanullah said...

மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றிகள் பல.

Related Posts Plugin for WordPress, Blogger...