வேலன்:-குழந்தை வளர்ப்பு கேள்வி பதில்கள்.

நாம் இருவர் நமக்கு இருவர் என்பது சென்று நாம் இருவர் நமக்கு ஒருவர் என குடும்பம் சுருங்கிவிட்டது. அதுபோல கூட்டு குடும்பங்களும் இப்போது குறைந்துவருகின்றது.இருக்கும் ஒரு சில கூட்டு குடும்பங்களும் இப்போது வ ரும் டிவி சீரியல்கள் பார்த்து சிதைந்துவருகின்றது.சரி இதனால் என்ன பாதிப்பு என்கின்றீர்களா? முன்பு கூட்டு குடும்பங்களில் இருக்கும் சமயம் குழந்தையை பார்த்துகொள்ள நிறைய ஆட்கள் இருந்தார்கள்.அவர்களுக்கு வரும் நோய் - தேவைகள்-ஏதாவது ஒன்று என்றால் அது பற்றி ஆலோசனை சொல்ல நிறைய நபர்கள் இருந்தார்கள். இப்போது குழந்தைக்கு ஏதாவது ஒன்று என்றால் டாக்டரிடம் சென்று ஆலோசனை கேட்க வேண்டியுள்ளது.இந்த புத்தகத்தில் பிறந்த குழந்தை முதல் 12 வயதுவரை வரும் சின்ன சின்ன சந்தேகங்களுக்கு கேள்வியையும் விரிவான பதிலையும் கொடுத்துள்ளார்கள்.4 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை ஒப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
பதினோறு தலைப்புகள் கொடுததுள்ளார்கள். ஒவ்வொன்றும் அறிந்துகொள்ள வேண்டியதுதான் .
குழந்தைகள் தூங்குவது முதற்கொண்டு குழந்தைகளுக்கு எந்த எந்த விளையாட்டு பொருட்கள் கொடுக்கலாம் உணவு என்ன கொடுக்கலாம் என சின்ன சின்ன விஷயங்கள முதல் பெரிய பெரிய விஷயங்கள் வரை கேள்விகள் கேட்டு அதற்கு விரிவான பதிலாக கொடுத்துள்ளார்கள்.
புதியதாக திருமணமானவர்கள்,வளைகாப்பு முடிந்து பிரசவத்திற்காக காத்திருப்பவர்கள் என அனைவருக்கும் பயனுள்ள புத்தகம் இது.படித்துப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள். 
வாழ்க வளமுடன் 
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...