அனைத்து அப்ளிகேஷன்களையும் நொடியில் மூடிவிட
நாம் பணிபுரியும் அப்ளிகேஷன்களை சிலசமயம் அவசரமாக மூடிவிட்டு செல்லவேண்டிய சந்தர்ப்பம் அமையும். அந்த சமயங்களில் ஒவ்வொரு அப்ளிகேஷன்களாக தேர்வு செய்து பின்னர் அதனை மூடவேண்டும். ஆனால் இநத சின்ன சாப்ட்வேரில் அனைத்து அப்ளிகேஷன்களையும் நொடியில் நாம் மூடிவிடலாம். 34 கே.பி. அளவுள்ள இந்த சின்ன சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை ஒப்பன் செய்தததும் உங்களுக்கு கீழ்கண்ட ஐகான் டெக்ஸ்டாப்பில் கிடைக்கும்.
இப்போது நீங்கள் பணிபுரியும் அப்ளிகேஷன்களை ஒட்டுமொத்தமாக மூடிவிடடு செல்லவிரும்பினால் இந்த ஐகானை கிளிக் செய்திடவும். அனைத்து அப்ளிகேஷன்களும் மறைந்து(குளோஸ் )ஆகிவிடும்.வேர்ட்,எக்ஸல் போன்றவற்றில் மாற்றங்கள் ஏதும் செய்திருந்தால் குளோஸ் ஆகும் முன் உங்களிடம் சேவ் செய்திட அனுமதிகேட்கும்.மாற்றங்களை சேமிக்க விரும்பினால் யெஸ் கொடுத்து கொடுத்துவிடவும்.வேண்டாம் என்றால் நோ கொடுக்கவும். அவ்வளவுதான் நொடியில் உங்களுக்கு அனைத்து அப்ளிகேஷன்களும் மறைந்துவிடும். பயன்படுத்திப்பர்ருங்கள.கருத்துக்களை கூறுங்கள்.வாழ்க வளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment