வேலன்:-ஸ்கேனர் பிரிட்டர்.

பிரிண்டருடன் சேர்த்து ஸ்கேனர் வாங்கினாலும் சரி - ஸ்கேனர் மட்டும் தனியாக வாங்கினாலும் சரி - அதனுடன் சாப்ட்வேர் கொடுப்பார்கள். சிலசமயம் அந்த ஸ்'கேனர் சாப்ட்வேர் சரியாக வேலை செய்திடாது. அவ்வாறான சமயங்களில் தனியாக ஸ்கேனர் சர்பட்வேர் வைத்து நாம் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளலாம்.10 எம்.பி.கொள்ளளவுகொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
 இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்து நமக்கு ஸ்கேனிங் டாக்குமெண்ட எந்த பார்மெட்டில்வேண்டுமோ அந்த பார்மெட்டினையும்.தேர்வு செய்துகொள்ளலாம்.
இதில் ப்ரிவியூ பார்க்கும் வசதியையும் கொண்டுவரலாம். மேலும் நாம் ஸ்கேன் செய்த டாக்குமெண்டினை நேரடியாக பிடிஎப் பைலாகவும் டெக்ஸ்ட் பைலாகவும் சேமித்துவைத்துக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.
பயன்படுத்த் எளிதாக உள்ளதால் அவசரத்திற்கு இதனை பயன்படுத்திக்கொள்ளலாம். இனி ப்ரிட்டருடன் வரும் ஸ்கேனர் சாப்ட்வேர் பழுதானாலும் இதன் மூலம் சரிசெய்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள. 
வாழ்க வளமுடன் .
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

2 comments:

சிவம் said...

நண்பரே எங்கிருந்து இத்தனை தகவல்கள் கொடுக்கிறீர்கள். பல மென்பொருட்களை மிகவும் உபயோகமானதாகக் கொடுத்து அசத்தி விடுகிறீர்கள்.
இது ஓ.சி.ஆர். மென்பொருளா? தமிழ் எழுத்துருவை டெக்ஸ்ட் பைலாக மாற்றித் தருமா?

நண்பரே மேலும் என்.ஹெச்.எம். கன்வெர்ட்டர் என்று ஒரு மென்பொருளை பயன்படுத்தி வருகிறேன். அதில் செந்தமிழ் என்ற எழுத்துருவும், கீமேன் பய்னபடுத்தும் எந்த எழுத்துருவும் மாற மறுக்கிறது. மற்றபடி ஸ்ரீலிபி, tam,tab. bamini, போன்றவை மாறுகின்றன. செந்தமிழ் எழுத்துருவை ஸ்ரீலிபியாகவோ, யுனிகோடாகவோ மாற்ற வேறு எதுவும் மென்பொருள் தெரிந்தால் சொல்லுங்கள்.
மேலும் யுனிகோட் தமிழ் பான்ட் டிசைனாக கிடைக்குமா?

தகவல் கேட்டுத் தொந்தரவு செய்வதாக நினைக்க வேண்டாம். உங்களைப்போல் ஒருசிலரிடம்தான் கணினி சார்ந்த தகவல்களைப் பெறமுடிகிறது. அதனால்தான் இந்த அன்புத்தொல்லை

நன்றி.

வேலன். said...

Blogger sivam said...

நன்றி.ஃஃ தாமதமான பதிலுக்கு முதலில் மன்னிக்கவும்.தமிழக அரசால் பொன்விழி என்று தமிழில் ஒ.சி.ஆர்.மென்பொருளை அறிமுகப்படுத்தி உள்ளார்கள். அதனை பயன்படுத்திப்பாருங்க்ள. நான் பாமினி உபயோகிக்கின்றேன்.வேறு ஒரு கணிணியில் உங்கள் என்ஹெச்எம் கன்வர்ட்டரை பயன்படுத்திப்பாருங்கள் அப்போதும் அவ்வாறு பிழைகள் வருகின்றதா என கவனியுங்கள. அப்பேர்தும் பிழைகள் வந்தால் தனியாக எழுத்துருவை மீண்டும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திப்பாருங்கள.நீங்கள் கேட்ட சாப்ட்வேர் கிடைக்கின்றதா என பார்க்கின்றேன்.கிடைத்தால் பதிவிடுடகின்றேன்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. வாழ்க வளமுடன் வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...