வேலன்:-சாப்ட்வேர் கீகளை அறிந்துகொள்ள.

புதியதாக கணிணி வாங்கும் சமயம் நமக்கு சாப்ட்வேர் சிடி தருவார்கள். கீகளுடன அது இணைத்து வரும். ஒரு முறை இன்ஸ்டால் செய்து அதனை பத்திரமாக தொலைத்துவிடுவோம். மீண்டும் ஓரு முறை ஓ.எஸ் மாற்றும் சமயம் அநத சிடிகிடைக்காது. சிடி கிடைத்தாலும் அதன் கீ நமக்கு தெரியாது. அவ்வாறான இடையூறுகள் ஏற்படாமல் இருக்க இந்த சின்ன சாப்ட்வேர் பயனபடுகின்றது. 1 எம்.பி.கொள்ளளவு கொணட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.
சில சாப்ட்வேர்களை நாமோ அல்லது சர்வீஸ் இன்ஜினியரோ நிறுவுவார்கள். அவ்வாறு நிறுவுகையில் சில சாப்ட்வேர்களின் கீ களை நாம் கவனமாக குறித்துவைத்துக்கொள்ளவேண்டும். சில சர்வீஸ் இன்ஜினியர்கள்  சாப்டவேர்களை இன்ஸ்டால் செய்துவிட்டு சிடிமட்டும் கொடுத்துவிட்டுசெல்வார்கள். கீயை கொடுக்கமாட்டார்கள். மீண்டும் கணிணியில் பழுது ஏற்படும் சமயம் அவர்களையே நாம் மீண்டும் சர்வீஸ் செய்ய கூப்பிடவேண்டும் என்கின்ற நல்ல எண்ணத்தில் சிடி கீயை தங்களுடைய செல்போனில் நமது பெயரைப்போட்டு பதிவு செய்துவைத்திருப்பார்கள். நாமே நமக்கான கீ களை அறிந்துகொள்ள இந்த சின்ன சாப்டவேர் பயன்படுகின்றது.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு மேற்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும். இதில் நமமிடம் உள்ள அப்ளிகேஷன்களின் சீரியல் நமக்கு தெரியவரும். அதனை காப்பி செய்து வைத்துக்கொண்டால் பிற்சமயம் நமக்கு மிக்க பயன்தரும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள். 
வாழ்க வளமுடன் 
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

4 comments:

'பரிவை' சே.குமார் said...

அவசியமான பகிர்வு அண்ணா...
பகிர்வுக்கு நன்றி.

Unknown said...

thank u very u s full

வேலன். said...

Blogger சே. குமார் said...
அவசியமான பகிர்வு அண்ணா...
பகிர்வுக்கு நன்றி.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமார் சார்..வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...


Blogger Karthikeyan SS said...
thank u very u s full

நன்றி கார்த்திக்கேயன் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...