வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட

நம்மிடம் உள்ள புகைப்படங்களை சில சமயங்களில் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிக்கொள்ளவேண்டிய அவசியம் ஏற்படும். நம்மிடம் உள்ளபுகைப்படத்திற்கு ஏற்ப நாம் கன்வர்டரை தேடி புகைப்படத்தினை மாற்ற வேண்டும். ஆனால் இந்த சாப்ட்வேரில் 25 வகையான பார்மெட்டில் உள்ள புகைப்படத்தினை ஏற்றுக்கொள்வது மட்டும்  அல்லாமல் 18 வகையான பார்மெட்டில் புகைப்படத்தினை வெளியிடுகின்றது. 5 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

 டிராக் அனட் டிராப் முறையில் புகைப்படத்தினை இதில் இழுத்துவிடவும். 
 புகைப்படங்கள் மாறுவதை காணலாம். மேலும் இதில் உள்ள ஆப்ஷன் கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ளபார்மெட் டேபினை கிளிக்செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் 18 வகையான பார்மெட்டுக்கள் கொடுத்துள்ளார்கள். இதில் எதுதேவையோ அதனை தேர்வு செய்யலாம். உங்களுக்கு அனைத்து பார்மெட்டும் தேவையென்றாலும் அனைத்து ரேடியோ பட்டனை கிளிக்செய்து சேவ் செய்துவிடவும். இப்போது சேமித்த இடத்தில் சென்று பார்த்தால் உங்களுடைய அனைத்து புகைப்படங்களும் 18 வகையான பார்மெட்டில் மாறியிருப்பதை காணலாம் தேவையான பார்மெட்டினை எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...