வழக்கமாக டாக்குமெண்ட்கள்.பிடிஎப் பைல்கள்.புகைப்படங்கள் என அனைத்தையும் பிரிண்ட் செய்திட ஒவ்வொரு பைலாக திறந்து தனிதனியாக கட்டளை கொடுக்கவேண்டும். ஆனால் இந்த சாப்ட்வேரில் நீங்கள் பிரிண்ட் செய்திட விரும்பும் பைல்கள் அது எந்த பார்மெட்டில் இருந்தாலும் சரி இதன் மூலம் தேர்வு செய்து பின்னர் நேரடியாக மொத்தமாக பிரிண்ட் செய்திடலாம். 38 எம்.பி கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்திட- இணைய தளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Add Document கிளிக் செய்து நீங்கள் பிரிண்ட் செய்திட விரும்பும் பைல்களை தேர்வு செய்யவும். பின்னர் பிரிண்டர் மாடலை தேர்வு செய்யவும்.
பிரிண்டர் செட்டிங்ஸ்கும் நீங்கள் தேர்வு செய்திடலாம். வேர்ட்.எக்ஸெல்.பிடிஎப்.கோரல்டிரா.நோட்பேட்.வேர்ட்பேட்.புகைப்படங்கள்.பிடிஎப்.ஒப்பன் ஆபிஸ் என இருபதுக்கும் மேற்பட்ட பைல்களை இது ஆதரிக்கின்றது. தனிதனியாக நீங்கள் பிரிண்ட் செய்திடாமல் ஒரே சாப்ட்வேர மூலம் அனைத்து பைல்களையும் சுலபமாக பிரிண்ட் செய்திடலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment