வேலன்:-எம்பி3 ரிக்கார்டர்.

கணிணியில் நாம் காணும் வீடியோ மற்றும்ஆடியோ பைல்களிலிருந்து எம்.பி.3 பார்மெட்டில் ஆடியோவினை ரிக்கார்ட் செய்ய இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.72 கே.பி.அளவுள்ள இதனை பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள ஆப்ஷனை கிளிக் செய்து உங்களுக்கு தேவையான ஆடியோவின் பைட் அளவுகளை தேர்வு செய்யவும். பின்னர் சேமிக்கும் இடத்தனை தட்டச்சு செய்யவும். நீங்கள் சேமிக்கவிரும்பும் இடத்தினை தேர்வு செய்யவில்லையென்றால் டீபால்டாக அதுவே சேமிக்கும் இடத்தினை தேர்வு செய்யும்.
 
இப்போது உங்களுக்கான ஆடியோவினை ஒடவிட்டு இதில் உள்ள ஸ்டார்ட் கிளிக் செய்யவும் உங்களக்கான ஆடியோ ரிக்கார்ட் ஆக ஆரம்பிக்கும்.
நீங்கள் ரிக்கார்ட் செய்யவிரும்பும் பதிவு முடிந்ததும் இதில் உள்ள ஸ்டாப் ரிக்கார்ட் கிளிக் செய்யவும். உங்களுக்கான ரிக்காரிங் பைல்கள் கிடைக்கும். தேவையானதை கிளிக் செய்திட இந்த சாப்ட்வேரிலேயே நீங்கள் ரெக்கார்ட் செய்த பதிவு பிளே ஆகும். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...