வேலன்:-அனிமேஷன் பிளேயர்.

அனிமேஷன் படங்கள் எனப்படும் GIF பைல்களை பிளே செய்து பார்க்க இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 1 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 வரும் விண்டோவில் அனிமேஷன் படங்களை தேர்வு செய்தோ அல்லது டிராக் அன்ட்டிராப் செய்யுங்கள். படம் உங்களுக்கு ஓட ஆரம்பிக்கும. இதில் உள்ள பிளே மற்றும் ஸ்டாப் பட்டனை அடுத்து உள்ள பட்டனை கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் அனிமேஷனின் அடுத்த படம் முந்தைய படம் மற்றும் அனிமேஷன் படததின் வேகத்தை அதிகப்படுத்தவும் குறைக்கவும் முடியும். இதற்கு அடுத்துள்ள பட்டனை கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் அனிமேஷன் படத்தினை சேவ் செய்யவும். டெலிட் செய்திடவும் பிரிண்ட் செய்திடவும் முடியும்.பின்புற நிறததினையும் வேண்டிய நிறத்திற்கு மாற்றவும் முடியும்.இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்து வேண்டிய மாற்றங்களும் மொழி மாற்றவும் செய்திடலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...