வேலன்:-பைல்களை மற்றவர்கள் பார்வையிலிருந்து பாதுகாக்க

கணிணியில் சில முக்கியமான கோப்புகளை வைத்திருப்போம் அதனை மற்றவர்கள் பார்வையிடாமலும் திருத்தங்கள் செய்யாமலும இருக்க விரும்பினால் இந்த சாப்ட்வேரினை நாம்பயன்படுத்தலாம். 3 எம்பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திடஇங்கு கிளிக் செய்யவும்.
இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் நமது கணிணியில் உள்ள போல்டரையோ பைலினையோ தேர்வு செய்யவும். பின்னர் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
தேவைப்படும்வசதிகளை இதில் உள்ள ரேடியோ பட்டன் மூலம்தேர்வு செய்யவும். நீங்கள் பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க வேண்டுமானால் இதில் உள்ள செட் பாஸ்வேர்ட் கிளிக் செய்யவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
உங்கள் பாஸ்வேர்ட் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
உங்கள் போல்டர். பைல்களானது இப்போது கணிணியில் இருந்து முற்றிலும் மறைக்கப்பட்டுவிடும். மீண்டும் உங்களுக்கு தேவையேன்றால் பாஸ்வேர்ட் கொடுத:து உள்நுழைந்து அதனை பார்வையிடலாம். இதன் மூலம் நமக்கான பைல்களை மற்றவர்களிடம் இருந்து பாதுகாக்கலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...