வேலன்-வீடியோவில் ஆபாச காட்சிகளை நீக்க

சில ஆங்கில படங்கள் - தமிழ்படங்கள் - மற்றும் பிற மொழிப்படம் என எல்லா  படங்களிலும் கதை - நகைச்சுவை - சண்டைக்காட்சி என அருமையாக இருக்கும். ஆனால் நடுவில் சில படுக்கை அறை காட்சிகளையும் - ஆபாச காட்சிகளையும் -வன்முறை காட்சிகளையும் இணைத்துவிடுவார்கள். குடும்பம் - குழந்தைகளுடன் அமர்ந்து படம் பார்க்கும் சமயம் நமக்கு தர்மசங்கடமாகிவிடும். அந்த மாதிரி சமயங்களில் வீடியோக்களில் உள்ள அந்த மாதிரி ஆபாச காட்சிகளைxxx,18 +,adults only நாம் சுலபமாக இந்த சாப்ட்வேர் மூலம நீக்கி விடலாம்.11 எம்.பி. உள்ள இந்த சாப்ட்வேர் முற்றிலும் இலவசமே.இந்த சாப்ட்வேரை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.,இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் input file என்கின்ற இடத்தில் படத்தினை தேர்வு செய்யுங்கள். அதைப்போல Output file என்கின்ற இடத்தில் பைலை சேமிக்கும் இடத்தை தேர்வு செய்யுங்கள்.
கீழே உள்ள பிளே பட்டனை அழுத்தி படத்தினை ஓடவிடுங்கள்.
ஆபாச காட்சிகள் -வன்முறை காட்சிகள் எங்கு துவங்குகின்றதோ அந்த இடத்தில் கீழே உள்ள கத்தரி போன்ற ஐ-கானை கிளிக் செய்யுங்கள்.அதைப்போல முடியும் இடத்திலும் மீண்டும் கத்தரிபோன்ற ஐ-கானை கிளிக் செய்யுங்கள்.இப்போது X என்கின்ற டெலிட் பட்டனை கிளிக் செய்து பின்னர் Save Video கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ வரும்.
உங்கள் பணிமுடிந்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ மீண்டும் வரும்.
இப்போது நீங்கள் சேமித்த இடத்தில் சென்று பார்த்தீர்களேயானால் உங்கள் வீடியோ சென்சார் செய்து இருக்கும்.இனி தைரியமாக அனைவருடன அமர்ந்து படத்தை பார்ககலாம்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்தினை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்,
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

24 comments:

பிரகாசம் said...

மிகவும் உபயோகமான் மென்பொருள். ஆபாசக் காட்சிகளை நீக்க மட்டுமில்லாமல் நமது டிஜிட்டல் கேமராவில் எடுக்கும் வீடியோக்களில்கூட சில சமயங்கள் யாராவது குறுக்கே வருவார்கள். மேலும் ஒளி அமைப்பு குறைவான காட்சிகளும் இருக்கும் அவற்றை முறைப்படுத்த இந்த மென்பொருள் மிகவும் உதவியாக இருக்கும்

ஜிஎஸ்ஆர் said...

இன்னும் முயற்சித்து பார்க்கவில்லை தகவலுக்கு நன்றி

Riyas said...

நல்லதே செய்தீர்..

Chitra said...

மிகவும் உபயோகமான் மென்பொருள். ஆபாசக் காட்சிகளை நீக்க மட்டுமில்லாமல் நமது டிஜிட்டல் கேமராவில் எடுக்கும் வீடியோக்களில்கூட சில சமயங்கள் யாராவது குறுக்கே வருவார்கள். மேலும் ஒளி அமைப்பு குறைவான காட்சிகளும் இருக்கும் அவற்றை முறைப்படுத்த இந்த மென்பொருள் மிகவும் உதவியாக இருக்கும்

..... True. Thank you, Velan sir.

ஜெய்லானி said...

நல்லதுதான் . இந்த வேலையை பாக்க பொருமை வேனும்.

நல்ல அவசியமான சாஃப்ட் வேர்தான் .நன்றி.

வெறும்பய said...

மிகவும் உபயோகமான் மென்பொருள். ஆபாசக் காட்சிகளை நீக்க உதவியாக இருக்கும்...

நல்லது..

R.ரவிசிலம்பரசன்_சிங்கை said...

வேலன் சார்,

அருமை, தேவையில்லாத காட்ச்சிகளை எடிட் செய்ய மிகவும் பயனுள்ள மென்பொருள் ...

உங்கள் பணி மென்மெலும் சிறக்க வாழ்த்துகளுடன்......

Dj Mathan said...

கலங்கிட்டீங்க வேலன் சேர். ஆமா எனக்கு ஈ-மெயில் ல photoshop il நீங்கள் பதிவிடட்ட எழுத்துக்களை எப்படி போடுவது என்று சொல்லி தாரன் என்றீங்கள் சொல்லவே இல்லையே.............
mathandj@yahoo.com

சே.குமார் said...

இன்னும் முயற்சித்து பார்க்கவில்லை தகவலுக்கு நன்றி

vaanmohi said...

மிகவும் உபயோகமான மென்பொருள்

வேலன். said...

பிரகாசம் கூறியது...
மிகவும் உபயோகமான் மென்பொருள். ஆபாசக் காட்சிகளை நீக்க மட்டுமில்லாமல் நமது டிஜிட்டல் கேமராவில் எடுக்கும் வீடியோக்களில்கூட சில சமயங்கள் யாராவது குறுக்கே வருவார்கள். மேலும் ஒளி அமைப்பு குறைவான காட்சிகளும் இருக்கும் அவற்றை முறைப்படுத்த இந்த மென்பொருள் மிகவும் உதவியாக இருக்கும்//

உண்மைதான் பிரகாசம் சார். இந்த பாயிண்டை ஏனோ நான் பதிவிட மறந்துவிட்டேன்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ஜிஎஸ்ஆர் கூறியது...
இன்னும் முயற்சித்து பார்க்கவில்லை தகவலுக்கு நன்றி//

நன்றி ஜி.எஸ்.ஆர். சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Riyas கூறியது...
நல்லதே செய்தீர்//

நன்றி ரியாஸ் சார்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
மிகவும் உபயோகமான் மென்பொருள். ஆபாசக் காட்சிகளை நீக்க மட்டுமில்லாமல் நமது டிஜிட்டல் கேமராவில் எடுக்கும் வீடியோக்களில்கூட சில சமயங்கள் யாராவது குறுக்கே வருவார்கள். மேலும் ஒளி அமைப்பு குறைவான காட்சிகளும் இருக்கும் அவற்றை முறைப்படுத்த இந்த மென்பொருள் மிகவும் உதவியாக இருக்கும்

..... True. Thank you, Velan sir.//

நன்றி சகோதரி...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ஜெய்லானி கூறியது...
நல்லதுதான் . இந்த வேலையை பாக்க பொருமை வேனும்.

நல்ல அவசியமான சாஃப்ட் வேர்தான் .நன்றி//

உண்மைதான் அவசியம் பொறுமை வேண்டும் தான்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெய்லானி சார்..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

வெறும்பய கூறியது...
மிகவும் உபயோகமான் மென்பொருள். ஆபாசக் காட்சிகளை நீக்க உதவியாக இருக்கும்...

நல்லதுஃஃ//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

R.ரவிசிலம்பரசன்_சிங்கை கூறியது...
வேலன் சார்,

அருமை, தேவையில்லாத காட்ச்சிகளை எடிட் செய்ய மிகவும் பயனுள்ள மென்பொருள் ...

உங்கள் பணி மென்மெலும் சிறக்க வாழ்த்துகளுடன்......//

நன்றி சிம்பு சார்..காலையிலேயே வந்து விடுவீர்கள்.இப்போஎல்லாம் லேட்டாவருகின்றீர்கள்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன.

வேலன். said...

Dj Mathan கூறியது...
கலங்கிட்டீங்க வேலன் சேர். ஆமா எனக்கு ஈ-மெயில் ல photoshop il நீங்கள் பதிவிடட்ட எழுத்துக்களை எப்படி போடுவது என்று சொல்லி தாரன் என்றீங்கள் சொல்லவே இல்லையே.............
mathandj@yahoo.com//

நன்றி நண்பரே..நினைவிருக்கின்றது.நேரமில்லை. அவசியம் பதில் போடுகின்றேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

சே.குமார் கூறியது...
இன்னும் முயற்சித்து பார்க்கவில்லை தகவலுக்கு நன்றி//

வாங்க குமார் சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

vaanmohi கூறியது...
மிகவும் உபயோகமான மென்பொருள்ஃ//
வாங்க மொஹிதீன் சார்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன்.

குவைத் குமார் said...

வேலன் சார்,

இந்த மென்பொருள் ஒரு சில வீடியோ Format, 3gp, mpeg, vp6 Flash video போன்ற வீடியோ File களுக்கு Support பன்ன மாட்டேங்குது. எதாவது Plugins எதாவது install செய்யனுமா சார்.

பயனுள்ள மென்பொருள் கொடுத்ததற்கு நன்றிகள் பல.

Anonymous said...

very nice software

RAMACHANDRAN said...

very nice software

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

அருமையான பதிவு வேலன்சார் நானெடுத்த விடியோ வை எடிட் செய்ய பயனுள்ளதாக இருக்கிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...