வேலன்-கம்யுட்டர் அகராதி - இலவச மென்பொருள்



வேலன்:- கம்யூட்டர் அகராதி.







நாம் வீட்டில் ஆங்கில அகராதி (English Dictionary) வைத்திருப்போம் . ஒரு சிலர் 

ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி(Oxford English Dictionary) வைத்திருப்பார்கள்.

ஆனால் கம்யூடரில் வேலை செய்யும் சமயம் நமக்கு திடீர் என ஒரு சொல்லுக்கு 

அர்த்தம் தெரியவில்லையென்றால் அகராதி தேடி அலையவேண்டாம். இந்த

சாப்ட்வேர் நாம் டவுண்லோடு செய்தால் அது நமது கணிணியில் டெக்ஸ்ட்பாரில்

வந்து அமர்ந்துகொள்ளும். தேவைபடும் போது மவுஸால் சொடுக்கினால் 

wordweb தோன்றும். அதில் நாம் Lookup Box வரும். அதில் நமக்கு தேவையான 

வார்த்தையை டைப்செய்தால் அதற்கான அர்த்தம் வரும். மேலும் இதில் 

1. Nouns

2.Verbs

3.Adjectives

4.Adverbs 

மேற்கண்ட வார்த்தை எதுவோ அது செலக்ட்ஆகும். மேலும் இதில்

1.Nearest 

2.Synonyms

3.Parts

4.Type of

5.Types

என ஐந்து வகையான காலங்கள் ஓப்பன் ஆகும். நாம் தேடிய வார்த்தைக்கு 

அர்த்தம் பார்த்ததுடன் அதை ஒட்டிய வார்த்தையையும் காணலாம். அதுபோல்

எதுவேண்டுமோ அதை நாம் தேர்ந்தெடுக்கலாம். மேலும் Copy செய்யும் வசதியும் 

உள்ளது. 

அந்த தள முகவரி:- 



மென்பொருளை டவுண்லோடு செய்யுங்கள். உங்கள் கருத்துக்களை 

பதிவிடுங்கள்.மற்றவர்களும் இந்த வசதியை பெற நீங்கள் விரும்பினால் 

மறக்காமல் ஓட்டு போடுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

இன்றைய வலைப்பூவில் உதிரிப்பூ
சிடி டிரைவ் சிறிது நாளானால் ஓப்பன் ஆக மறுக்கும்.அந்த மாதிரி ஓப்பன் ஆக மறுத்தால் ஒரு காலி சிடியை டிரைவிலேயே  வைத்திருந்தால் டிரைவ் ஓப்பன் ஆவதில் சிரம ம் இருக்காது.



பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...