சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளுவர் மாவட்ட தொலைபேசி விவரம்

சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளுர் மாவட்ட தொலைபேசி சந்தாதரர்களின் முகவரி,மற்றும் தொலைபேசி எண் அறிய

உங்களது நண்பர் அல்லது உறவினர் சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளுர்

மாவட்டத்தில் வசிப்பவராக இருக்கலாம். அவர்களுடைய பெயர் தெரியும்

முகவரி தெரியாது. தெரிந்து கொள்ளலாம். அவர்களுடைய முகவரி தெரியும்

தொலைபேசி எண தெரியாது தெரிந்து கொள்ளலாம்.அவர்களுடைய பழைய

தொலைபேசி எண் தெரியும் ஆனால் புதிய எண் தெரியாது தெரிந்து கொள்ளலாம்.

இந்த சேவை அனைத்தும் இணையத்தின் உதவியுடன் செய்யப்படுகிறது. எனக்கு

இணைய இணைப்பு இல்லை அல்லது இணைய இணைப்பு கிடைக்காதபோது

என்ன செய்வது. அதற்கும் வழி உள்ளது.
முதலில் இந்த சுட்டியை சொடுக்கவும்:-உங்களுக்கு கீழே கண்ட சாளரம் கிடைக்கும்.


அதில் முதலில் உள்ள தொலைபேசி எண் எதிரில் உள்ள ரேடியோ பட்டனை தேர்வு செய்யவும். வரும் தொலைபேசி எண் பட்டியில் நீங்கள் முகவரி தேவைப்படும் எண்ணை குறிப்பிட்டு சர்ச் கொடுக்கவும்.சில நிமிடங்களில் உங்களுக்கு தேவையான முகவரி கிடைக்கும்.சரி பெயர் தெரியும் தொலைபேசி எண் தெரியாது . அடுத்து உள்ள பெயருக்கு எதிரில் உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்யவும். பெயர் எழுத பட்டி கிடைக்கும். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நபரின் பெயரை தட்டச்சு செய்து
சர்ச் கொடுக்கவும். உங்கள் தேடும் நபரின் பெயருள்ளவர்கள் அனைவருடைய முகவரி கிடைக்கும் . அதில் நீங்கள் தேடும் நபரின் பெயரை தேர்வு செய்யவும்.
அடுத்து முகவரி கொடுத்து தொலைபேசி எண்ணை தேர்வு செய்தல். மேற்கண்ட வழிகளில் முகவரிக்கு எதிரில் உள்ள ரேடியோ பட்டனை தேர்வுசெய்து முகவரி தட்டச்சு செய்து சர்ச் கொடுத்தால் தொலைபேசி எண் கிடைக்கும்.
இறுதியாக பழைய தொலைபேசி எண் கொடுத்து புதிய எண்ணை அறிந்துகொள்ளலாம்.

இணைய இணைப்பு இல்லாத போது உங்களுக்கு இந்த தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு நீங்கள் தகவல் தெரிவித்தால் உங்களுக்கு தேவையான தகவல்கள் தருவார்கள்.

தகவலுக்கான தொலைபேசி எண்:- 044-253 300 90

சென்னை தொலைபேசியின் முகவரி சுட்டி:- http://chennai.bsnl.co.in/

உங்கள் கருத்துக்களை மறக்காமல் பின்னுடமிடுங்கள்.

வாழ்க வளமுடன்,
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...