
வேலன்:-போட்டோஷாப் பாடம்-17 Pattern Images
இதுவரை போட்டோஷாப் பாடங்கள்
படிக்காதவர்கள் இங்கே சென்று
வேண்டிய பாடத்தை படித்துக்கொள்ளவும்.
இன்றைய பாடத்தில் Pattern image
பற்றி பார்க்கலாம்.
Pattern image ஆனது ஒரு படத்தில்
குறிப்பிட்ட இடத்தை - குறிப்பிட்ட
நபரை தேர்வு செய்து அதை அதிக
எண்ணி்க்கையில் சுலபமாக
நிரப்ப நமக்கு உதவுகின்றது.அதற்கு நாம்
மானையும் மயிலையும்
(மானாட மயிலாட அல்ல)
எடுத்துக்கொள்ளலாம்.
முதலில் மான் படத்தை எடுத்துக்
கொண்டுள்ளேன்.

இதன் image அளவு அகலத்தில்
6.667 மற்றும் உயரத்தில்
8.889 அங்குலத்தில் உள்ளது.

இதில் அதன் முகம் மட்டும்
நான் தேர்வு செய்துள்ளேன்.

முன்பே பாடத்தில் சொன்னது போல்
மார்க்யு டூலால் கட் செய்து கொள்ளுங்கள்.
பின்னர் Ctrl+N-ஐ அழுத்தி பின் Enter
தட்டுங்கள். உங்களுக்கு புதிய விண்டோ
ஓப்பன் ஆகியிருக்கும். அதில் கட் செய்த
மானை பேஸ்ட் செய்யுங்கள்.

உங்களுக்கு மேற்கண்டவாறு படம்
கிடைக்கும். இனி பழைய படத்தை
முடி விடுங்கள். இப்போது ஸ்கீரினில்
தலை மட்டும் உள்ள மான கிடைக்கும்.
அதன் இமேஜ் அளவை அகலம் 2 அங்குலம்
உயரம் 3 அங்குலம் என மாற்றிக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு கீழ் கண்டவாறு படம் கிடைக்கும்.

இதை அப்படியே விட்டுவிட்டு இப்போது
மேல்புறம் உள்ள Edit கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்
ஆகும்.

அதில் உள்ள Define Pattern
கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்
கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

ஓகே கொடுங்கள். இப்போது
நீங்கள் கொடுத்துள்ள Standard அளவின்
படி புதிய விண்டோ ஓப்பன் செய்யுங்கள்.
நான் அகலத்தில் 10 அங்குலமும்
உயரத்தில் 12 அங்குலமும் வைத்து
புதிய விண்டோ ஓப்பன் செய்துள்ளேன்.
இனி நீங்கள் Shift + F5 அழுத்துங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ
ஓப்பன் ஆகும்.

இதில் Use எதிரில்உள்ள கட்டத்தில்
Pattern தேர்வு செய்து பின் Custom Pattern
எதிரில்உ ள்ள ரேடியோ பட்டனை கிளிக்
செய்தால் உங்களுக்கு மேலே உள்ளவாறு
ஓப்பன் ஆகும். இதில் நீங்கள் தேர்வு செய்த
மானின் படம் முதலில் இருக்கும்.
அந்த படத்தை தேர்வு செய்து ஓ,கே.
கொடுங்கள். கண் இமைக்கும் நொடியில்
என்ன நடக்கின்றது என பாருங்கள்.

ஒரு மான் பாருங்கள் - 20 மானாக
வந்து விட்டது. இதைப்போல்
இந்த மயிலை பாருங்கள்.

மயிலின் அளவு கீழே கொடுத்துள்ளேன்.
இதில் மயிலின் முகம் மட்டும் கட் செய்துள்ளேன்.

வேண்டிய அளவிற்கு படத்தின் இமேஜை
குறைத்துள்ளேன். படம் கீழே..
இதையும் Edit -Define Pattern -O.K.
கொடுத்தேன். புதிய விண்டோ
ஓப்பன் செய்தேன். அதில்
மானை நிரப்பியவாறு மயிலையும்
நிரப்பினேன்.
படத்தை பாருங்கள்.

இதைப்போலவே நாம் குருப்பில்
நிற்கும் நபரின் முகம் மட்டும் கட் செய்து
தனியே இவ்வாறு செய்துகொள்ளலாம்.
பதிவுகளை பாருங்கள். பிடித்திருந்தால்
ஓட்டுப்போடுங்கள். பதிவின் நீளம் கருதி
பாடத்தை இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
சற்று முன் கிடைத்த விருது:-
தமிழ் 10 தளத்தில் எனக்கு இந்த வார கிரீடம்
அளித்துள்ளார்கள். அவர்களக்கு உங்கள்
சார்பாக எனது நன்றி...
பின்குறிப்பு:- இந்த அளவீடுகள் போட்டோஷாப்பில்
மிக முக்கியமானதாகும். நீங்கள் எடுக்கும்
போட்டோவினை ஸ்டுடியோவில் அச்சடுக்கும்
சமயம் இந்த அளவில்தான் அச்சடுப்பார்கள்.
எனவே இதை தனியே குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
STAMP SIZE:-
2 x 3 c.m.
PASS PORT SIZE
3.5 X 4.5 c.m.
2 B
5 X 7 c.m.
MAXI
4 X 6 inch.
OTHER SIZES
8 X 6
10 X 8
12 X 8
10 X 15
12 X 15
12 X 18
12 X 24
12 X 30
12 X 36
JUST FOR JOLLY PHOTOES:-
ME THE FIRST- க்காக இருவருக்கும் சண்டை:-
14 comments:
"நான் ஒரே ஆள் நூறு பேருக்கு சமம்" என்பதை நீங்க சொன்ன மெத்தடுல வேண்டுமென்றால் ட்ரை பண்ணலாம்.
பகிர்வுக்கு நன்றி.
கிரீடம் கிடைத்ததில் மிக மிக மகிழ்ச்சி!
மேலும் வளர வாழ்த்துக்கள்!
வேலன் சார்,
ஏன் சார் இப்படி செய்துவிட்டீர்கள், மானை வெட்டி விட்டீர்கள் மயிலை வெட்டி விட்டீர்கள்,
யாராவது பார்த்து சொல்வதிற்குள் வெட்டிய எல்லாவற்றையும் சாப்பிட்டுவிடுங்கள்.
ஏற்கெனவே அந்த வட நாட்டு நடிகர் மானை வெட்டி பட்ட பாடு உங்களுக்குத் தெரியாதா....
ஆனால் கிடைத்த ஒரு மானை வைத்து நூறாக்கி விட்டீர்களே.!!! நீங்களும் சூப்பர் ஸ்டார்தான் என்பதை ஒத்துக்கொள்கிறோம்.
இந்த ஸ்டாப்புகளை வைத்து போஸ்ட் செய்ய முடியுமா!!!
அருமையான பதிவு. வாழ்த்துகள்.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்
//
விருதை காண இங்கு கிளிக் செய்யவும்.
//
இந்த சுட்டியை கிளிக்கி பார்த்தால் கேள்விகள் மட்டும் புரிகிறது. பதில்கள் வேறு ஏதோ மொழியில் இருப்பது போன்று எனக்கு தெரிகிறது.
முடிந்தால் அதை உங்கள் கணினியில் இருந்து ஆக மாற்றி தனி மடலின் அனுப்புமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
வேலன் சார்,
சற்று முன் கிடைத் கீரிடத்திற்கும் இனி கிடைக்க விருக்கும் மகுடத்திற்கும் சேர்த்து என்
உளம் கனிந்த வாழ்த்துகள்....
வளர்க உங்கள் பணி, வளர்க உங்கள் கணிணித் தொண்டு இத்தமிழ் மணக்கும் இணையவெளியில்.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்
யூர்கன் க்ருகியர் கூறியது...
"நான் ஒரே ஆள் நூறு பேருக்கு சமம்" என்பதை நீங்க சொன்ன மெத்தடுல வேண்டுமென்றால் ட்ரை பண்ணலாம்.
பகிர்வுக்கு நன்றி//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
யூர்கன் க்ருகியர் கூறியது...
கிரீடம் கிடைத்ததில் மிக மிக மகிழ்ச்சி!
மேலும் வளர வாழ்த்துக்கள்!//
வாழ்த்தியமைக்கு நன்றி ...
வாழ்க வளமுடன்,
வேலன்.
வேலன் சார்,
ஏன் சார் இப்படி செய்துவிட்டீர்கள், மானை வெட்டி விட்டீர்கள் மயிலை வெட்டி விட்டீர்கள்,
யாராவது பார்த்து சொல்வதிற்குள் வெட்டிய எல்லாவற்றையும் சாப்பிட்டுவிடுங்கள்.
ஏற்கெனவே அந்த வட நாட்டு நடிகர் மானை வெட்டி பட்ட பாடு உங்களுக்குத் தெரியாதா....
ஆனால் கிடைத்த ஒரு மானை வைத்து நூறாக்கி விட்டீர்களே.!!! நீங்களும் சூப்பர் ஸ்டார்தான் என்பதை ஒத்துக்கொள்கிறோம்.
இந்த ஸ்டாப்புகளை வைத்து போஸ்ட் செய்ய முடியுமா!!!
அருமையான பதிவு. வாழ்த்துகள்.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்
வருகைக்கும் நீண்ட கருத்துக்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
என்றும் அன்புடன்,
வேலன்.
யூர்கன் க்ருகியர் கூறியது...
//
விருதை காண இங்கு கிளிக் செய்யவும்.
//
இந்த சுட்டியை கிளிக்கி பார்த்தால் கேள்விகள் மட்டும் புரிகிறது. பதில்கள் வேறு ஏதோ மொழியில் இருப்பது போன்று எனக்கு தெரிகிறது.
முடிந்தால் அதை உங்கள் கணினியில் இருந்து ஆக மாற்றி தனி மடலின் அனுப்புமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.//
உங்களுக்கு மராட்டிய மொழி தெரியும் என நினைத்திருப்பார்கள்.
பிடிஎப் ஆக மாற்றி அனுப்பகின்றேன்.
நன்றி
வாழ்க வளமுடன்,
வேலன்.
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
வேலன் சார்,
சற்று முன் கிடைத் கீரிடத்திற்கும் இனி கிடைக்க விருக்கும் மகுடத்திற்கும் சேர்த்து என்
உளம் கனிந்த வாழ்த்துகள்....
வளர்க உங்கள் பணி, வளர்க உங்கள் கணிணித் தொண்டு இத்தமிழ் மணக்கும் இணையவெளியில்.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்//
தங்கள் அன்பிற்கும் ஆசீர்வாதத்திற்கும் எனது நன்றிகள்...
தொடர்ந்து உங்கள் ஆசீர்வாதம் வேண்டி....
என்றும் அன்புடன்,
வேலன்.
அப்பப்ப அப்பப்பா!சொல்ல வருவோமுல்ல.வித்தைகள் தொடரட்டும்!கூடவே மகுடங்களும்.வாழ்த்துக்கள்.
ராஜ நடராஜன் கூறியது...
அப்பப்ப அப்பப்பா!சொல்ல வருவோமுல்ல.வித்தைகள் தொடரட்டும்!கூடவே மகுடங்களும்.வாழ்த்துக்கள்//
நன்றி ராஜ நடராஜன் அவர்களே...
அடிக்கடி வாருங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்....
வாழ்க வளமுடன்,
வேலன்.
Congrats. I cant read your interview answers. Pattern Image lesson is very nice. Thank you for your service.
Malu கூறியது...
Congrats. I cant read your interview answers. Pattern Image lesson is very nice. Thank you for your service.//
நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
Post a Comment