வேலன்:-நமது புகைப்படத்தை அசையும் படமாக மாற்ற


நமது புகைப்படங்களை வெளிநாட்டு சூழ்நிலை

யில் வெளியிட்டு ஏற்கனவே பார்த்தோம்.

அதை இதுவரையில் பர்ர்க்காதவர்கள்

இங்கு கிளிக் செய்து பார்க்கவும்.

மாறிவரும் காலத்திற்கு ஏற்ப அவர்கள்

தற்போது நமது புகைப்படத்தையே அசையும்

வகையில் வடிவமைத்துள்ளார்கள்.

அதன் முகவரி தளம் செல்ல இங்கு

கிளிக் செய்யவும். உங்களுக்கு அதன்

தளம் ஓப்பன் ஆகும். அதில் உள்ள படங்களில்

வீடியோ சிம்பல் போட்டுள்ள படத்தை

கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு வேறு ஒரு

விண்டோ ஓப்பன் ஆகும். அதில் நீங்கள்

மாற்றவிரும்பும் படத்தை அதில் பதிவேற்றவும்.

சில நிமிடங்கள் காத்திருங்கள். உங்கள் படமானது

தயார் ஆகி உங்களுக்கு கிடைக்கும். அதனை

நீங்கள் உங்கள் கணிணியில் வேண்டிய இடத்தில்

சேமித்துக் கொள்ளலாம்.
உங்கள் பார்வைக்கு சில வீடியோ படங்களை

இங்கு பதிவிட்டுள்ளேன்.

இந்த படத்தில் உள்ள தொலைக்காட்சிப்

பெட்டியில் நமது படம் ஓடிக்கொண்டு இருக்கும்.

இந்த படத்தில் உள்ள மங்கை நமது முகத்துடன்

நடனமாடுகின்றார்.மாதிரிக்கு மேலும் சில படங்கள்:-பதிவுகளை பாருங்கள்..பிடித்திருந்தால்

மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

புகைப்படத்தை அசையும் படமாக இதுவரை

மாற்றிக்கொண்டவர்கள்:-
web counter
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

8 comments:

யூர்கன் க்ருகியர் said...

மீசை வைத்த நடனமாடும் மங்கை - கலக்கல்!

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் said...

வேலன் சார்,

யார் அந்த யுவதி உங்கள் புகைப்படத்தை வைத்துக்கொண்டு தேடிக்கொண்டிருகிறார்,

உங்கள் முவரியை கொடுத்துவிடவா...

நல்ல பதிவு ஆனால் மாட்டிக்கொண்டீர்கள் வசமாக...

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

டவுசர் பாண்டி said...

டான்சு, ஆடரீயா வாஜார் !! யார்னா பாக்க போறாங்கோ பா !!

கார்த்திக் said...

கட்சி தலைவர் கட்-அவுட் மாதிரி இருக்குங்க.. அசத்துங்க..

வேலன். said...

யூர்கன் க்ருகியர் கூறியது...
மீசை வைத்த நடனமாடும் மங்கை - கலக்கல்!//

நண்பர்களின் படத்தை போடலாம் என நினைத்தேன் அப்புறம் கோபித்துக்கொள்வார்களோ என போடவில்லை...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
வேலன் சார்,

யார் அந்த யுவதி உங்கள் புகைப்படத்தை வைத்துக்கொண்டு தேடிக்கொண்டிருகிறார்,

உங்கள் முவரியை கொடுத்துவிடவா...

நல்ல பதிவு ஆனால் மாட்டிக்கொண்டீர்கள் வசமாக...

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்//

நன்றி நண்பரே....

வாழ்க வளமுடன்,
என்றும் அன்புடன்,
வேலன்.

வேலன். said...

டவுசர் பாண்டி கூறியது...
டான்சு, ஆடரீயா வாஜார் !! யார்னா பாக்க போறாங்கோ பா //

அட நீ வேறே பயம் கிளப்பாதப்பா...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

கார்த்திக் கூறியது...
கட்சி தலைவர் கட்-அவுட் மாதிரி இருக்குங்க.. அசத்துங்க..//

நன்றி நண்பரே...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

வாழ்க வளமுடன்,
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...