வேலன்:-நமது வீட்டை நாமே டிசைன்செய்ய






எலி வளையானாலும் தனிவளை சிறந்தது என


பழமொழி உள்ளது. அதுபோல் நமக்கென்று

ஒரு சின்னவீடு இருந்தால் (அதற்குள் தப்பான

அர்த்தம் கொள்ளவேண்டாம்) எப்படி இருக்கும்.

நமது வீட்டை நாமே டிசைன் செயயலாம்.

பொருட்களை வைத்து வீட்டின் வடிவமைப்பை

அறிந்துகொள்ளலாம். மாற்றங்கள் இருந்தால்

அதை செயல்படுத்தலாம். இருக்கின்ற வீட்டில்

கட்டிலோ - சோபா வோ புதிதாக வாங்கும்போது

அதை நமது அறையின் அளவிற்கு வைத்து

அந்தபொருளைவைத்தால் எங்குவைத்தால் நன்றாக

இருக்கும் என முன்னோட்டம் பார்க்கலாம்.

முதலில் இந்த சாப்ட்வேரை டவுண்லோடு

செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்.(வெறும்

26 எம்.பி.கொள்ளலவு தான்)

நீங்கள் சாப்ட்வேரை டவுண்லோடு செய்து

உங்கள் கணிணியில் இன்ஸ்டால் செய்தபின்

இந்த சாப்ட்வேரை ஓப்பன்செய்தால்

உங்களுக்கு கீழ்கண்டவாறு விண்டோ ஓப்பன்

ஆகும்.

இதில் விண்டோ நான்கு கட்டங்களாக பிரிந்து

இருக்கும். இதில் உள்ள முதல் கட்டத்தில்

நீங்கள் சேர்க்கவிரும்பும் பொருள்களின்

அட்டவணையிருக்கும். இரண்டாவது கட்டம்

நீங்கள் வரையப்போவது. மூன்றாவது கட்டம்

நீங்கள் சேர்த்த பொருள்களின் அளவுகளின்

கட்டம். நான்காவது 3D view.இதில் பார்த்துதான்

நீங்கள் வீட்டின் அளவை பார்க்கலாம்.

முதலில் நீங்கள் உங்கள் வீட்டின் சுற்று சுவரை

தேர்ந்தெடுங்கள்.



இதில் உள்ள பிளான் நீங்கள் கிளிக் செய்தால்

உங்களுக்கு மேல் உள்ள வாறு விண்டோ ஓப்பன்

ஆகும். அதில் உள்ள Create Walls (Ctrl+Shift+W)

கிளிக் செய்யுங்கள்.



உங்கள் கர்சரை இரண்டாவது கட்டத்துக்கு

கொண்டு செல்லுங்கள். நீங்கள் விரும்பிய

அளவுக்கு கர்சரை மேலிருந்து கீழாகவோ -

வலமிருந்து இடமாகவோ கொண்டு செல்லுங்கள்.

நீங்கள் விரும்பிய அளவுக்கு கர்சர் கொண்டு

சென்றபின் கர்சர் ரைட் கிளிக் செய்யுங்கள்.

கோடு நின்றுவிடும். இதுபோல் உங்கள் விரும்பிய

அளவுக்கு சுற்று சுவரை அமையுங்கள்.


வீட்டின் சுற்று சுவரை அமைத்துவிட்டீர்கள்.

இனி வீட்டின் உள்ளே பார்டீசியன் பண்ணுங்கள்.



இனி முதல்கட்டத்திற்கு வாருங்கள். நமது

வீட்டிற்கு ஜன்னல் - கதவுகளை பொருத்தலாம்.

இதில் உள்ள Doors and Window கட்டத்திற்கு

எதிரில் உள்ள + கிளிக் செய்தால் உங்களுக்கு

மேற்கண்டவாறு விண்டோ விரிவடையும்.

அதில் நீங்கள் விரும்பும் கதவு - ஜன்னலை

தேர்ந்தேடுங்கள். நீங்கள் கதவு - ஜன்னல்

அருகே கர்சரை கொண்டுசென்றாலே

உங்கள் கர்சர் அருகில் கதவு - ஜன்னல்

அளவு தெரியும்.



பின் அதை கிளிக் செய்யுங்கள்.



அதில் உள்ள Add to Home கிளிக் செய்தால்

அந்த கதவானது இரண்டாவது கட்டத்திற்கு

வந்துவிடும்.



அந்த கதவை கிளிக் செய்தால் மேற்கண்ட

விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் உள்ள

Modify Furniture கிளிக் செய்தால் கீழ்கண்ட

விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் உள்ள அளவுகளை நம் விருப்பப்படியும்

வேண்டுமானால் கலரும் கொடுக்கலாம்.

இறுதியாக ஓகே கொடுங்கள். இப்போது

அந்த கதவையோ -ஜன்னலையோ வேண்டிய

இடத்துக்கு கர்சரால் நகர்த்தி வைத்துக்கொள்ளுங்கள்.



இதைப்போலவே ஜன்னலும் அமைத்துக்கொள்ளுங்கள்.

இவ்வாறே உங்கள் படுக்கை அறையையும் -

குளியல் அறை - வரவேற்பறை - சமையல் அறை

அமைத்துக்கொள்ளுங்கள்.



இப்போது நான் மேற்கண்ட படத்தில் ஒரு

வரவேற்பறை- ஒரு சமையல் அறை--

ஒரு படுக்கைஅறை மற்றும ஒரு குளியல்

அறை அமைத்துள்ளேன். இனி வரவேற்பறை

யில் சோபா செட் போடலாம்.


நீங்கள் பொருத்திய பொருட்களின் அளவு விவரம்

மூன்றாம் கட்டத்தில் வருவதை காணலாம்.

படம் கீழே..


இதில் மாடிப்படி அமைக்கும் வசதியும் உள்ளது.

சுழல் படி வேண்டுமானாலும் பொருத்திக்

கொள்ளலாம். அவ்வளவுதான் எல்லாம்

பொருத்தியாகிவிட்டது. இனி அதை நாம்

பார்க்கவேண்டாமா? இதில் மேல்புறம்

3D Viewகிளிக் செய்து அதில் உள்ள Virtual Visit

கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கேமரா

ஓன்று தோன்றும்.


கேமரா கீழ் மூலையில் உள்ளதா? அதை நீங்கள்

எந்த அறையில் இருந்து பார்க்க வேண்டுமோ

அந்த அறையில் செட் செய்யுங்கள். கீழே

நான்காவது கட்டத்தை பாருங்கள். கேமரா வியு

அதில் தெரியும்.







இதில் நான்காவது கட்டத்தில் நீங்கள் கர்சரை

நகர்த்தினாலும் இரண்டாவது படத்தில் உள்ள

கேமரா நகர்வதை காணலாம்.

இனி சேவ் செய்திடுங்கள். இதை பிரிண்ட்

எடுக்கலாம். அல்லது பிடிஎப் பைலாக சேமிக்கலாம்.


பதிவின் நீளம் கருதி பதிவை இத்துடன் முடித்துக்

கொள்கின்றேன். வீடு கட்டுங்கள். பதிவு

பிடித்திருந்தால் கிரகப்பிரவேசத்திற்கு

சொல்லி அனுப்புங்கள். என்னை பின்தொடரும்

160 பேருடன் வந்து விடுகின்றோம்.

வாழ்க வளமுடன்,

வேலன்.


இதுவரை வீடுகட்ட ஆரம்பித்துள்ளவர்கள்:-

web counter
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

36 comments:

Tech Shankar said...

great comedy boss.


//ஒரு சின்னவீடு இருந்தால் (அதற்குள் தப்பான

அர்த்தம் கொள்ளவேண்டாம்)

Anonymous said...

வணக்கம் நண்பரே,

உங்கள் தளத்தை எக்ஸ்புளோர் 8 மூலம் பார்வையிட முடியவில்லை. உங்கள் பின்தொடருவோர் widget ஐ ரொம்ப கீழே கொண்டு செல்லவும்.

இப்படிக்கு
மிக்கி

Jaleela Kamal said...

ரொம்ப அருமை

//ஒரு சின்னவீடு இருந்தால் (அதற்குள் தப்பான

அர்த்தம் கொள்ளவேண்டாம்)


ஹா ஹா

யூர்கன் க்ருகியர் said...

வூடு கட்டி அடிக்கிறீங்க ..கலக்குங்க சார் !

நிஜத்துல தான் கட்ட முடியல ..கம்ப்யூட்டர்லயாவது வீடு கட்டி சந்தோஷ பட்டுக்க வேண்டியதுதான் :)
இன்னொரு விஷயம் !.. பழமொழியை கொண்டு இடுகையை ஆரம்பிக்கும் ஸ்டைல் ரொம்ப நல்லாருக்கு.

Anonymous said...

அது எலி வலை இல்லீங்க, "வளை". எழுதற முதல் வாக்கியத்திலேயே எழுத்துப் பிழை இருக்கு.......... என்ன சொல்ல?

நீங்க தொழில் நுட்பத்துல வல்லவரா இருக்கலாம், ஆனா தமிழை சிதைக்காதீங்க.

வேலன். said...

தமிழ்நெஞ்சம் கூறியது...
great comedy boss.


//ஒரு சின்னவீடு இருந்தால் (அதற்குள் தப்பான

அர்த்தம் கொள்ளவேண்டாம்)//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

மிக்கி கூறியது...
வணக்கம் நண்பரே,

உங்கள் தளத்தை எக்ஸ்புளோர் 8 மூலம் பார்வையிட முடியவில்லை. உங்கள் பின்தொடருவோர் widget ஐ ரொம்ப கீழே கொண்டு செல்லவும்.

இப்படிக்கு
மிக்கி//
சரி செய்கின்றேன் நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Jaleela கூறியது...
ரொம்ப அருமை

//ஒரு சின்னவீடு இருந்தால் (அதற்குள் தப்பான

அர்த்தம் கொள்ளவேண்டாம்)


ஹா ஹா//

சின்னவீடு என்றதும் எத்தனைபேர் பின்னுட்டம் போடுகின்றார்கள் பாருங்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

யூர்கன் க்ருகியர்..... கூறியது...
வூடு கட்டி அடிக்கிறீங்க ..கலக்குங்க சார் !

நிஜத்துல தான் கட்ட முடியல ..கம்ப்யூட்டர்லயாவது வீடு கட்டி சந்தோஷ பட்டுக்க வேண்டியதுதான் :)
இன்னொரு விஷயம் !.. பழமொழியை கொண்டு இடுகையை ஆரம்பிக்கும் ஸ்டைல் ரொம்ப நல்லாருக்கு.//

சார் ... உங்க பின்னாலேயே பாபு சார் வருகின்றார்..பழமொழியை பார்த்துச் சொல்லனும்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Babu கூறியது...
அது எலி வலை இல்லீங்க, "வளை". எழுதற முதல் வாக்கியத்திலேயே எழுத்துப் பிழை இருக்கு.......... என்ன சொல்ல?

நீங்க தொழில் நுட்பத்துல வல்லவரா இருக்கலாம், ஆனா தமிழை சிதைக்காதீங்க.//

நண்பரே...நான் தொழில்நுட்பத்தில் LKG மாணவன். தொழில்நுட்ப ஜாம்பவான்கள் வலைதளத்தில் நிறையபேர் உள்ளனர். பதிவை இடும் அவசரத்தில் நேர்ந்த எழுத்துப்பிழை..
தவறை திருத்திவிட்டேன் நண்பரே...
தவறை சுட்டிகாட்டியமைக்கு நன்றி..

வாழ்க வளமுடன்,
வேலன்.

கலையரசன் said...

இப்பொழுது வீடு கட்டிகொண்டிருகிறேன்...
எனக்கு மிகவும் பயனுள்ள பதிவு!
நன்றி பாஸ்..

Thamiz Priyan said...

என்னோட வீட்டின் கடைசி கட்டத்தில் இருக்கேன்.. சில மாதங்களுக்கு முன் கிடைத்து இருந்தால் பெரிதும் பயன்பட்டு இருக்கும்.. ஆனாலும் ரொம்ப நன்றி வேலன் சார்! எனக்கு ரொம்ப பயன்படும்.

ரவி said...

அபார உழைப்போடு கூடி உங்கள் இந்த இடுகை, அருமை...!!!!!!!!!!

வடுவூர் குமார் said...

உபயோகப்படுத்திவிட்டு சொல்கிறேன்.இலவசம் என்பதால் தாரளமாக முயற்சிக்கலாம்.

யூர்கன் க்ருகியர் said...

//நண்பரே...நான் தொழில்நுட்பத்தில் LKG மாணவன். //

இதே வேகத்துல போனீங்கன்னா Phd வாங்கிடுவீங்க !
வாழ்த்துக்கள் வேலன் சார்

-

யூர்கன் க்ருகியர்

geevanathy said...

மிகவும் பயனுள்ள பதிவு!
மிக்க நன்றி

வேலன். said...

கலையரசன் கூறியது...
இப்பொழுது வீடு கட்டிகொண்டிருகிறேன்...
எனக்கு மிகவும் பயனுள்ள பதிவு!
நன்றி பாஸ்//

தங்கள் வீடு கிரகபிரவேசத்திற்கு சொல்லி அனுப்புங்கள். வந்து விடுகின்றோம். கட்டட கலை சம்பந்தமாக சந்தேகம் இருந்தால் இ-மெயிலில் கேளுங்கள்.
தெரிந்த பதிலை அனுப்பிவைக்கிறேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

தமிழ் பிரியன் கூறியது...
என்னோட வீட்டின் கடைசி கட்டத்தில் இருக்கேன்.. சில மாதங்களுக்கு முன் கிடைத்து இருந்தால் பெரிதும் பயன்பட்டு இருக்கும்.. ஆனாலும் ரொம்ப நன்றி வேலன் சார்! எனக்கு ரொம்ப பயன்படும்//

பதிவை பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள் நண்பரே..அடுத்து சின்னவீடு கட்டும்போது (சிறியதாக வீடு கட்டும்போது என அர்த்தம் எடுத்துக்கொள்ளவும்)உபயோகப்படும்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

செந்தழல் ரவி கூறியது...
அபார உழைப்போடு கூடி உங்கள் இந்த இடுகை, அருமை...!!!!!!!!!!//

பதிவுலகில் மூத்தவர் நீங்கள்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
தங்கள் ஆசிர்வாதம் வேண்டி...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

வடுவூர் குமார் கூறியது...
உபயோகப்படுத்திவிட்டு சொல்கிறேன்.இலவசம் என்பதால் தாரளமாக முயற்சிக்கலாம்.//

முயற்சிசெய்து பார்த்து எப்படி இருக்கின்றது என சொல்லுங்கள்.நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

யூர்கன் க்ருகியர்..... கூறியது...
//நண்பரே...நான் தொழில்நுட்பத்தில் LKG மாணவன். //

இதே வேகத்துல போனீங்கன்னா Phd வாங்கிடுவீங்க !
வாழ்த்துக்கள் வேலன் சார்

-

யூர்கன் க்ருகியர்//

நீங்க பதிவைப்பற்றி தானே சொல்கின்றீர்கள்...?

வாழ்த்துக்கு நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

த.ஜீவராஜ் கூறியது...
மிகவும் பயனுள்ள பதிவு!
மிக்க நன்றி//

கருத்துக்கு நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

Muthu Kumar N said...

வேலன் சார்,

அமர்க்களப்படுத்தி விட்டீர்கள், அற்புதமான பதிவு, கேட்டவுடன் தரும் அலவுதீன் பூதம் போல் உங்கள் பதிவின் உதவியால் நினைத்த விதத்தில் விதவிதமாய் வீடு கட்டி
கனவுவீடுகளை கண்முன் கணிணியில் கண்கவர் வண்ணத்தில் கல்லில்லாமல் கட்டி முடிக்க நம் வாசகர்களுக்கு அருமையான மென்பொருள் மற்றும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்று விளக்கவுரையோடு.

வாழ்க உங்கள் பணி தொடர்ந்து உங்களை தொடர்பவர்களுக்காக மற்றும் உங்களை தொடரப்போகிவர்களுக்கவும்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

வடுவூர் குமார் said...

முயற்சித்ததில் நன்றாகவே இருக்கு,ஆனால் கதவு இரண்டாக இருக்க ஒரு ஆப்ஷனும் கண்ணில் படவில்லை.இலவசத்துக்கு இதுவே அதிகம் என்பதால் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

MCX Gold Silver said...

மிகவும் பயனுள்ள பதிவு!
மிக்க நன்றி

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
வேலன் சார்,

அமர்க்களப்படுத்தி விட்டீர்கள், அற்புதமான பதிவு, கேட்டவுடன் தரும் அலவுதீன் பூதம் போல் உங்கள் பதிவின் உதவியால் நினைத்த விதத்தில் விதவிதமாய் வீடு கட்டி
கனவுவீடுகளை கண்முன் கணிணியில் கண்கவர் வண்ணத்தில் கல்லில்லாமல் கட்டி முடிக்க நம் வாசகர்களுக்கு அருமையான மென்பொருள் மற்றும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்று விளக்கவுரையோடு.

வாழ்க உங்கள் பணி தொடர்ந்து உங்களை தொடர்பவர்களுக்காக மற்றும் உங்களை தொடரப்போகிவர்களுக்கவும்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்//

நன்றி முத்துக்குமார் சார்...

வாழ்க வளமுடன்,
என்றும்அன்புடன்,
வேலன்.

வேலன். said...

வடுவூர் குமார் கூறியது...
முயற்சித்ததில் நன்றாகவே இருக்கு,ஆனால் கதவு இரண்டாக இருக்க ஒரு ஆப்ஷனும் கண்ணில் படவில்லை.இலவசத்துக்கு இதுவே அதிகம் என்பதால் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.//

நன்றி நண்பரே...வீடு கட்டாமல் விடமாட்டீர்கள் போல் இருக்கு...
வாழ்த்துக்கள்...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

DG கூறியது...
மிகவும் பயனுள்ள பதிவு!
மிக்க நன்றி//

நன்றி நண்பரே...திருப்பூரில் வீடு கட்டிவிடலாம்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

வீரசிங்கம் said...

வேலா உங்கள் பக்கம் எப்போதும் நான் பார்த்து பல பலனை அடைந்து இருக்கிறேன் ஆனல் இன்று தான் பதிவு போடுறேன் மிக அருமையான பதிவு நீங்கள் மேல் மேலும் வளர வாழ்த்க்கள்

வேலன். said...

வீரசிங்கம் கூறியது...
வேலா உங்கள் பக்கம் எப்போதும் நான் பார்த்து பல பலனை அடைந்து இருக்கிறேன் ஆனல் இன்று தான் பதிவு போடுறேன் மிக அருமையான பதிவு நீங்கள் மேல் மேலும் வளர வாழ்த்க்கள்//

தங்கள் கருத்துரை என் மனதை மகிழ்சி
கொள்ள வைக்கின்றது நண்பரே...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாழ்க வளமுடன்,
வேலன்.

Tech Shankar said...

இந்த வார நட்சத்திரம் : வேலன் - vow. Congrats.

Mothiyoci said...

nalla help nanbare... realy i like u r work

வேலன். said...

தமிழ்நெஞ்சம் கூறியது...
இந்த வார நட்சத்திரம் : வேலன் - vow. Congrats.//

போனிலும் - கருத்துரையிலும் வாழ்த்தியமைக்கு நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

chumma கூறியது...
nalla help nanbare... realy i like u r work//

chumma வாக சொல்கின்றீர்களா - chumma சொல்கின்றீர்களா..?

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

ப்ரியமுடன் வசந்த் said...

பெஸ்ட்...!

நல்ல விளக்கங்கள் வேலன் சார்...!

வாழ்த்துக்கள்...!

வேலன். said...

பிரியமுடன்...வசந்த் கூறியது...
பெஸ்ட்...!

நல்ல விளக்கங்கள் வேலன் சார்...!

வாழ்த்துக்கள்...ஃஃ

சார் வசந்த் சார்...உங்கள் கருத்தை இன்றுதான் பார்த்தேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாழ்க வளமுடன்,
வேலன்

Related Posts Plugin for WordPress, Blogger...