வேலன்:-ஆங்கில எழுத்துக்களும் அதை நிறுவும் முறையும்.(Free English Fonts and Install).

நாம் வேர்டில் கடிதங்கள் எழுதுவோம்.

ஆனால் அதிலும் வித்தியசமான

எழுத்துக்களில் எழுதி மற்றவர் மனம்

கவரலாம். இதில் சுமார் 1500 ஆங்கில

எழுத்துருக்கள் உள்ளன. இந்த இலவச

ஆங்கில எழுத்துக்களை டவுண்லோடு

செய்ய இங்கு கிளிக் செய்யவும்

டவுண்லோடு செய்த பாண்ட்களை ஏதாவது

ஒரு டிரைவில் சேமித்துக்கொள்ளவும்.

டவுண்லோடு ஆகும் Fonts உங்களுக்கு

Winrar File ஆக டவுண்லோடு ஆகும்.

இந்த Winrar File -ஐ எப்படி பயன்படுத்துவது

என்று முன்னரே பதிவிட்டுள்ளேன்.

அந்த Fonts எந்த வடிவில் உள்ளது என

அதை ஓப்பன் செய்து பார்த்தால் உங்களுக்கு

தெரியும். பிடித்த Fonts களை தனியே

சேமித்து கொள்ளுங்கள். இதை இரண்டு

வகைகளில் நமது C-Drive -ல் பொருத்தலாம்.

மொத்த Fonts தேர்வு செய்து Copy செய்துகொண்டு

பின் முறையே My Computer/C-Drive/

Open/Windows/Fonts/Paste செய்யவும். நீங்கள்

தேர்வு செய்த Fonts இன்ஸ்டால் ஆகிவிடும்.

மற்றும் ஒரு முறையில் இதை இன்ஸ்டால்

செய்யலாம். Fonts தேர்வு செய்து Copyசெயது

கொள்ளவும்.

பின்னர் Start ரைட் கிளிக் செய்ய உங்களுக்கு

இந்த விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் உள்ள Explore கிளிக் செய்யவும். உங்களுக்கு

மீண்டும் இந்த விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் C-Drive ல் கீழாக உள்ள Windows கிளிக்

செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ

ஓப்பன் ஆகும். அதில் Fonts தேர்வு செய்யவும்.வரும் விண்டோவில் பேஸ்ட் கிளிக் செய்யவும்.

அவ்வளவுதான் நீங்கள் விரும்பிய Fonts

நிறுவி விட்டோம்.

சில Fonts களின் பெயரும் அதனை

கொண்டு எழுதிய எனது பெயரையும்

கீழே கொடுத்துள்ளேன்.xirwena
Velan

Halloween Spider
Velan

Young Star
Velan

Shadowed Germanica
Velan

BN Kuktus
Velan

valentienhearts
VELAN

Bauhaus 93
Velan

Boingo
Velan

Movie times
Velan

Broken toys
Velan

Devils Handshake
Velan

பதிவுகளை பாருங்கள்.
மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
ஆங்கில எழுத்துக்களை இதுவரை பயன்படுத்தியவர்கள்:-
web counter

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

13 comments:

செந்தழல் ரவி said...

எல்லாம் ஒரே மாதிரி தானே இருக்கு ??? இருந்தாலும் உங்கள் முயற்சி நன்று. நிறைய தகவல்களை இது மாதிரி சொல்லுங்க...!!

தமிழ்நெஞ்சம் said...

thanks sir

வேலன். said...

செந்தழல் ரவி கூறியது...
எல்லாம் ஒரே மாதிரி தானே இருக்கு ??? இருந்தாலும் உங்கள் முயற்சி நன்று. நிறைய தகவல்களை இது மாதிரி சொல்லுங்க...!//

நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

தமிழ்நெஞ்சம் கூறியது...
thanks sir//

நன்றி சார்...

வாழ்க வளமுடன்,
வேலன்.

யூர்கன் க்ருகியர்..... said...

விண்டோஸ் ல பாண்ட் இன்ஸ்டால் பண்ணா வித விதமா கணினியில எழுதலாம்.

அதே மாதிரி நம்ம கையெழுத்து வித விதமா அழகழகாய் எழுத நம்ம மூளையில இன்ஸ்டால் பண்ற மாதிரி ஏதாவது ப்ரோக்ராம் இருக்கா ?

தேங்க்ஸ் வேலன் சார் .

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் said...

வேலன் சார்,

நல்ல பதிவு நல்லெழுத்துக்களில் எழுத்துக்களை பற்றி அதிகம் தெரியாதவர்களுக்காக தெரியும் வண்ணம் அழுத்தமாய் ஒரு அழகான பதிவு அனைவருக்கும் புரியும் வண்ணம் கண்கவர் வண்ண விளக்கங்களோடு.

மேலும் ஆயிரத்துஐநூறு எழுத்துருக்கள் இலவசமாய் நலம் பயக்கும் உமது பதிவுகளை தொடர்பவர்களுக்கு.

வளர்க உங்கள் பணி இந்நாள் போல் எந்நாளும்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

டவுசர் பாண்டி. said...

//நம்ம மூளையில இன்ஸ்டால் பண்ற மாதிரி ஏதாவது ப்ரோக்ராம்
இருக்கா?// - யூர்கன் க்ருகியர்..... கூறியது.

யப்பா !! வேலன் அண்ணாதே !!! நம்ப மூளைள ரவ கர்ஸர வெச்சி லேசா ஒரு ரைட்டு கிளிக்கு பண்ணி காப்பி பண்ணு.
( தயு செஞ்சி கட்டு குத்துடாதே ) , அப்பால, நம்ப யூர்கேனு கிட்ட போய், பேஸ்ட்டு , பண்ணி உட்டுடு பா , அவுரு கேட்ட சாப்டு வேரு ரெடி( ? )

போதுமா ? ( ^ _ ^ )

வேலன். said...

யூர்கன் க்ருகியர்..... கூறியது...
விண்டோஸ் ல பாண்ட் இன்ஸ்டால் பண்ணா வித விதமா கணினியில எழுதலாம்.

அதே மாதிரி நம்ம கையெழுத்து வித விதமா அழகழகாய் எழுத நம்ம மூளையில இன்ஸ்டால் பண்ற மாதிரி ஏதாவது ப்ரோக்ராம் இருக்கா ?

தேங்க்ஸ் வேலன் சார் //

இருக்கு ஆனால் தலை வழுக்கையாகி விடும் பரவாயில்லையா?

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
வேலன் சார்,

நல்ல பதிவு நல்லெழுத்துக்களில் எழுத்துக்களை பற்றி அதிகம் தெரியாதவர்களுக்காக தெரியும் வண்ணம் அழுத்தமாய் ஒரு அழகான பதிவு அனைவருக்கும் புரியும் வண்ணம் கண்கவர் வண்ண விளக்கங்களோடு.

மேலும் ஆயிரத்துஐநூறு எழுத்துருக்கள் இலவசமாய் நலம் பயக்கும் உமது பதிவுகளை தொடர்பவர்களுக்கு.

வளர்க உங்கள் பணி இந்நாள் போல் எந்நாளும்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்//

நன்றி முத்துக்குமார் சார்...ஆனால் பதிவுக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லையே...?இதற்கு வரும் வரவேற்பை பார்த்து தமிழ் எழுத்துக்கள் பதிவிடலாம் என நினைத்திருந்தேன்...
ஆனால்...?

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

டவுசர் பாண்டி. கூறியது...
//நம்ம மூளையில இன்ஸ்டால் பண்ற மாதிரி ஏதாவது ப்ரோக்ராம்
இருக்கா?// - யூர்கன் க்ருகியர்..... கூறியது.

யப்பா !! வேலன் அண்ணாதே !!! நம்ப மூளைள ரவ கர்ஸர வெச்சி லேசா ஒரு ரைட்டு கிளிக்கு பண்ணி காப்பி பண்ணு.
( தயு செஞ்சி கட்டு குத்துடாதே ) , அப்பால, நம்ப யூர்கேனு கிட்ட போய், பேஸ்ட்டு , பண்ணி உட்டுடு பா , அவுரு கேட்ட சாப்டு வேரு ரெடி( ? )

போதுமா ? ( ^ _ ^ )//

ஏம்பா நீ வேறே...அவர் நிறைய தலைமுடியுடன் சும்மா ஷீரோ கணக்கா கீராரு...அப்புறம் அவர்தலை வழுக்கையாகறத்துக்கா...?

வாழ்க வளமுடன்,
வேலன்.

யூர்கன் க்ருகியர்..... said...

//யப்பா !! வேலன் அண்ணாதே !!! நம்ப மூளைள ரவ கர்ஸர வெச்சி லேசா ஒரு ரைட்டு கிளிக்கு பண்ணி காப்பி பண்ணு.
( தயு செஞ்சி கட்டு குத்துடாதே ) , அப்பால, நம்ப யூர்கேனு கிட்ட போய், பேஸ்ட்டு , பண்ணி உட்டுடு பா , அவுரு கேட்ட சாப்டு வேரு ரெடி( ? )

போதுமா ? ( ^ _ ^ )//

சிரித்து கண்ணில் தண்ணீர் தளும்பிடுசசி!
:-)

யூர்கன் க்ருகியர்..... said...

//இருக்கு ஆனால் தலை வழுக்கையாகி விடும் பரவாயில்லையா?

வாழ்க வளமுடன்,
வேலன்.
//

பக்க விளைவுகளை பார்த்து பயந்து விட்டதனால் இப்போ இருக்கும் "கோழி கிறுக்கல்" எழுத்துக்களையே தொடர்வதாக முடிவு பண்ணிட்டேன்! :-)

டவுசர் பாண்டி. said...

நல்ல வேல நம்ப கிட்ட வேலன் அண்ணாத்தே வந்து காப்பி பண்ணுறதுக்கு பதிலா
கட்டு குத்துட்டாருப்பா, காலில
இருந்து நம்ப மூளியே வேல செய்ல, எல்லாம் இந்த யூர்கேனால வந்துதுப்பா பிரச்சனை .

வாஜாரே, ரவ கஷ்டம் பாக்காத அதே மேரி, அங்க போய் கட் பண்ணி
நம்ப கிட்ட காப்பி பண்ணி உட்டுடு தாலீவா உனுக்கு புண்ணியமா போவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...