வேலன்:-வேர்டின் வரிகளை அனிமேஷன் செய்ய(Word Animation)

<span title=

பழைய கால்வாய் மூடாதே..! புதிய கால்வாய்


வெட்டாதே..! என ஒரு பழமொழி வழக்கில்

உண்டு. புதியதாக வேர்ட் 2007 வந்தாலும்

முந்தைய வேர்ட் 2003 ல் உள்ள வசதிகள் பல

புதிய வேர்ட் 2007 ல் இல்லை. பழைய

பதிப்பில் உள்ள வசதிகளை இனி வரும்

பதிவுகளில் காணலாம். இது புதியதாக

வேர்ட் உபயோகிப்பவர்களுக்கு மட்டும்.

நாம் வேர்ட்டில் கடிதம் எழுதுவோம். அதில்

வித்தியாசபடுத்தி காண்பிக்க போல்ட்

லெட்டரிலும் - சாய்வு லெட்டரிலும்

வார்த்தைகளை கலர் வேறுபடுத்தியும்

காண்பிப்போம். அதுபோல் இதில் உள்ள

ஆறு வகையான அனிமேஷன் பயன்படுத்தி

நாம் கடிதம் எழுதினால் படிப்பவர் வியந்து

போவார்கள். இனி வேர்டில் அனிமேஷன்

எவ்வாறு செய்வது என பார்க்கலாம்.

முதலில் வேர்டில் நீ்ங்கள் விரும்பிய

கடிதத்தை தயார் செய்து கொள்ளுங்கள்.

அடுத்து நீஙகள் அனிமேஷன் செய்ய வேண்டிய

வார்த்தைகளை - வரிகளை ஷைலைட் செய்து

விட்டு பின் கீழ்கண்டவாறு தேர்ந்தேடுங்கள்.பார்மெட்-பாண்ட் கிளிக் செய்தவுடன் கீழ்கண்ட

விண்டோ ஓப்பன் ஆகும்.


அதில் டெக்ஸ்ட் எபெக்ட்ஸ் தேர்வு செய்யவும்.

உங்களுக்கு அனிமேஷன் காலத்தில் ஆறு அனிமெஷன்

கள் கிடைக்கும்.முதலில் Blinking Backround . நீங்கள்

தேர்வுசெய்த வார்த்தையானது விட்டுவிட்டு ஒளிரும்.

இரண்டாவது எபெக்ட் ஆனது Las vegas Lights. இந்த

எபெக்ட் ஆனது நாம் தேர்ந்தெடுத்த வார்த்தைகளை

சுற்றி வண்ண விளக்குகளால் மின்னும்.

முன்றாவது எபெக்ட் ஆனது Marching Block Ants.

கருப்பு எறும்புகள் தோற்றத்தில் வார்த்தைகளை

சுற்றி வரும்.


இதைப்போலவே நான்காவது எபெக்ட்.Marching Red

Ants. இதில் சிகப்பு எறும்புகள் சுற்றி வரும்.


ஐந்தாவது எபெக்ட் ஆனது Shimmer. இது வார்த்தை

களின் இடையே முறுக்கிய வாறு தோற்றம் கிடைக்கும்.


இறுதியாக Sparkle Text. வார்த்தைகளின் மீது

வண்ண வண்ண துகள்கள் இறைத்ததுபோல்

காட்சியளிக்கும்.

தமிழில் நான் எழுதிய மாதிரி கடிதத்தை கீழே

காணலாம்.


இதில் பயன் படுத்திய எபெக்ட்களை எண்கொடுத்து

பதிவிட்டுள்ளேன். படம் கீழே.நீங்கள் அனுப்பும் இ-மெயில் கடிதத்திலும் இந்த

வசதியை பயன்படுத்தலாம். முதலில் நீங்கள்

கடித்தை வேர்டில் தயாரித்து அந்த வேர்ட்பைலையே

அட்டாச்மெண்ட் மூலம் அனுப்பிவிடலாம். வேர்டை

திறந்து படிப்பவர்களுக்கு அனிமெஷன் தெரியும்.

அதுபோல் வேர்ட் 2007 இந்த வசதியை கொண்டுவரலாம்.

எவ்வாறு என்றால் வேர்ட் 2003-ல் கடிதம் தயாரித்து

அதை வேர்ட் 2007 க்கு காப்பி செய்து பேஸ்ட் செய்யலாம்.

பதிவுகளை பாருங்கள். இன்னும் வேர்டில்

உள்ள பல வசதிகளை இனிவரும்

பதிவுகளில் பார்க்கலாம்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

பின்குறிப்பு:- பாடம் படித்தால் போர் அடிக்கும்.

அதனால் ஒரு சின்ன நகைச்சுவை.

"இங்கு இருந்த கடை எதிரில்

மாற்றப்பட்டுள்ளது. இதை படிக்க

தெரியாதவர்கள் எதிர் கடையில் வந்து

விசாரித்துக்கொள்ளவும்".

வேர்டில் அனிமேஷன் இதுவரை செய்தவர்கள்:-

web counter
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

8 comments:

குடந்தை அன்புமணி said...

நல்ல தகவல் நண்பரே. பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துகள் தொடர்ந்து இதுபோன்ற பதிவு அவசியம்.

யூர்கன் க்ருகியர்..... said...

இந்த மாதிரி வித விதமான எபெக்டுல லவ் லெட்டர் எழுதினா ஓகே ஆகும்னு தோணுது .
பாக்கலாம் !

பை தி பை ... டேங்க்ஸ் வேலன் சார்

வேலன். said...

குடந்தை அன்புமணி கூறியது...
நல்ல தகவல் நண்பரே. பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துகள் தொடர்ந்து இதுபோன்ற பதிவு அவசியம்.//

கருத்துக்கு நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

யூர்கன் க்ருகியர்..... கூறியது...
இந்த மாதிரி வித விதமான எபெக்டுல லவ் லெட்டர் எழுதினா ஓகே ஆகும்னு தோணுது .
பாக்கலாம் !

பை தி பை ... டேங்க்ஸ் வேலன் சார்//

வித்தியாசமாக யோசிக்கின்றீர்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

யூர்கன் க்ருகியர்..... said...

//வித்தியாசமாக யோசிக்கின்றீர்கள்.
//

சிந்தனையை தூண்டும் பதிவு அப்படின்னு சொல்லுவாங்க இல்லையா..அதான் இது !

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் said...

Dear Velan Sir,


\\பழைய கால்வாய் மூடாதே..! புதிய கால்வாய் வெட்டாதே..! என ஒரு பழமொழி வழக்கில உண்டு\\


The proverb is really superb...

I also feel sometime the old software is better than new sowtware.

Because some facility already we found and use it suddenly
that facility will not be

available in new software we feel
bad and sad because we are the looser.

சின்ன நகைச்சுவை.
"இங்கு இருந்த கடை எதிரில்
மாற்றப்பட்டுள்ளது. இதை படிக்க
தெரியாதவர்கள் எதிர் கடையில் வந்து
விசாரித்துக்கொள்ளவும்".

This is small joke its really big joke.

Good posting keep it up.

Best wishes.

Muthu Kumar.N

வேலன். said...

யூர்கன் க்ருகியர்..... கூறியது...
//வித்தியாசமாக யோசிக்கின்றீர்கள்.
//

சிந்தனையை தூண்டும் பதிவு அப்படின்னு சொல்லுவாங்க இல்லையா..அதான் இது //

நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
Dear Velan Sir,


\\பழைய கால்வாய் மூடாதே..! புதிய கால்வாய் வெட்டாதே..! என ஒரு பழமொழி வழக்கில உண்டு\\


The proverb is really superb...

I also feel sometime the old software is better than new sowtware.

Because some facility already we found and use it suddenly
that facility will not be

available in new software we feel
bad and sad because we are the looser.

சின்ன நகைச்சுவை.
"இங்கு இருந்த கடை எதிரில்
மாற்றப்பட்டுள்ளது. இதை படிக்க
தெரியாதவர்கள் எதிர் கடையில் வந்து
விசாரித்துக்கொள்ளவும்".

This is small joke its really big joke.

Good posting keep it up.

Best wishes.

Muthu Kumar.N//

பழமொழியும் நகைச்சுவையும் நன்றாக இருக்கா?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

வாழ்க வளமுடன்,
என்றும் அன்புடன்,
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...