வேலன்:-டாகிங் டைம் கீப்பர்நீங்கள் 2 in 1, 3 in 1 , ஏன் 5 in 1 கூட கேள்விப் பட்டு

இருப்பீர்கள். இது இணையத்தில் உள்ள 7 in 1

அலாரம்.இந்த மென்பொருளானது ஒரு

டெக்ஸ்டாப் டைம் பேக்கேஜ் ஆகும். இது

வேண்டிய நேரத்தில் வேண்டியவர்களின்

குரலில் நேரத்தை அறிவிக்கின்றது.

இதில் தனித்தனியே 7 வசதிகள்

உள்ளது. முதலில் இதை பதிவிறக்க

இங்கு கிளிக் செய்யவும். பின்னர்

கணிணியில் இன்ஸ்டால் செய்யவும்.


நீங்கள் இந்த சாப்ட்வேரை திறந்ததும்

உங்களுக்கு மேலே உள்ள விண்டோ ஓப்பன்

ஆகும். இதில் முதலில் உள்ள து

Preference. இதை கிளிக் செய்ததும் உங்களுக்கு

கீழு் கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.தேவையான விவரங்களை பதிவு செய்யுங்கள்.

அடுத்து உள்ளது Synchronise

உங்களுக்கு அப்போதைய நேரம் கிடைக்கும்.

அடுத்துள்ளது Stop Watch. அதன் படம் கீழே:-நீங்கள் Start கிளிக் செய்தால் உங்களுக்கு

நேரம் ஓட ஆரம்பிக்கும்.அதை நீங்கள்

reset செய்து கொள்ளலாம்.

அடுத்துள்ளது Day & Night . இதில் நிழல்

உள்ள பகுதி இரவு என்றும் வெளிச்சம்

உள்ள பகுதி பகல் என்றும் எடுத்துக்கொள்ள

வேண்டும். கீழே உள்ள படத்தில் பாருங்கள்.

இதில் இந்தியாவில் பூனா வை தேர்வு

செய்துள்ளேன். அங்கு இப்போது இரவு

நேரம்.அங்கு வரும் சூரிய உதய நேரத்தையும்

சூரிய அஸ்தமன நேரத்தையும் கீழே உள்ள

கட்டத்தில் குறிக்கின்றது.


இப்போது இந்தியாவில் பகல்நேரமாக இருக்கும்

நேரத்தில் மற்ற தேசங்களில் எங்கெல்லாம்

இரவாக இருக்கும் என்றும் சுலபமாக அறிந்து

கொள்ளலாம். அதுமட்டும் அல்லாது அங்கு

குறிப்பிட்ட இடத்தை நமது மவுஸால் தேர்வு

செய்தால் அந்த இடத்தில் அடுத்த சூரிய உதய

நேரம் மற்றும் சூரிய அஸ்தமன நேரத்தை

சுலபமாக காணலாம். உங்கள் நண்பர்

வெளிநாட்டில் வசிப்பவராக இருந்தால்

அங்கு இரவா - பகலா என சுலபமாக அறியலாம்.

அடுத்து வருவது உலக நேரம் . இதை தேர்வு

செய்ய கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட

விண்டோ ஓப்பன் ஆகும்.


இதில் உள்ள தேசங்களை வரிசைப்படியோ -

நகரங்கள் வரிசைப்படியோ - நேர வரிசைப்

படியோ தேர்வு செய்யலாம். அதை தேர்வு

செய்து ஓகே கொடுத்தால் உங்களது விண்டோவில்

அந்த தேசம் சேர்ந்துவிடும். கீழே உள்ள படத்தை

பாருங்கள்.


அடுத்துள்ளது காலண்டர். அதை யும் நீங்கள்

செட் செய்யலாம்.


அடுத்துள்ளது அலாரம். இதை நீங்கள் தேர்வு

செய்து Add கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்

கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


இதன் வலப்புறம் மேலே பார்த்தால் உங்களுக்கு

Speak On Alarm Trigger இருக்கும் . அதில் உள்ள

say time only, say date only, say time and date only

என விரும்பியதை தேர்வு செய்யலாம். கீழே

உள்ள படத்தை பாருங்கள்.

தேவையானதை தேர்ந்தேடுங்கள்.

அதைப்போலவே Standard sound -ல்

அவர்கள் பதிவு செய்து வைத்துள்ள ஒலியை

செட் செய்யலாம்.


அதன் கீழே Custom Sound தேர்வு செய்தால் நமது

கணிணியில் உள்ள நமது விருப்ப பாடலை

ஒலி பரப்பலாம்.

இதில் உள்ள அலாரத்தில் சிறப்பு என்ன

வென்றால் நமது விருப்ப படத்தை அலாரம்

அடிக்கும் சமயம் கொண்டு வரலாம்.

இதில் உள்ள Display Picture on alarm tirgger

எதிரில் உள்ள ரேடியோ பட்டனை தேர்வு

செய்யவும். உங்கள் விருப்பமான படத்தை

உங்கள் கணிணியில் இருந்து தேர்வு

செய்யுங்கள். அலுவலகத்தில் புதிதாக

திருமணமானவர்கள் தனது மனைவின்

படத்தை அலாரத்தில் வரும் படமாக

செட் செய்யலாம். அலுவலக நேரம் முடியும்

நேரம் மனைவியின் படம் வந்து நினைவு

படுத்தும். அதைப்போல் திருமணமாகி

சில மாதங்கள் ஆகியிருந்தாலும் மனைவியின்

படத்தை அதைப்போலவே செட் செய்யலாம்.

வீடுக்கு செல்லும் நினைவே வராமல்

ஆபிஸில் தொடர்ந்து வேலை பார்த்துக்கொண்டே

இருக்கலாம்.(கோபப்பட வேண்டாம் -

இதை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளவும்)

அலாரத்தில் நான் செட் செய்த எனது படம் கீழே:-படம் தேர்வு செய்து விட்டீர்களா...இனி

வலப்புறம் பாருங்கள்.Frequency யில் உள்ள

கட்டத்தில் தேவையானதை தேர்ந்தேடுங்கள்.அலாரத்தையும் நேரத்தையும் தேர்வு

செய்யுங்கள்.இறுதியாக ஓ,கே. கொடுங்கள்.

இறுதியாக உள்ள Speak தேர்வு செய்யுங்கள்.

உங்களுக்கு இந்த விண்டோ ஓப்பன் ஆகும்.உங்களுக்கு தேவையான பெயரை தட்டச்சு செய்து

ஓ,கே. கொடுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ

ஓப்பன் ஆகும்.


இதில் உள்ள Start பட்டனை கிளிக் செய்தால்

உங்களுக்கு கீழு் கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் உள்ள Record பட்டனை அழுத்தி உங்களிடம்

உள்ள மைக் மூலம் படத்தில் வரும் சொற்களை

படித்து உங்கள் குரலில் பதிவு செய்யவும்.

உங்கள் குழந்தைகளின் குரலிலும் பதிவு

செய்யலாம். இறுதியாக ஓ.கே. கொடுங்கள்.

குறிப்பிட்ட நேரம் வந்ததும் படம் கணிணியில்

வந்த அப்போதைய நேரத்தை உங்களுக்கு

சொல்லும்.

பதிவை பாருங்கள். பிடித்திருந்தால்

மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

டாகிங் டைம் கீப்பரை இதுவரையில்

பயன் படுத்தியவர்கள்:-
web counter


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

14 comments:

சம்பத் said...

நல்ல பதிவு...பயன்படுத்தி பார்கிறேன்...

வேலன். said...

சம்பத் கூறியது...
நல்ல பதிவு...பயன்படுத்தி பார்கிறேன்..நன்றி சம்பத் அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

யூர்கன் க்ருகியர் said...

அலாரமெல்லாம் அருமையாய் தான் இருக்கிறது.
என்ன ... நம்ம டைம் நல்லா இருக்கணும் !

பகிர்வுக்கு நன்றி வேலன் சார்!

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் said...

Velan Sir,

Nice posting and good information. 7 in 1 its really nice. good information.

Thank you for sharing.

Best Wishes
Muthu Kumar.N

THANGA MANI said...

பயனுள்ள தகவல்.நன்றி.

வீரசிங்கம் said...

வேலா வெற்றி வேலா உங்க பதிவு எப்போதும் superrrrrrrrrrrrrrr

பாலா... said...

சூப்பரா இருக்கு. நன்றிங்க

வேலன். said...

யூர்கன் க்ருகியர் கூறியது...
அலாரமெல்லாம் அருமையாய் தான் இருக்கிறது.
என்ன ... நம்ம டைம் நல்லா இருக்கணும் !

பகிர்வுக்கு நன்றி வேலன் சார்//

உங்கள் டைம் என்றுமே சூப்பர் டைம்தான்...

வாழ்க வளமுடன்,
வேலன்

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
Velan Sir,

Nice posting and good information. 7 in 1 its really nice. good information.

Thank you for sharing.

Best Wishes
Muthu Kumar.N//

நன்றி சார்....

என்றும் அன்புடன்,
வேலன்.

வேலன். said...

THANGA MANI கூறியது...
பயனுள்ள தகவல்.நன்றி.

நன்றி தங்கமணி அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

வீரசிங்கம் கூறியது...
வேலா வெற்றி வேலா உங்க பதிவு எப்போதும் superrrrrrrrrrrrrr


அடி தூள் கிளப்பிவிட்டீர்கள் வீரசிங்கம்
அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

பாலா... கூறியது...
சூப்பரா இருக்கு. நன்றிங்க


நன்றி பாலா அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

rafi said...

velan sir,vanakkam.pentool patri neengal ezhuthiya paadam sariyaaga puriyavillai,thayavu saithu meendum orumurai pentool patri ezhutha mudiyuma.rafi. malaysia. my email id. ravianbu@ymail.com thank u for ur photo paadam.this is very usefull for me. indha karuthurai eppadi thamil-il type saivathu.nandri.

வேலன். said...

rafi கூறியது...
velan sir,vanakkam.pentool patri neengal ezhuthiya paadam sariyaaga puriyavillai,thayavu saithu meendum orumurai pentool patri ezhutha mudiyuma.rafi. malaysia. my email id. ravianbu@ymail.com thank u for ur photo paadam.this is very usefull for me. indha karuthurai eppadi thamil-il type saivathu.nandri.ஃஃ

தமிழில் பதிவிடுவதைப்பற்றி விரிவாக விளக்குகின்றேன் நண்பரே...பென்டூல்பற்றி மீண்டும் படித்துப்பார்க்கவும். வருகைக்கு நன்றி
வாழ்க்வளமுடன்,
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...