கிராமப்புறங்களில் கிணறு தூர் வாருவதை பார்த்திருப்பீர்கள். எப்போதோ கிணற்றில் போட்ட பொருள்கள் ஒவ்வொன்றாக கிடைக்கும்.அதைப்போலவே இந்த சாப்ட்வேரில் நாம் நமது மெமரி கார்ட்,பென்டிரைவ்,ஹாரட்டிரைவ் என அதில் உள்ள அனைத்து தகவல்களையும் -பார்மெட் செய்தபி்ன் சுலபமாக பெறலாம்.இந்த சாப்ட்வேர்ரானது இமெஜ் பைல்,டேடா பைல்,வீடியோ பைல்,மற்றும் ஆடியோ பைல்களை மீட்டுகொடுக்கும்.இந்த சாபட்வேரிலிருந்தும் தகவல்களை பெற முடியாமல் போனால் அவ்வளவுதான்.(சில பென்டிரைவ் மற்றும் மெமரி கார்ட் சர்வீஸ்க்கு கொடுக்கும் முன் இந்த சாப்ட் வேர் மூலம் பரிசோதனை செய்துவிட்டு கொடுப்பது நமக்கு நல்லது) சரி 4 M.P. கொள்ளளவு உள்ள இந்த சாப்ட் வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்து கம்யூட்டரில் இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Select a Drive கிளிக்செய்யுங்கள் உங்களுக்கு கீழ்கணட் விண்டோ ஓப்பன் ஆகும்.
தேவையான டிரைவை தேர்வு செய்து ஒன்றாம் எண்ணை ஒ.கே. கொடுங்கள்.கீழே உள்ள விண்டோ தோன்றும்.உங்களை Confirm செய்ய சொல்லி மெசெஜ் வரும் . யெஸ் கொடுங்கள்.
அவ்வளவுதான் .உங்கள் டிரைவிலிருந்து தகவல்கள் பெற ஆரம்பிக்கும்.
ஸ்கேன் பண்ணி முடிந்ததும் டீப் ஸ்கேன் செய்யவா என கேட்கும் அதற்கும் யெஸ் என பதில் அளியுங்கள்.
அதிலுள்ள ப்ரிவியுவினை பாருங்கள்.நீங்கள் எப்போதோ பார்மெட் செய்த பைல்கள் தெரியும்.
ஸ்கேன் பண்ணி முடித்ததும் வந்துள்ள படங்களை பாருங்கள்.(வெய்யிலுக்கு இதமாக ஐஸ்கிரீம் படங்களை பதிவிட்டுள்ளேன்)
இதில் உள்ள அட்வான்ஸ் ஆப்ஷனை பயன் படுத்தி உங்களுக்கு மீட்டுஎடுத்த தகவல்கள் எங்கு சேமிக்க வேண்டுமோ அங்கு சேமிக்கலாம். அதைப்போல மீட்டு எடுத்த தகவல்களை சிடியாக வேண்டுமானாலும் இந்த சாப்ட்வேர்மூலமே காப்பி செய்து கொள்ளலாம்.பயன்படுத்திப் பாருங்கள்.பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
சரி...நீங்கள் கோபமாக பார்ப்பது புரிகின்றது.என்ன பண்ணறது.என் பசி எனக்கு....!
இன்றைய PSD டிசைன் புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
இதனை பதிவிறக்கம் செய்த இங்கு கிளிக் செய்யவும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
36 comments:
Jolly Photo? or Horror Photo?
:-(
வேலன் சார்,
வழக்கம்போலவே....
அசத்தல் பதிவு...
வலமைபோல நல்ல பதிவு,.. நன்றி வேலன்
எல்லாரிடமும் இருக்க வேண்டிய மிக அவசியமான மென் பொருள் இது.
அருமையான பதிவு நண்பரே.........
அட சூப்பரா இருக்கே நல்ல தகவல் நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
//அட சூப்பரா இருக்கே நல்ல தகவல் நண்பரே,
உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் //
சசிகுமார்.
ரிபீட்
பயனுள்ள அருமையான பதிவு நன்றி சார்.
link வொர்க் ஆகல :(
அருமை நண்பரே.
நல்ல பயனுள்ள விளக்கம்.
“கிராமப்புறங்களில் கிணறு தூர் வாருவதை பார்த்திருப்பீர்கள். எப்போதோ கிணற்றில் போட்ட பொருள்கள் ஒவ்வொன்றாக கிடைக்கும்“
ஒப்புமை மிகவும் நன்றாகவுள்ளது..
C டிரைவில் இருக்கும் டேட்டா வை திரும்ப எடுக்க முடியவில்லை , அவுட்புட் டிரைவை மாற்ற வேண்டும் என்கிறது , அவுட் புட் செட்டிங் எப்படி மா றுவது ?
நன்றி
Jolly Photo? or Horror Photo?
:-(//
ஆந்தைக்கு ஜாலி போட்டோ - குருவிக்கு கடைசி போட்டோ - நமக்கு பரிதாப போட்டோ...தங்கள் வருகைக்கு நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.
DJ.RR.SIMBU.BBA-SINGAI கூறியது...
வேலன் சார்,
வழக்கம்போலவே....
அசத்தல் பதிவு..//
நன்றி சிம்பு சார்..வாழ்க வளமுடன்,வேலன்.
ஆ.ஞானசேகரன் கூறியது...
வலமைபோல நல்ல பதிவு,.. நன்றி வேலன்//
நன்றி ஞான சேகரன் சார்..வாழ்க வளமுடன்,வேலன்.
ஜெய்லானி கூறியது...
எல்லாரிடமும் இருக்க வேண்டிய மிக அவசியமான மென் பொருள் இது//
நன்றி ஜெய்லானி சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாழ்க வளமுடன்,வேலன்.
அசோகன் கூறியது...
அருமையான பதிவு நண்பரே...//
நன்றி அசோகன் சார்..வாழ்க வளமுடன்,வேலன்.
சசிகுமார் கூறியது...
அட சூப்பரா இருக்கே நல்ல தகவல் நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்//
நன்றி சசிகுமார்..தங்கள் வருகைக்கு நன்றி வாழ்க வளமுடன்,வேலன்.
கக்கு - மாணிக்கம் கூறியது...
//அட சூப்பரா இருக்கே நல்ல தகவல் நண்பரே,
உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் //
சசிகுமார்.
ரிபீட்//
ரிபீட்டுக்கு நன்றி மாம்ஸ்...வாழ்க வளமுடன்,வேலன்.
Thomas Ruban கூறியது...
பயனுள்ள அருமையான பதிவு நன்றி சார்//
நன்றி தாமஸ் ரூபன் சார்..வாழ்க வளமுடன்,வேலன்.
rajasurian கூறியது...
link வொர்க் ஆகல :(//
மறுமுறை முயற்சி செய்யுங்கள் நண்பரே..வாழ்க வளமுடன்,வேலன்.
முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
அருமை நண்பரே.
நல்ல பயனுள்ள விளக்கம்.
“கிராமப்புறங்களில் கிணறு தூர் வாருவதை பார்த்திருப்பீர்கள். எப்போதோ கிணற்றில் போட்ட பொருள்கள் ஒவ்வொன்றாக கிடைக்கும்“
ஒப்புமை மிகவும் நன்றாகவுள்ளது..//
தங்கள் பாராட்டுக்கு நன்றி குணசேகரன் சார்..வாழ்க வளமுடன்,வேலன்.
eeasy baby கூறியது...
C டிரைவில் இருக்கும் டேட்டா வை திரும்ப எடுக்க முடியவில்லை , அவுட்புட் டிரைவை மாற்ற வேண்டும் என்கிறது , அவுட் புட் செட்டிங் எப்படி மா றுவது ?
நன்றி//
நான் சி - டிரைவில் முயற்சி செய்துபார்க்கவில்லை நண்பரே..முயற்சிசெய்துபின் தங்களுக்கு தெரிவிக்கின்றேன்.தங்கள் வருகைக்கு நன்றி.வாழ்க வளமுடன்,வேலன்.
பதிவு நல்லாஇருக்குங்க ... தொழில்நுட்பம் சார்ந்து எழுதுவது தனி சிறப்பு
- சென்னைத்தமிழன்
www.egathalam.blogspot.com
இப்போ download ஆயிடுச்சி. நன்றி
very use full thanks for me
இன்றைய வாலிப பசங்களுக்கு ஏற்ற மென்பொருள். நன்றி
அட நீ கிங்கா????????????????????????
சென்னைத்தமிழன் கூறியது...
பதிவு நல்லாஇருக்குங்க ... தொழில்நுட்பம் சார்ந்து எழுதுவது தனி சிறப்பு
- சென்னைத்தமிழன்
www.egathalam.blogspot.com//
முதல் பதிவிலேயே தூள் கிளப்பிட்டீங்க உங்களை விடவா..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...வாழ்க வளமுடன்,வேலன்.
rajasurian கூறியது...
இப்போ download ஆயிடுச்சி. நன்றி//
நன்றி நண்பரே...வாழ்க வளமுடன்,வேலன்.
karthik கூறியது...
very use full thanks for me
ஃ நன்றி கார்த்திக் வாழ்க வளமுடன்,வேலன்.
PalaniWorld கூறியது...
இன்றைய வாலிப பசங்களுக்கு ஏற்ற மென்பொருள். நன்றி
நன்றி பழனிவேர்ல்ட் அவர்களே..வாழ்க வளமுடன்,வேலன்.
பெயரில்லா கூறியது...
அட நீ கிங்கா????????????????????????
அப்படியெல்லாம் ஒன்னும் இல்லைங்கண்ணா..வாழ்க வளமுடன்,வேலன்.
நல்ல பதிவு வாழ்த்துக்கள். ஒவ்வொரு பதிவிலேயும் அசத்துறீங்களே!
velan sir very useful message
மிகவும் அருமை. நன்றி வேலா. உங்கள் பழைய புதிய தகவல்களை தயவுசெய்து எனக்கும் அறியத்தாருங்கள் maradi@live.ca
நல்ல software . அதுபோல சுத்தமாக format செய்தாலும் மீண்டும் எடுக்க முடியாமல் செய்யும் complete delete software ஏதாவது கொடுத்தால் உதவியாக இருக்கும்...
Post a Comment