வேலன்:-வாழ்த்தலாம் வாங்க

வாழ்த்தலாம் வாங்க.





வலைப்பதிவு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
வாழ்த்துவதும் வாழ்த்தினை பெறுவதும் எவ்வளவு ஆனந்தம். நல்ல உள்ளம் கொண்ட முகம் தெரியாத நல்ல உள்ளங்கள் நமக்காக வாழ்த்தும் போது நமது உள்ளம் எவ்வளவு ஆனந்தம் கொள்ளும் தெரியுமா? எனது பிறந்த நாளுக்கு அவ்வாறு வாழ்த்துக்கள் வந்த போது நான் மனமார மகிழ்ந்தேன். அவ்வாறான மகிழ்ச்சியை நமது வலைப்பதிவு நண்பர்கள் அனைவரும் பெறவேண்டாமா..?அதற்காக நான் -நமது பிளாக்காக -இந்த வாழ்த்தலாம் வாங்க பிளாக் vazthalamvanga.blogspot.com ஆரம்பித்துள்ளேன்.

சரி ...இதில் யாரெல்லாம் வாழ்த்தாலாம்.?
நல்ல உள்ளம் உள்ள நாம் அனைவரும் வாழ்த்தலாம்.

சரி...இதில் நாம் எந்த எந்த தகவல்களை பங்கு பெற செய்யலாம்?
உங்கள் பிறந்த நாள் - திருமண நாள் - குழந்தைகளின் பிறந்த நாள் ஆகியவற்றை இதில் பங்கு பெற செய்யலாம்.

நமது தகவல்களை எப்படி அனுப்ப வேண்டும்?
பிறந்த தேதி -திருமண தேதி - குழந்தைகள் பிறந்த தேதி - புகைப்படம் -ஆகியவற்றை குறிப்பிட்ட நாளுக்கு ஒரு வாரம் முன்னதாக கீழ்கண்ட இ - மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.முகவரி:-vazthalamvanga@gmail.com.

இந்த பிளாக்குக்கு யார் பதில் கருத்துரையிடுவது?
அன்றைய பதிவின் ஹீரோ யாரோ அவர்தான் பதில் கருத்துரைகளும் நன்றியும் சொல்லவேண்டும்





சரி...இதில் எனக்கு என்ன லாபம்...
ஒன்றும் இல்லை. ஒரு புது 
முயற்சியாக இதை ஆரம்பித்துள்ளேன்.
இதில் மாற்றங்கள் ஏதாவது செய்ய
வேண்டுமானால் சொல்லுங்கள்.
 கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றது.
எனது இந்த முயற்சிக்கு திருவாளர்கள்:- ந.முத்துக்குமார்,கக்குமாணிக்கம்,
ஜீர்கேன்க்ருக்கியர்,டவுசர்பாண்டி,
தமிழ்நெஞ்சம்,சூரியகண்ணன்
,ஜெய்லானி,சசிகுமார்,ஹாய்
அரும்பாவூர்,நித்தியானந்தம்,
மோகனகிருஷ்ணன்,கரூர்
 தியாகராஜன்.முனைவர்குணசீலன்.,
தங்கமணி,மகாராஜன்,தாமஸ்ரூபன்,
ஞானசேகரன்,சரவணன் சக்திவேல்,
கார்த்திக்,பழனி வேர்ல்ட்,சிவா,நஸீர்,
மஜீத்,முஹம்மதுநியாஸ்மற்றும்
ஜாலீலா,அன்புடன்அருணா.சித்ரா,
மேனகாஸாதிகா,பொன்மலர்,
ப்ரியா,ப்ரியதர்ஷினி.சுமதி.
அலாரவல்லிமற்றும்அடங்காதவன்...
.etc...(பதிவின்நீளம்கருதிபெயர்விடு
பட்டுப்போனவர்கள்அனைவரும்
ஆகியவர்கள்ஒருங்கிணைந்துகை
கொடுப்பார்கள்என்கின்ற நம்பிக்கையுடன்

வாழ்க வளமுடன்,
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

21 comments:

ஹாய் அரும்பாவூர் said...

தொடருங்கள் சார்
வெற்றி நமதே
உங்கள் முயற்சிக்கு
என் சிறு வாழ்த்துக்கள்
கலக்குங்க வேலன்

Chitra said...

குழந்தைகள் விவரம் பற்றி தெரியவில்லை. ஆனால், பதிவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் வழி, நல்ல யோசனை.
நீங்கள், பதிவர்களின் பிறந்த நாள் விவரத்தை முதலிலேயே அந்த ஜிமெயில் க்கு அனுப்பிட விட சொல்லிவிட்டு, கூகிள் காலெண்டரில் போட்டு விட்டால், பார்த்து பிறந்த நாள் அன்று "வாழ்த்தலாம் வாங்க" மூலம் சரியாக வாழ்த்தி விடலாமே. ஒரு வாரத்துக்கு முன் நினைவு வைத்து பதிவர்கள் சொல்ல மறந்து போகலாம். அல்லது, சில பதிவர்கள் தயக்கம் காட்டலாம். விருப்பம் உள்ள பதிவர்கள், அவ்வப்போது விவரம் அனுப்ப உற்சாகப் படுத்துங்கள். Best wishes!

ஆ.ஞானசேகரன் said...

்ம்ம்ம்ம் வாழ்த்துகள் வேலன் நல்ல முயற்சிக்கு வாழ்த்துகள்

Muthu Kumar N said...

வேலன் சார்,

வாழ்த்துகள் உங்கள் புதுமையான முயற்சிக்கு, இந்தத் தளத்திற்கு தனியாக சென்று பார்த்து வாழ்த்து சொல்வதை விட உங்கள்
தளத்திலேயே இன்னுமொரு page சேர்த்து விட்டால் சுலபமாக இருக்கும் அல்லவா, உங்கள் தளத்திற்கு வந்தால் உங்கள் பதிவுகளையும்
பார்த்தார்ப்போலிருக்கும் அதிலேயே இன்னுமோர் வாழ்த்துப் பதிவையும் பார்த்தார்ப் போலிருக்குமல்லவா.


வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

S Maharajan said...

நல்ல முயற்சி வேலன் சார்
வாழ்த்துக்கள்,நிச்சயம் கை கொடும்போம்.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

முயற்சிக்கு வாழ்த்துகள்

அன்புடன் அருணா said...

சிறப்பான எண்ணம்!பூங்கொத்து!

மாதேவி said...

நல்ல செய்தி வாழ்த்துக்கள்.

ஜெய்லானி said...

ஆமாம் சார், சித்ரா சொல்வது போல சில நேரம் மறந்தும் போகலாம் அல்லது பாக்க நேரம் இல்லாமலும் போகலாம். அதேமாதிரி ந.முத்துக்குமார் சொல்வது போல இதிலேயே ஒரு பக்கம் அல்லது சைடில் இனைத்தால் உங்க ப்ளாக் படித்த மாதிரியும் இருக்கும் வாழ்திய மாதிரியும் இருக்கும் என்று நினைக்கிறேன். மற்றவர்களின் கருத்துக்களையும் பார்கலாம்.உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

Ananya Mahadevan said...

புதுமையான முயற்சி.. வாழ்த்துக்கள் வேலன் சார்.
அருமையான யோசனை சித்ரா! இதையே செயல் படுத்தி விடலாமே..

Thomas Ruban said...

அருமையான புதுமையான முயற்சிக்கு வாழ்த்துக்கள் சார்.

பனித்துளி சங்கர் said...

வாழ்த்துக்கள் . முயற்சி சிறப்பாக அமையட்டும் .

Menaga Sathia said...

நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள் சகோ!!

Ahamed irshad said...

வாழ்த்துக்கள்.

balamurugan said...

ROMBA NALLA IRKKU ONGALUDAYA INTHA ARAMPAM

Mohd Niyaz said...

உங்களது புதிய முயற்சி வெற்றி பெற எனது நல் வாழ்த்துக்கள். உங்களது முயற்சி தொடர்ச்சியாக வளரட்டும், மலரட்டும் நண்பர்களின் நட்பு
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்

பொன் மாலை பொழுது said...

வாழ்த்துக்கள் மாப்ள. ஜமாயுங்கள்.

'பரிவை' சே.குமார் said...

நல்ல முயற்சி வேலன் சார்
வாழ்த்துக்கள்,நிச்சயம் கை கொடும்போம்.

நித்தி said...

வாழ்த்துக்கள் வேலன் சார்

sumathi said...

ஹாய் தோழா,

வாழ்த்துக்கள் உங்களின் புதிய முயற்ச்சிக்கு. வெற்றியடையவும் தான்.

முனைவர் இரா.குணசீலன் said...

தேவையான முயற்சி நண்பரே..
அருமை.

வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...