கம்யூட்டருக்கு புதியவர்களாக இருந்தாலும் சரி - தட்டச்சு தெரியாதவர்களானாலும் சரி...அவர்களுக்கு கீ - போர்டில் உள்ள கீ கள் எதற்கு பயன்படும் என தெரியாது. முக்கியமாக தமிழ் தட்டச்சு செய்யும் சமயம் தடுமாறலாம்.ஏன் என்றால் தமிழ் பாண்டில் ஒவ்வொரு கீ கும் ஒவ்வொரு எழுத்துக்களை ஒவ்வொருமுறையில் செட் செய்து வைத்திருப்பார்கள். உதாரணத்திற்கு பாமினிபாண்ட்டில் A என்கின்ற எழுத்தை அழுத்தினால் ய என்கின்ற எழுத்துவரும். ஆனால் வேறு ஒரு தமிழ்பாண்டில் வேறு எழுத்து வரும். இந்த சமயங்களில வரும் குழப்பத்தை தவிர்க்க நாம் ஆன்-கீ போர்ட் உபயோகிக்கலாம்.(இது பற்றி நான் ஏற்கனவே பதிவிட்டுள்ளேன்) இப்போது அதைப்போல் பயன்படும் ஆனால் அதைவிட வித்தியாசமான Character Map என்பதனை எப்படி பயன்படுத்துவது என பார்ககலாம். நீங்கள் வழக்கப்படி Start-Programe-Accessories-System Tool -Character Map என்பதனை தேர்வு செய்யுங்கள். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் உள்ள Font என்பதில் தேர்வு செய்ய உங்கள் கம்யூட்டரில் உள்ள பான்ட்கள் தெரியவரும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள். உங்களுக்கு தேவையான பான்ட் தேர்வு செய்யுங்கள். நான் பாமினி தேர்வு செய்துள்ளேன்.
இப்போது உங்களுக்கு தமிழ எழுத்துக்கள். கட்டங்களில் வரும் .நீங்கள் எந்த எழுத்து வேண்டுமோ அந்த எழுத்தை அழுத்த அது பெரியதாக தெரியும் பின்னர் கீழே உள்ள Select என்பதை கிளிக் செய்யுங்கள்.இவ்வாறு அந்த வாக்கியத்தின் அனைத்து சொற்களையும் தேர்வு செய்யுங்கள். சொற்களை தேர்வு செய்ததும் காபி கிளிக் செய்யுங்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
நான் வாழ்க வளமுடன் என்கின்ற வார்த்தையை தேர்வு செய்துள்ளேன்.
அவ்வளவுதாங்க. இப்போது இந்த வார்த்தையை வேர்ட், எக்ஸெல்,நோட்பேட்,வேரட் பேட் என எங்கு வேண்டுமோ அங்கு சென்று பேஸ்ட் செய்தால் போதுமானது.என்னடா இவன் இதுகூடவா தெரியாது என நீங்கள் நினைப்பது சரி...ஆனால் புதியவர்களுக்கு..? மேலும் அடுதது வரும் பதிவு தமிழ்பாண்ட் பற்றியது. அதற்கு இந்த பதிவு நிச்சயம் உதவும்.
பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
சீக்கிரம் குதிங்கப்பா...அப்புறம் குளிக்கறத்துக்கு தண்ணியில்லாம போகப்போகுது...
இன்றைய PSD டிசைன் புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
17 comments:
பறவை கடல்.......!!! நல்ல போட்டோ.
நன்றி வேலன் சார்
இருக்கிறதிலயே தலைவலி பிடிச்சது இந்த சார்ட் மெப் . இதை பிரிண்ட எடுத்து வைத்து பழகினால் சரியாகி விடும் .
:-))
வாழ்க வளமுடன்
வணக்கம் வேலன் சார்.நல்லதகவல் நன்றி வாழ்த்துகள்.
ஹாய் நண்பா,
அமாம், நானும் இப்போ தான் பார்த்தேன். பரவாயில்லை இது கூட நல்ல ஐடியாவாத் தான் இருக்கு.
START>RUN>charmap
வாழ்க வளமுடன் !
நன்றி சார்
கருத்துரைகள் Tamilil type seivathu eppadi
Chitra கூறியது...
பறவை கடல்.......!!! நல்ல போட்டோ.//
நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்,
வேலன்.
mahaboob கூறியது...
நன்றி வேலன் சார்//
நன்றி மஹாபூப் சார்..
வாழ்க வளமுடன்,
வேலன்.
ஜெய்லானி கூறியது...
இருக்கிறதிலயே தலைவலி பிடிச்சது இந்த சார்ட் மெப் . இதை பிரிண்ட எடுத்து வைத்து பழகினால் சரியாகி விடும் .
:-))//
உண்மைதான் சார்...ஆனால் புதியவர்கள் என்ன செய்வார்கள் பாவம். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ந்ன்றி.
வாழ்க வளமுடன:,
வேலன்.
கக்கு - மாணிக்கம் கூறியது...
வாழ்க வளமுடன்//
வாழ்க வளத்துடன்.
வேலன்.
மச்சவல்லவன் கூறியது...
வணக்கம் வேலன் சார்.நல்லதகவல் நன்றி வாழ்த்துகள்.//
நன்றி மச்சவல்லவன்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
சுமதி கூறியது...
ஹாய் நண்பா,
அமாம், நானும் இப்போ தான் பார்த்தேன். பரவாயில்லை இது கூட நல்ல ஐடியாவாத் தான் இருக்கு.//
நண்பா...மெயில் அனுப்பிஉள்ளேன் .பார்க்கவும். வாழ்க வளமுடன்.
வேலன்.
தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை கூறியது...
START>RUN>charmap
வாழ்க வளமுடன் !//
நன்றி நண்பரே...
வாழ்க வளத்துடன்.
வேலன்.
Mohi கூறியது...
நன்றி சார்
கருத்துரைகள் Tamilil type seivathu eppadi//
நன்றி மோகி சார்..வாழ்கவளமுடன்.
வேலன்.
கக்கு - மாணிக்கம் கூறியது... வாழ்க வளமுடன்// வாழ்க வளத்துடன். வேலன்.
Post a Comment