வேலன்:-Excell -எக்ஸெல்லில் சுலபமாக பிரிண்ட் எடுப்பது எப்படி?


எக்ஸெல்லில் பிரிண்ட் எடுப்பது தனிக்கலை. புதியவர்கள். அதைப்பற்றி இன்று தெரிந்துகொள்ளலாம்.எக்ஸெல்லில் தேவையான பகுதியை தட்டச்சு செய்துகொள்ளுங்கள். இனி அதை பிரிண்ட் எப்படி எடுப்பது என பார்க்கலாம்.நீங்கள் பிரிண்ட் செய்யும் எக்ஸெல் டாக்குமெண்ட்டின் ரோ அதிகமாக இருந்து காலம் குறைவாக இருந்தால் அதை நாம் பேப்பரில் Portrait-லும்(நீள வாட்டத்திலும்) காலம் அதிகமாக இருந்து ரோ குறைவாக இருந்தால் அதனை Landscape-லும்(குறுக்கு வாட்டத்திலும்) பிரிண்ட் செய்தால் அழகாக இருக்கும். நீங்கள் பிரிண்ட் செய்யும் முன் Page Setup  கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.  
அதில் முதலில உள்ள Orientation ல் முன்பு சொன்னபடி Portrait or Lanscape அதில் எது தேவையோ அந்த தேவையானதை தேர்வு செய்யுங்கள்.Scaling என்பதில் Adjust to உள்ள அளவில் எந்த அளவுக்கு தேவையோ அந்த அளவிற்கான % (சதவீதம்) தேர்வு செய்யுங்கள்.சதவீத அளவை கூட்டுவது - குறைப்பது மூலம் எழுத்துக்களின் அளவில் மாற்றம் வரும்.Page Size ல் உங்கள் பேப்பரின் அளவினை தேர்வு செய்யுங்கள்..கடைசியாக ஓ.கே. தாருங்கள்.இப்போது இரண்டாவது டேபை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். .
Margins என்பதில் மேலே கீழே -இடது பக்கம் வலது பக்கம் என வேண்டிய அளவினை கொடுங்கள். பிரிண்ட டானது பேப்பரின் மையத்தில்(Center on Page) வர இதில் உள்ள Horzontaly -Vertically எதிரில் உள்ள கட்டத்தில டிக் அடையாளம் செய்து  ஒ.கே.தாருங்கள்
இப்போது மூன்றாவதாக உள்ள Header/Footer  என்பதை கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் பிரிண்ட் செய்யும் பக்கத்தின் மேலே அல்லது கீழே வேண்டிய வார்த்தைகளை சேர்க்கலாம். நமது விருப்பபடியும் வார்த்தைகளை-தேதியை நேரத்தை- கொண்டுவரலாம்.
கடைசியாக Sheet Tap –ஐ தேர்வு செய்யுங்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்..

இதில் முதலில் உள்ள Print Area காலத்தில் எந்த காலத்தில இருந்து எந்த காலம் வரை என குறிப்பிடுங்கள். உதாரணத்திற்கு நீங்கள் Al லிருந்து k8 வரை உள்ள கட்டங்களை பிரிண்ட் எடுக்க விரும்பினால் a1:k8 என   குறிப்பிடுங்கள். அதைப்போலவே
பிரிண்ட டைட்டில் எந்த ரோவின் இடையில் எந்த காலத்தின் இடையில் வரவேண்டுமோ அந்த இடத்தை கீழே உள்ள பிரிண்ட் டைடில்லில் குறிப்பிடுங்கள். அதைப்போலவே உங்களுக்கு பிரிண்ட்டானது கோடுகளுடன் வரவேண்டுமா ? கோடு இல்லாமல் வரவேண்டுமோ என்பதை கீழே உள்ள பிரிண்ட் காலத்தின் கீழே உள்ள Gridness கிரிண்ட் என்பதில் எதிரில் உள்ள பட்டனில் கிளிக்செய்யுங்கள். இறுதியாக பிரிண்ட் ப்ரிவியு பார்த்து ஓ.கே. தாருங்கள்
பயன்படுத்திப்பாருங்கள். கருத்தினை கூறுங்கள.
 வாழ்க வளமுடன்,
வேலன்.



பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

10 comments:

ஹாய் அரும்பாவூர் said...

ms office பற்றி தேவையான் நேரத்தில் எனக்கு உங்கள் இந்த டிப்ஸ் உதவியது
மிக்க நன்றி வேலன் அவர்களே

தொடரட்டும் உங்கள் சேவை

வேலன். said...

ஹாய் அரும்பாவூர் கூறியது...
ms office பற்றி தேவையான் நேரத்தில் எனக்கு உங்கள் இந்த டிப்ஸ் உதவியது
மிக்க நன்றி வேலன் அவர்களே

தொடரட்டும் உங்கள் சேவை//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அரும்பாவூர் அவர்களே...வாழ்க வளமுடன்,வேலன்.

மாணவன் said...

வேலன் சார்,

வழக்கம்போலவே பயனுள்ள பதிவை பதிவிட்டு அசத்திவிட்டீர்கள்...

தலைப்பில் பிரிண்ட் என்பதற்க்கு பதிலாக பிரண்ட் என்று உள்ளது முடிந்தால் அதை சரிசெய்யவும்...

வேலன். said...

DJ.RR.SIMBU.BBA-SINGAI கூறியது...
வேலன் சார்,

வழக்கம்போலவே பயனுள்ள பதிவை பதிவிட்டு அசத்திவிட்டீர்கள்...

தலைப்பில் பிரிண்ட் என்பதற்க்கு பதிலாக பிரண்ட் என்று உள்ளது முடிந்தால் அதை சரிசெய்யவும்...//

நன்றி சிம்பு சார். தங்கள் வருகைக்கும் தவறை சுட்டிகாட்டியமைக்கும். தவறை சரிசெய்துவிட்டேன். நன்றி ்.வாழ்க வளமுடன்,வேலன்.

Anonymous said...

ஹலோ வேலன் சார்,
இந்த நல்ல பதிவு. ஆனால் எனக்கு வேறு ஒரு பதிவு பற்றி கேட்க வேண்டும். போட்டோகளில் கல்யாண ஆல்பம் டிசைன் செய்ய எழுதி இருந்தேர்கள் (மார்ச் பதிவு) நன்றாக இருந்தது.ஆனால் 10 போட்டோ எடுத்தப்பொழுது போய்விட்டது. திருப்பி டவுன்லோடு செய்து பார்த்தேன் வரவில்லை. எப்படி டவுன்லோடு செய்வது அல்லது இதுபோல்வேறு டிசைன் செய்ய சாப்ட்வேர் உண்டுமா! சொல்லுங்கள்.

பொன் மாலை பொழுது said...

நல்ல பதிவு, புதியவர்களுக்கு Excell லில் பிரிண்ட் எடுப்பது தன் தலையை தானே தின்னும் வேலைதான்.
நான் நிறைய முன்னர் தின்னுருகிறேன். இதனை பதிவாக போட்ட நம்ம மாப்ஸ் வாழ்க வளமுடன்.

வேலன். said...

பெயரில்லா கூறியது...
ஹலோ வேலன் சார்,
இந்த நல்ல பதிவு. ஆனால் எனக்கு வேறு ஒரு பதிவு பற்றி கேட்க வேண்டும். போட்டோகளில் கல்யாண ஆல்பம் டிசைன் செய்ய எழுதி இருந்தேர்கள் (மார்ச் பதிவு) நன்றாக இருந்தது.ஆனால் 10 போட்டோ எடுத்தப்பொழுது போய்விட்டது. திருப்பி டவுன்லோடு செய்து பார்த்தேன் வரவில்லை. எப்படி டவுன்லோடு செய்வது அல்லது இதுபோல்வேறு டிசைன் செய்ய சாப்ட்வேர் உண்டுமா! சொல்லுங்கள்.//
டவுண்லோடு செய்வதில் பிரச்சனையா - அல்லது உபயோகிப்பதில் பிரச்சனையா.? மீண்டும் ஒரு முறை டவுண்லோடு செய்துபார்க்கவும்.வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
நல்ல பதிவு, புதியவர்களுக்கு Excell லில் பிரிண்ட் எடுப்பது தன் தலையை தானே தின்னும் வேலைதான்.
நான் நிறைய முன்னர் தின்னுருகிறேன். இதனை பதிவாக போட்ட நம்ம மாப்ஸ் வாழ்க வளமுடன்.//

தங்கள் வருகைக்கும் கருத்துகு்கும் நன்றி மாம்ஸ்...வாழ்க வளமுடன்,வேலன்.

cheena (சீனா) said...

அன்பின் வேலன்

தகவலுக்கு நன்றி - புதியவர்கள் பலருக்கும் இது ஒரு பயனுள்ள தகவல் - பயன படுத்தப் பழகட்டும்.

நல்வாழ்த்துகள் வேலன்
நட்புடன் சீனா

வேலன். said...

cheena (சீனா) கூறியது...
அன்பின் வேலன்

தகவலுக்கு நன்றி - புதியவர்கள் பலருக்கும் இது ஒரு பயனுள்ள தகவல் - பயன படுத்தப் பழகட்டும்.

நல்வாழ்த்துகள் வேலன்
நட்புடன் சீனா//

நன்றி சீனா சார். நீண்டகாலத்திற்கு பின்னர்வந்துள்ளீரகள்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...