வேலன்-போட்டோமேஜிக்.

சூ...மந்திரகாளி...வா..இந்தப்பக்கம்...வந்தேன்...மந்திரவாதி இவ்வாறு சொல்வதை கேட்டிருப்பீர்கள். அதைப்போல நாம் நமது புகைப்படங்களை சூ...மந்திரகாளி என சொல்லி நொடியில் வேண்டிய அளவிற்கு மாற்றிவிடலாம். தனிதனி புகைப்படமாகவோ-போல்டரில் உள்ள அனைத்து புகைப்படங்களையுமோ நாம் எளிதில் மாற்றிவிடலாம். 2 எம்பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய நீங்கள் இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்து கிளிக செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட் விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள இன்புட் போல்டரில் உங்கள் புகைப்படம் இருக்கும் இடத்தை தேர்வு செய்யவும். அதைப்போலவே மாற்றிய புகைபடம் வரவேண்டிய போல்டரையும் தேர்வு செய்யவும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதல் உள்ள Select a Profile கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தோன்றும். அதில உங்களுக்கு தேவையான அளவினை தேர்வு செய்துகொள்ளுங்கள்.
மேலும் இதில் Common Setting.Options என இரண்டு டேப்புகள் உள்ளது தேவையான அளவினை தேர்வு செய்துகொள்ளுங்கள்.இதில் உடனடி மாற்றம் கொண்டுவருவதற்கும் வசதிஉள்ளது.இதில் உள்ள Quick Convert Mode தேர்வு செய்தால் உங்களுக்கு மேஜிக் நிபுணர் தலையில் உள்ள தொப்பி படம் கிடைக்கும். இதில் நாம் அவுட்புட்போல்டரை தேர்வு செய்தபின்னர் புகைப்படத்தை இதில் இழுத்துவந்து போட்டுவிடவேண்டும்.சில நொடியில் நமக்கு தேவையான படம் ரெடி.

சுலபமாக -விரைவாக எளிமையாக உள்ளதை நீங்கள் பயன்படுத்தும்போது அறிந்துகொள்வீர்கள.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

4 comments:

மாணவன் said...

வணக்கம் வேலன் சார் மென்பொருள் பகிர்வுக்கு மிக்க நன்றி சார் :)

சே.குமார் said...

பகிர்வுக்கு நன்றி.

krish2rudh said...

வேலன் ஐயா!
உங்களோட எல்லா பதிவும் படிச்சிட்டேன் அருமை. பின்னூட்டம் மட்டும் இடவில்லை. அதனால உங்களுக்கு தெரியவில்லை.
எங்க ஊர் பக்கம் சில கோவில்களின் விவரங்கள் இந்த ப்ளாக் உள்ளது.
http://remoteoldtemples.blogspot.com

சமுத்ரா said...

பகிர்வுக்கு நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...